இடுகைகள்

ஏப்ரல் 5, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது?

படம்
எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது? கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. இந்த கொலஸ்ட்ரால் வேறுபாட்டை எப்படி அறிவது? ரத்தக் கொழுப்புகள் அல்லது கொழுப்பு நிறைந்த பொருட்களில் (லிப்பிட்ஸ்) கொலஸ்ட்ரால், டிரைகிளசரைடுகள் உள்ளன. உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன. `நல்ல’ - `கெட்ட’ கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; அதனால், அதை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு புரதம் தேவைப்படுகிறது. இவை `சுமக்கும்’ லிபோ புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன. அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (ஹை டென்சிடி லிபோபுரோட்டீன் ஹெச்.டி.எல்.): அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது