இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் எழுதி வைக்க நேரமில்லையே! Posted: 11 Aug 2012 08:11 AM PDT வானத்திலே நிலவிருக்கு, கவியூறும் சுவை எனக்கு, எழுதி வைக்க நேரமில்லையே!! தோட்டத்திலே மலரிருக்கு, எழுதப்படா கவியிருக்கு, பதிந்து வைக்க காலமில்லையே!! மொட்டைமாடி தனிமையிலே, வெட்டவெளி நோக்கையிலே, வேகமாக நினைவு நகருதே!! வட்டமாக புத்தகங்கள், திட்டமாக இடம்பிடிக்க, காண அதைக் கனவு கலையுதே!! பதிவுலகம் வர ஆசை, பதில் கூறும் மனவோசை, படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!! இணையத்தில் 'லாக்'(log) ஆனால், படிப்பிங்கு 'லாக்' (lock) ஆகும், கடிவாளம் பிடித்து இழுக்குதே!! தேர்வு தரும் சுமையெனக்கு, படித்துக் களைத்த இமையிருக்கு, வேறெதிலும் நாட்டமில்லையே!! படிப்பென்னும் துணை நமக்கு, எதிர் காலம் அதிலிருக்கு, அதனால், மன வாட்டமில்லையே!! நண்பர்களுக்கு, தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க