இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் இணையத்தில் பணம் சம்பாதிக்க... Posted: 26 Jun 2010 01:50 AM PDT வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது. உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே! இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். 'தொலைக்காட்சியி

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 18 Posted: 24 Jun 2010 07:01 AM PDT உமரின் கால்கள் திசை மாறியது! தங்கையை மனது வசை பாடியது!! கண்களில் தீப்பொறி பறந்தது! கருத்ததில் மதவெறி சூழ்ந்தது!! ஏகினார் தங்கையில்லம் மிதந்து வந்தது இனிய நாதம்! செவிகளில் பாய்ந்ததை காது தாழ்த்திக் கேட்கிறார் - பின், பொறுமையிழந்து, தாழிடப்பட்ட கதவைத் தட்டுகிறார். திறந்த தங்கையை கண்டபடி திட்டுகிறார். தம் தங்கையை நோக்கி, "ஏ, பாத்திமா.... நீவிர் என்ன பாடினீர் சொல்லும்...!" என்று வினவுகிறார். ஒன்றுமில்லை என்று பயத்துடன் தங்கை பதிலளிக்க, ஆத்திரத்துடன் மைத்துனர் மேல் பாய்கிறார்!! குறுக்கே விழுந்து பர்த்தாவை காக்கிறார் பாத்திமா! செறுக்குற்ற வாளின் முனை முகத்தில் குத்த வழிகிறது குருதி! குருதியைக் கண்ட உமருக்கு குலைகிறது உறுதி!! அண்ணனின் வீர ரத்தம் தங்கைக்கு இருக்காதா? வீறுகொண்டு எழும் மனது உரிய பதில் சொல்லாதா?! உத்வேகமும் உணர்ச்சியும் தைரியமும் பிறக்கிறது! சத்வேத போதத்தால் சாத்வீகம் திறக்கிறது!! "ஆம்! அண்ணா! நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்; அடித்தாலும் இடித்தாலும் எம்முயிரை எட

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்.... Posted: 23 Jun 2010 07:28 AM PDT அது ஒரு அழகான நந்தவனம். பூத்துக் குலுங்கும் அழகிய பூக்களின் வாசனை அனைவரையும் ஈர்த்தது. ஓங்கி உயர்ந்த மரங்களின் ஒய்யாரக் கிளைகளில் ஒயிலான பறவைகள் எந்நேரமும் பாடிக் கொண்டே இருந்தன. அந்த நந்தவனத்தில் ஒரு சின்ன சுண்டெலி ஒன்று இங்குமங்கும் ஓடி சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. அது செய்யும் சேட்டைகளை ரசிக்க, மயிலினங்களும் மான் கூட்டங்களும் பச்சைக் கிளிகளும் பாடும் பறவைகளும் சிங்கங்களும் சிறும் சிறுத்தைகளும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தன. இவை அனைத்தையும் சுண்டெலி தன் நண்பர்களாக்கிக் கொண்டது. இவ்வாறு சந்தோஷமும் சங்கீதமும் நிறைந்திருந்த வேளையில், ஒரு நாள் லேசாக மழை தூற ஆரம்பித்தது. விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், அவ்வப்போது மட்டும் சுண்டெலி தலை காட்டிக் கொண்டிருந்தது. அதனால், அதை எதிர்பார்த்திருந்த அதன் நண்பர்களும் ஏமாற்றமடைந்து தாம் வருவதைக் குறைத்துக் கொண்டன. பின்பு தூறல், சாரலோடு கலந்த பெருமழையாக மாறியது. அதனால், சுண்டெலி போய், தன் பொந்தில் பதுங்கிக் கொண்டது. அதன்