கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கூலான மூலிகைகள்
கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கூலான மூலிகைகள் முடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரு ம் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு 100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதே அளவு வளர்வது இல்லை. குளிக் கும்போதோ, ஷாம்பு போடும்போ தோ, தலை வாரும்போதோ இதைப் பார்க்க முடியும். சிந்தாதுஷ்டி அதிகம் வந்தால் முடி உதிரும் என்பதைச் சரகர் கூறுகிறார். வழுக்கைத் தலையை alopecia என்பார்கள். ஆண்களுக்கு உருவாகும் ஒரு விதமான வழுக்கைக்கு androgenetic alopecia என்று பெயர். சில நேரம் புழுவெட்டு போல் ஏற்பட்டுக் கண் புருவம்கூட உதிர்ந்துவிடும். பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல் லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், ரேடியோ தெரபி, கீமோதெரபி எடுத்துக் கொள்ளும் போதும், இரு ம்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் காணப்படும். பொடுகு நோய் தாருணம் (seborrheic dermatitis) முடி உதிர்வதற்கு ஒரு காரணம். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும். ஆயுர்வேதத்தில் அஸ்த...