இடுகைகள்

ஆகஸ்ட் 12, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 17 Posted: 13 Mar 2010 07:37 PM PST அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல் பெருமதிப்பு கொண்டிருந்தனர். அவர்பொருட்டு, தம்முயிரையும் ஆசையுடன் தரத்துடித்தனர். அத்தகைய தோழரொருவர் அர்க்கம்; என்றும் நாடினார் சொர்க்கம்! சபா குன்றின் மேலிருந்த தம் மாளிகையை நபிகளுக்கு செய்தார் தத்தம்! அவர் பதினெட்டு வயது மக்ஜூமி கோத்திரத்தாரே! அதே கோத்திரத்து அபூஜஹலும் தறிகெட்டு மதிகெட்டு ஆத்திரத்தால் கொக்கரித்தானே!! அர்க்கமின் மாளிகையில் சொர்க்கத்தைத் தேடி சர்க்குண மார்க்கத்தின் தொழுகை நடந்தது; இறையை நோக்கி, அழுகை புரிந்தது! தாருஸ்ஸலாம் என்று அது பேரும் பெற்றது! சாந்தி மாளிகையில், சாந்தம் தவழ்ந்தது!! கொக்கரித்த அபூஜஹல், தாருல் நத்வாவில் கூடினான்! கட்டிளங்காளையர் பலரைக் கூட்டினான்! நபிகளுக்கு எதிராக ஒரு வேள்வியை மூட்டினான்!! விலை வைத்தான் நபிகள் தலைக்கு! உலை வைத்தான் முஸ்லிம்கள் நிம்மதிக்கு!! நூறு ஒட்டகை தருவேனென்று தத்தம் செய்தான். பேரும் புகழும் தமக்கே என்று சத்தம் செய்தான். உமர் இப்னு கத்தாப் என்னும் முப்பத்திமூன்று வயது இளவல் ஒருவர் அப்பக்கம் வந்தார்