இடுகைகள்

ஜூன் 25, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 18 Posted: 24 Jun 2010 07:01 AM PDT உமரின் கால்கள் திசை மாறியது! தங்கையை மனது வசை பாடியது!! கண்களில் தீப்பொறி பறந்தது! கருத்ததில் மதவெறி சூழ்ந்தது!! ஏகினார் தங்கையில்லம் மிதந்து வந்தது இனிய நாதம்! செவிகளில் பாய்ந்ததை காது தாழ்த்திக் கேட்கிறார் - பின், பொறுமையிழந்து, தாழிடப்பட்ட கதவைத் தட்டுகிறார். திறந்த தங்கையை கண்டபடி திட்டுகிறார். தம் தங்கையை நோக்கி, "ஏ, பாத்திமா.... நீவிர் என்ன பாடினீர் சொல்லும்...!" என்று வினவுகிறார். ஒன்றுமில்லை என்று பயத்துடன் தங்கை பதிலளிக்க, ஆத்திரத்துடன் மைத்துனர் மேல் பாய்கிறார்!! குறுக்கே விழுந்து பர்த்தாவை காக்கிறார் பாத்திமா! செறுக்குற்ற வாளின் முனை முகத்தில் குத்த வழிகிறது குருதி! குருதியைக் கண்ட உமருக்கு குலைகிறது உறுதி!! அண்ணனின் வீர ரத்தம் தங்கைக்கு இருக்காதா? வீறுகொண்டு எழும் மனது உரிய பதில் சொல்லாதா?! உத்வேகமும் உணர்ச்சியும் தைரியமும் பிறக்கிறது! சத்வேத போதத்தால் சாத்வீகம் திறக்கிறது!! "ஆம்! அண்ணா! நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்; அடித்தாலும் இடித்தாலும் எம்முயிரை எட