இடுகைகள்

நவம்பர் 27, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆடு வாங்கிய கதை

படம்
ஆடு வாங்கிய கதை Posted: 26 Nov 2009 10:28 AM PST போன வருடம் இதே நேரம் ஹஜ்ஜில் இருந்தோம். இன்று அந்த பசுமையான நினைவுகளை நினைக்கையில் கண்களில் நீர் துளிர்க்கிறது. அரஃபா மைதானத்தில் அகமகிழ்ந்திருந்த நாழிகைகள், மனக்கண்ணில் நிழலாடுகிறது! பக்ரீத்துக்கு ஆடு அறுக்கலாமா, கூட்டு குர்பானி சேரலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது, இது பற்றி காலேஜில் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடன் படிக்கும் மாணவி தீபா தாங்கள் செம்மறி ஆடு வளர்ப்பதாகவும், வேண்டுமானால் பக்ரீத்துக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். இது அவர் சொல்லி பதினைந்து நாட்கள் இருக்கும். நான் அசால்ட்டாக விட்டு விட்டேன். கூட்டு குர்பானியும் சேர்ந்து விட்டோம். 2 நாட்கள் முன்பு என்னவர் ஆடு அறுக்கலாம் என்று சொல்ல, தீபாவுக்கு போன் செய்தேன், "தீபா...செம்மறி குட்டி இருக்கா? எனக்கு ஒரு ஆடு வேணும்ப்பா" "5 குட்டி இருக்குங்க்கா...வந்து பிடிச்சுக்குங்க..." "என்ன விலைப்பா? எத்துணை கிலோ தேறும்?" "4000 ருவாய்னு எங்க வீட்டுக்காரர் சொன்னார், வேணா குறைச்சுக்குவார், சுமாரா 15 கிலோ கறி தேறுமாம்...நாள