இடுகைகள்

அக்டோபர் 8, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

கல்யாணம் ஆன புது மனைவி சமைப்பதை கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னுவதில் தப்பில்லை.மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது: சாப்பிட்டது சாம்பார் ... என்று உறுதி செய்வது எப்படி ? மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய், வெங்காயம் போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார்தான். சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்து விடுவார்கள் அப்படி இருந்தாலும்அது கண்டிப்பாக சாம்பார்தான். ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்து கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள். ரசம் என்று உறுதி செய்வது எப்படி ? நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை, முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது. ஒரு எதிர்மறை சிந்தனையாளர், எப்போதும் பிறரிடம் குறைகளையே காண்பார். ஒரு ஆரோக்கிய மனிதரைக் கண்டால், அவர் நோயுற்றிருந்தால் என்ன ஆகும் என்ற வகையில் யோசனை செய்வார். அவர்கள் தங்களின் முழு வாழ்வையும், பிற விஷயங்களில் குறை கண்டுபிடித்தே வீணாக்குவார்கள். அதே சமயத்தில் நேர்மறை சிந்தனையாளர் என்பவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களிலுமே அதே எண்ணத்துடன் இருக்க முடியாது. ஒரு சில விஷயங்களில் அவர் எதிர்மறையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். அந்த விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஒருவருக்கு வாழ்வில் எதாவது ஒரு சூழலில் அல்லது சூழல்களில் எதிர்மறை எண்ணங்களை வந்தே தீரும். உதாரணமாக, தேர்வை சரியாக எழுதாததால் அதில் தோல்வியடைந்து விடுவோமா? என்று நினைப்பது அதில் ஒருவகை. ஆனால் இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு

உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும்.  இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை  யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.  சிலர் உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற் கொள்வார்கள். இதனால் மட்டும் உடல் எடை குறையாது. எப்போதும் ஒரே  மாதிரி யான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் தொப்பை ஏற்படுகிறது. அதேபோல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. க்ரீன் டீ யில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கள் மட்டுமின்றி, கொழுப்புகளை கரைக்கும் பொருட்களும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க தின மும்  காலையில் க்ரீன் டீயை குடித்து வர வேண்டும். பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள டாக்ஸின்களை (வேதிப்பொருள்)  வெளி யேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக் களை

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும்  ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா? * உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்? வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது. * தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்? தேயிலை அதிக அளவு  அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும். * புகை பிடிக்கக் கூடாது. ஏன்? உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. * இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்? சாப்பிட்ட பிறகு  லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட  உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும். * குளிக்க