இடுகைகள்

குழந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

படம்
குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Posted by Sathik Ali at 3:15 AM உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும். சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும். குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும் மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும். குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது. சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்க...

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு

படம்
’என்’ எழுத்து இகழேல் தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு Posted: 23 Oct 2009 11:30 PM PDT நாள் நட்சத்திரம் பார்க்காமல், ஜாதகக் குறிப்பையும் புரட்டாமல், மணம் முடித்தன சுக்கிலமும் சுரோணிதமும்! இரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள இதயமாய் துடித்தேன் நான்! குழாய் மூலம் வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவது போல நேரத்துக்கு நேரம் எனக்கு சோறு பாய்ச்சினார்கள்! பேரில் பனி இருந்தாலும் இந்த குடத்துக்குள் குளிரில்லை! நீரில் நான் மிதப்பதால், தண்ணீர் பஞ்சம் எனக்கில்லை!! இடத்தகராறு நிலத்தகராறு நான் செய்யாமல், கிடைத்த இடத்தில் குந்திக் கொள்வேன்! திட உணவு உண்ணாவிட்டாலும், சத்துக்களை உறிஞ்ச மட்டும் முந்திக் கொள்வேன்!! தடைச்சுவராய் தோள்சுவர்கள், தாண்டிடுவேன் ஒரு நாள் நான்! விடைதருவேன் கருவறைக்கு வியனுலகைக் கண்டிடவே!! கோபமென்றாலும் குஷியென்றாலும் விடுவேன் ஒரு உதை! என் உதைக்கு மனிதவதைத் தடுப்பு சட்டத்தில் தண்டனை தர வழியில்லை என்பதால், தைரியமாகச் சொல்கிறேன் இதை!! அம்மா! நீ தூங்கும் போது உனக்கே தெரியாமல் மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும் அப்பாவின் செய்கையை, நீ அறிவாயா?! கொஞ...

குழந்தைகளின் மனநிலை

படம்
’என்’ எழுத்து இகழேல் குழந்தைகளின் மனநிலை Posted: 13 Oct 2009 09:50 AM PDT "கண்ணா...வெளியே போனால், எதுவும் கேட்கக் கூடாது. அப்படினா வா... இல்லாட்டி வேண்டாம்.. வீட்டிலேயே இருந்துக்கோ" இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்த காலம் போய், "கண்ணா வெளியே போகலாம், வரியா?" "எனக்கு எதாவது வாங்கித் தர்ரதுனா வரேன், இல்லாட்டி வரல" இப்படி சொல்ல ஆரம்பித்தான் என் ஆறு வயது மகன் லாமின். பணத்தின் அருமை கொஞ்சமும் தெரியாமல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் கேட்டு அடம் பிடிப்பான். அந்த பொருள் அவனுக்கு தேவையில்லை அல்லது உபயோகமில்லை என்று எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை. ஆனால்... ஆனால்...எங்கள் வீட்டு முருங்கை மரம் காய்க்க ஆரம்பித்த போது, அக்கம் பக்கம், உறவுகளுக்கெல்லாம் கொடுத்தது போக நிறையவே இருந்தது. அதை என்னவர், பக்கத்து கடையில் கொடுத்து காசு வாங்கி வர என் மகனிடம் சொல்ல, ரொம்ப ஆர்வமாக முருங்கைக்காய் விற்ற பணத்தை உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தான். எங்களிடம் காசு வாங்கி போய், கடையில் பலூன் போன்ற பொருட்கள் வாங்குவானே தவிர, முருங்கைக்காய்காசை தொட மாட்டான். அது தன் பணம...

குழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><> குழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு... Posted: 13 Sep 2009 07:21 AM PDT உள்ளத்திலே ஒரு கவலையில்லாமல் உறங்கிடு ஆரிராரோ! - கண்ணே செல்லத்துடன் உன்னை கொஞ்சிடுவோமே! ஆரோ ஆரிராரோ! ஆரோ ஆரிராரோ! பாசத்தின் முன்னே மரகதங்கூட மதிப்பு தெரிவதுண்டோ? பாசத்தின் முன்னே மரகதங்கூட மதிப்பு தெரிவதுண்டோ? நேசத்தின் செயலால் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ?! மாற்றம் காண்பதுண்டோ?! (உள்ளத்திலே) கால்களினாலே வெண்மதிபோலே தவழ்ந்து வர வேண்டும்! கால்களினாலே வெண்மதிபோலே தவழ்ந்து வர வேண்டும்! உந்தன் புன்சிரிப்பாலே மலர்களைப் போலே காட்சி தரவேண்டும்! காட்சி தர வேண்டும்! (உள்ளத்திலே) கானக்குயில் போல மழலை மொழி பேசி என்றும் உறவாடுவாய்! கானக்குயில் போல மழலை மொழி பேசி என்றும் உறவாடுவாய்! உயர் பாசம் பெரிதென்று வாழும் நல்வாழ்வில் அன்பு வழி கூறுவாய்! அன்பு வழி கூறுவாய்! (உள்ளத்திலே) -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ...

குழந்தை

படம்
மாடி வீடு, கோடிகளும் உண்டு. கெஞ்சாத இடமில்லை, குழந்தையில்லா ஒரு குறை தான்! கோடி வீடு குழந்தைகள் குதூகலம். கூரையில்லா குடிசை, குறை அதுமட்டுந்தான்! கையில் கணிணி கை நிறைய காசு கற்றான் என்னவோ? சுற்றுகிறான் ஊரெங்கும்! கண்பட்டு பயனென்ன‌? கல்லாதது என் குறை தான்! கால்களை நான்‌ வ‌ருத்தி, கடத்தியது போதுமடா, காலமெல்லாம் தெருக்கடையில் திகட்டியது என் வாழ்க்கை! ப‌டித்தேன் ப‌ட்ட‌மெல்லாம் ப‌ற‌ந்தேன் ஊரெல்லாம், உற‌வுகளை பார்ப்ப‌தோ வ‌ருடமொரு முறை தான்! ப‌ட்டாடை ப‌ல்லாயிர‌ம் ப‌ல்லிளித்தாய் ப‌க‌ட்டைக்க‌ண்டு! பாலாடைக்காணா ப‌சிவ‌யிறு, பார்க்க‌ ம‌ற‌ந்த‌தேன் ப‌க்க‌த்து வீட்டில்! ப‌ழ‌குவ‌த‌ற்க்குள் பெற்ற‌ இன்பம், ப‌ழ‌ங்க‌தையாய் ஆக்கி வைத்தாய், தொலை நோக்கென வாதித்து தொலைத்தாய் தொடங்கியதை! எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் ஓடுது பார் அங்குமிங்கும், இருக்கும் அடுத்தோரை ஆராய்வதை நிறுத்திவிடு! களைந்திடுவோம் காழ்ப்புணர்வை கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை வேடமிட்டது போதும் வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!