இடுகைகள்

செப்டம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாயபு வீட்டு சரித்திரம் - 23

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><><> தேவையை தருவாய் தேவதையே... பகிரங்கமாய் ஒரு ரகசியம் சாயபு வீட்டு சரித்திரம் - 23 தேவையை தருவாய் தேவதையே... Posted: 27 Sep 2009 08:20 AM PDT முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆக, இந்த தேவதை, இறையின் தூதாக கொண்டு பதில் தருகிறேன். ஏகாந்த தனிமையில், மொட்டை மாடியில், கவலையோடு அமர்ந்திருந்தேன்... வழக்கமான என் பொழுதுபோக்கான நட்சத்திர ஆராய்ச்சி கூட செய்யவில்லை... ஆனால், இரண்டு நட்சத்திரங்கள் என்னை பார்த்து கண்சிமிட்டின. கொஞ்சம் கொஞ்சமாக அவை அருகில் வர, எங்கிருந்து, அதன் பின்னால், இரண்டு நிலாக்கள் முளைத்தன? அட, இறக்கைகள்... கண்ணை மூடி திறந்தபோது தெரிந்தது, நவாஸும், சதீஷும் என்னிடம் அனுப்பியிருப்பது... ஆசைக்கா பஞ்சம்...என் கவலைக்கு காரணமே அதானே??? இதோ என் வேண்டுகோள்களின் பட்டியல்! 1.எல்லா அசைன்மெண்ட்டுகள் மற்றும் ரெகார்டுகளும் தானாக எழுதப்பட்டு விட வேண்டும். 2.பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்சை எழுதி விட வேண்டும். 3.சிஸ்டம் முன்பாக உட்காரும் தேவை

மற்றுமொரு மாயை

படம்
எண்ணங்களில் க‌ண்டு ம‌கிழ்ந்து தேன்மொழிக‌ள் உண்டு களித்து தேடுத‌லில் தீண்டி உணர்ந்து காடு, க‌ட‌ல், ம‌லை க‌ட‌ந்து காற்றில் வ‌ரும் அவ‌ள் சுவாச‌ம் நுக‌ர்ந்து ர‌க‌சியமாய் அக‌ம‌கிழ்ந்து சுழலும் கிரகம் சுற்றித் திரிந்து அவளை தேடி, நானும் தொலைந்து வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!! இதோ, மதி மயக்கி எனக்குள் புகுந்து ஆழ்மனதினுள்ளே கசிந்து ஆளுகையில் எனை கொணர்ந்து மகுடம் சூடி 'அவள்' செய்த‌‌ ‌ம‌ற்றுமொரு மாயையிது!!

பத்து ஆசைகளை

1.வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான். 2.எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும். 3.மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும். 4.புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும். 5.தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும். 6.கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும். 7.வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்ப

வாழ்வின் இனிமை

படம்
’என்’ எழுத்து இகழேல் வாழ்வின் இனிமை Posted: 25 Sep 2009 09:53 AM PDT பாசமலர் பூவிலே, பனிபடர்ந்த மலையிலே, நேசம் கொண்ட உறவிலே, நாளும் உந்தன் நினைப்பிலே! பச்சைக் கிளியின் மொழியிலே, கூவும் குயிலின் ஒளியிலே, இச்சை கொண்ட பார்வையே, யாவும் யாவும் இனிமையே! அன்பன் உந்தன் முகத்திலே, வழியும் அந்த எழிலையே, மிச்சம் மீதி இல்லாமல், ரசிக்க மனது இனிக்குதே! கண்ணா உந்தன் குரலுமே, கவிதையாக தெரியுதே! மின்னல் போன்ற சிரிப்பென்னை பித்துப் பிடிக்க வைக்குதே! நெஞ்சில் சாய கனவுகள், மேலே மேலே போகுதே! பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பற்றிக் கொள்ளப் போகுதே! நீயும் நானும் ஒன்னுதான் பூவும் மலரும் ஒன்னுதான்! வாழ்வின் இனிமை காதல் தான் வாழ்ந்து காட்டி ஜெயிப்பமே!! -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now . Email delivery powered by Google Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

EID MUBARAK

Hello Asai Nayagi , Abu Ismail has sent you a MuslimBridges eCard. Click on the following link to view your E-Card: http://www.muslimbridges.org/index.php?option=com_rwcards&Itemid=0&sessionId=77b88288ebae7b17b7c8610a48c40dd1&id=8465&task=viewCard&read=1&sendmail=1 ----------------------------------- http://www.muslimbridges.org/

ஓடும் எழுத்துக்கள்

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><><> ஓடும் எழுத்துக்கள் Posted: 20 Sep 2009 10:10 PM PDT ஓடும் எழுத்துக்களை சில இடங்களில் பார்த்திருப்பீர்கள். அது போல நம் ப்ளாகிலும் இருந்தால், நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டிருப்பீர்கள். HTML தெரிந்தவர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும், பலருக்கும் இது புரியாத புதிர் தான்! நிறைய பேர் என்னிடம் மெயில் மூலமாக இது குறித்து கேட்டிருக்கிறார்கள். நானும் சொல்லியிருக்கிறேன். இதோ, இதை சுலபமாக உருவாக்கலாம்... இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் இதை எப்படி உருவாக்குவது? இதோ இப்படித்தான், <marquee>இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் </marquee> இந்த கோடிங்கை காப்பி செய்து, Add a gadget -- HTML/Javascript ல் போயோ, அல்லது போஸ்டிங்குக்கு இடையிலோ பேஸ்ட் செய்தால், போதும்! இனி, கீழே காண்பது போல வர வேண்டுமென்றால், ஈத் முபாரக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடிங்கை உபயோகியுங்கள்... <font face="courier" color="blue" size="4"><marquee behavior="ALTERNATE&quo

ஈத் முபாரக்

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><><> காதல் கூக்குரல்! Posted: 19 Sep 2009 09:38 AM PDT ஈத் முபாரக் என்று நாவினிக்க சொல்லும் இவ்வேளையில், ஆயிரக்கணக்கான சகோதரர்கள், இந்த இனிய நாளில், தம் ஊரை, உறவை பிரிந்து, அயல்நாட்டில் தனிமையில் பெருநாள் கொண்டாடுகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஊமையாய் எழும் தவிப்புகள் என்னவென்று அவர்களைப் போன்று அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுக்கு இந்த கவிதை மொழிபெயர்ப்பை காணிக்கையாக்குகிறேன். A Lover's Call XXVII காதல் கூக்குரல்! - 27 Where are you, my beloved? Are you in that little Paradise, watering the flowers who look upon you As infants look upon the breast of their mothers? அன்பே நீ எங்கே இருக்கிறாய்? பண்பாய் பச்சை குழந்தைகள் தமது தாயின் முலையை பார்ப்பது போல, ஓயாமல் உன்னை பார்க்கும் அந்த சுவனத்தின் அழகிய புஷ்பங்களுக்கு கவனமாய் நீரை ஊற்றுகிறாயா?? Or are you in your chamber where the shrine of Virtue has been placed in your honor, and upon Which you offer my heart and soul as sacr

குழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><><> குழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு... Posted: 13 Sep 2009 07:21 AM PDT உள்ளத்திலே ஒரு கவலையில்லாமல் உறங்கிடு ஆரிராரோ! - கண்ணே செல்லத்துடன் உன்னை கொஞ்சிடுவோமே! ஆரோ ஆரிராரோ! ஆரோ ஆரிராரோ! பாசத்தின் முன்னே மரகதங்கூட மதிப்பு தெரிவதுண்டோ? பாசத்தின் முன்னே மரகதங்கூட மதிப்பு தெரிவதுண்டோ? நேசத்தின் செயலால் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ?! மாற்றம் காண்பதுண்டோ?! (உள்ளத்திலே) கால்களினாலே வெண்மதிபோலே தவழ்ந்து வர வேண்டும்! கால்களினாலே வெண்மதிபோலே தவழ்ந்து வர வேண்டும்! உந்தன் புன்சிரிப்பாலே மலர்களைப் போலே காட்சி தரவேண்டும்! காட்சி தர வேண்டும்! (உள்ளத்திலே) கானக்குயில் போல மழலை மொழி பேசி என்றும் உறவாடுவாய்! கானக்குயில் போல மழலை மொழி பேசி என்றும் உறவாடுவாய்! உயர் பாசம் பெரிதென்று வாழும் நல்வாழ்வில் அன்பு வழி கூறுவாய்! அன்பு வழி கூறுவாய்! (உள்ளத்திலே) -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குற

சாயபு வீட்டு சரித்திரம் - 22

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><><> சாயபு வீட்டு சரித்திரம் - 22 Posted: 10 Sep 2009 11:15 AM PDT (உலவும் மனிதர்களின் உண்மை கதை) "சின்னஞ்சிறிய வயதினிலே, மின்னல் போல புன்னகைகள்! கன்னல் சாறின் இனிமைபோல், எண்ணத்தூண்டும் பருவங்கள்!!" காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வேகமாக சுழல்கிறது. நல்லது நடக்க வேண்டிய நேரத்தில் தானாக நல்லது நடக்கிறது. கெட்டது நடக்க வேண்டிய நேரத்தில், கெட்டது சொல்லாமல் வருகிறது. மர்ஜியா, ஆபிதா, பாஜிலா மூன்று பேரும் நல்ல விதமாகவே வளர்ந்தார்கள். தாய் இல்லாத குறை தெரியாமல், பாத்திமா ஒரு நல்ல தாயாக பிள்ளைகளை கண்ணுக்குள் போற்றி வளர்த்தார். எல்லாரும் ஓரளவுக்கு வளர்ந்து விட்டார்கள். சைதாவின் மகள் சுஹைனாவும், மர்ஜியாவும் ரொம்பவும் நெருக்கமான தோழிகள். இருவருக்கும் ஏகப்பட்ட வயது வித்தியாசம் இருந்தாலும், நல்ல நட்புக்கு வயது ஒரு தடையில்லையே! மூவரும் குணத்தால், தங்க கட்டிகள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், மர்ஜியா எப்பவும், வாயில் சிரிப்பு தான் அவங்கம்மாவைப் போலவே... ஆப்பிக்கு எப்போதும் படிப்பு, படிப்பு த

நீ வாடும் போது...

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><><><><><><> நீ வாடும் போது... Posted: 08 Sep 2009 07:36 AM PDT நீ வாடும் போது மருந்தாவேன், நீ கூடும் போது விருந்தாவேன், நீ தேடும் போது விளக்காவேன் நீ பாடும் போது சுதியாவேன்! வாசமுல்லைப் பூவாவேன், வைரமணிச் சுடராவேன், பேசும் பொம்மை போலாவேன்! பைத்தியம்போல் காதல்கொள்வேன்!! லைலாவைத் தேடிய மஜ்னு அங்கே, மஜ்னுவை நாடும் லைலா இங்கே, காணும் பொருளில் ஆசைமுகம், தூணும் துரும்பும் அவனுருவம்! வசந்த காலக் கனவுகளில் வந்தவன் எந்தன் மன்னவனே! கசிந்து உருகி காதலிக்கும் மங்கையின் மனதை யாரறிவார்? பாதச் சுவட்டில் உந்தன்முகம், பச்சை மரத்தில் உந்தன்நிறம்! காதல் கொண்ட மஜ்னுவுக்கு கண்டது எல்லாம் லைலாவாம்! நீ வாடும் போது மருந்தாவேன், நீ கூடும் போது விருந்தாவேன்! நீ தேடும் இன்பத் தேவதையாய், கை போடும் போது அணைத்திடுவேன்!! -சுமஜ்லா . . ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these e

உங்க கமெண்ட் தனித்து தெரிய

படம்
உங்க கமெண்ட் தனித்து தெரிய Posted: 06 Sep 2009 04:24 AM PDT ஒரு சிலருடைய ப்ளாகில் நீங்கள் இதை கவனித்து இருக்கலாம். அதில் பதிவரின் கமெண்ட் மட்டும் தனித்து தனி கலரில் தெரியும்! அதை நீங்களும் உங்கள் ப்ளாகில் சுலபமாக வர செய்யலாம். மேலே படியுங்கள். இந்த வசதி, தனி விண்டோவில் கமெண்ட் தெரியும் போது தெரியாது. ஆனால், 'embeded below post' ஆப்ஷன் கொடுத்திருந்தால் தெரியும். இதை செய்ய, Dashboard – Lay Out – Edit html போய், Expand widgets என்பதை க்ளிக் செய்யுங்கள். பொதுவாக, நம் ப்ளாகின் html code ல் கை வைக்கும் முன்பாக அதை பேக் அப் எடுத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் என்றால், html code முழுவதுமாக Copy செய்து ஒரு நோட் பேடில் Paste பண்ணி, Save செய்து கொள்ள வேண்டும். நம்மை அறியாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், நம் டெம்ப்ளேட்டை சரி செய்ய, இந்த பேக் அப்பை உபயோகித்துக் கொள்ளலாம். இப்போ, பேக் அப் எடுத்து வைத்து கொண்டீர்களா? இனி, கீழ் காணும் கோடை தேடுங்கள். <dd class='comment-body'><b:if cond='data:comment.isDeleted'><span class='deleted-comment'

அழகின் எழில்

படம்
அழகின் எழில் Posted: 05 Sep 2009 10:55 AM PDT கண்ணுக்கு விழியழகு ................கருவிழிக்கு மையழகு! மண்ணுக்கு மழையழகு ................மழைதந்த முகிழலகு!! பண்ணோடு சுதி சேர்ந்து ................எழிலூட்டும் அற்புதம் போல் விண்ணுக்கு நிலவழகு ................நீள்வானின் ஒளியழகு!! நெஞ்சத்தில் அன்பேற்றும் ................எண்ணத்தின் நிறையழகு! மஞ்சத்தில் மலரழகு ................மையல் கூட்டும் மணமழகு!! கொஞ்சம் தேன் குடித்தாடும் ................கோலத்தின் குறும்பழகு! தஞ்சமென தலைமகனைத் ................தழுவிநிற்கும் சுகமழகு!! என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!

உங்க ப்ளாக் பேர் என்னங்க?

படம்
உங்க ப்ளாக் பேர் என்னங்க? Posted: 04 Sep 2009 07:05 AM PDT சில ப்ளாகின் பெயர்கள் பச்சக் என்று மனதில் வந்து ஒட்டி கொள்கிறது. சிலது ரொம்பவும் சண்டிதனம் செய்கிறது. சிலதோ, நினைவில் இருந்தாலும், ஸ்பெல்லிங் மறந்து விடுகிறது. பொறுமையா இந்த இடுகையை படிச்சு பாருங்க. ஃபாலோ பண்ணினா கண்டிப்பா மறக்க மாட்டோம், மறந்தாலும் எடுத்துக்கலாம். ஆனா, எனக்கு சில சமயம் ரீடரை ஓப்பன் செய்ய சோம்பலாக இருக்கும். ரீடரில் படித்தால் ஈஸி தான், ஆனா, நல்ல இடுகைக்கு பின்னூட்டம் இட, நாம அவங்க ப்ளாகுக்கு தான் போகணும்.அதனால், நேரடியாவே போயிடுவேன். இதுல ஒரு சின்ன பிரச்சினை என்னன்னா, பின்னூட்டத்துக்கு ப்ளாக் ஆத்தர் தரும் பதில்! பலரும் ரொம்ப சின்சியரா பதில் தருவாங்க; ஒரு சிலர், மொத்தமாக சேர்த்து ஒரே பதில், நான் கூட சில சமயம் அப்படித்தான். ஒரு சிலர் பதிலே தர மாட்டாங்க. இதெல்லாம் பிரச்சினை இல்லை. ஆனா, பின்னூட்டம் இட்ட எத்துணை பேர்,மீண்டும் வந்து, ஆத்தர் அதுக்கு பதில் தந்திருக்காரானு பார்க்கிறாங்க??? நான் சில சமயம் பார்ப்பேன், பல சமயம் பார்ப்பதில்லை - பார்க்க ஆசை தான், ஆனா ப்ளாக் பேர் மறந்து போயிரும். ஃபாலோ அப் மெயில்