மூலநோயை தடுக்கும் நாவல்பழம்
மூலநோயை தடுக்கும் நாவல்பழம் பழங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருபவை. நோய்கள் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது. இந்த வகையில் நாவல்பழத்தின் மருத்துவ பயன்களை பற்றி அறிந்து கொள்வோம். நாவல்பழத்தின் பயன்பாடு அவ்வையார் காலத்தில் இருந்தே வந்திருப்பதை பல புராண கதைகள் மூலம் நாம் அறிந்திருப்போம். நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன. ஏரிக்கரைகளிலும், கண்மாய், குளக்கரையிலும் நாவல்மரம் பெரிதாக வளர்ந்திருக்கும். தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவல்பழம் பெரியதாகவும், அதிகமாகவும் விளைவிக்கப்படுகிறது. நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ பயன் கொண்டவை. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்...