இடுகைகள்

பாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே

படம்
குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே Posted: 28 Feb 2010 04:13 AM PST அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும் காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும் கவலையின்றி களித்திடுவாய் கண்ணே! ஹோய்...ஹோய்... அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! லாஃபிராமா கண்மணியை ...... லாஃபிராமா கண்மணியை தாலாட்டும் தென்றலது லாஃபிராமா கண்மணியை தாலாட்டும் தென்றலது அன்புடனே பாடிவரும் இன்பத்துடன் மேவிவரும்! அன்புடனே பாடிவரும் இன்பத்துடன் மேவிவரும்! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! எங்களன்பு குலக்கொடியே இறையோனின் அருட்கொடையே எங்களன்பு குலக்கொடியே இறையோனின் அருட்கொடையே பாசத்திலே ஏது எல்லை கனிந்தமனம் வீழ்வதில்லை! பாசத்திலே ஏது எல்லை கனிந்தமனம் வீழ்வதில்லை! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அ...

குழந்தை பாடல் - கண்ணே கலைமானே

படம்
குழந்தை பாடல் - கண்ணே கலைமானே Posted: 06 Feb 2010 09:05 AM PST கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! பாசம் கொண்டோம் பண்பினை வளர்த்தோம் பைங்கிளி உனை நாம் கருத்தினில் நிறைத்தோம்! நீயொரு பிள்ளைகனி - லாஃபிரா பாத்திமா செல்லகிளி வசந்தங்கள் வாழ்த்தும் நேரமிது வாழ்வினில் சேரும் காலமது! கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! வாழும் வாழ்வில் வளங்கள் காண்பாய் வாழ்த்தும் பாடலில், மகிழ்ச்சியில் திளைப்பாய் உணர்வில் உயிராய் நீ - என்றென்றும் உள்ளத்தில் நிறைந்திடுவாய்! கண்ணே உன் முகத்தில் கவிதைகளே! காண்கின்ற கண்கள் ஒரு கோடியே!! கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: கண்ணே கலைமானே.. கன்னி மயிலென கண்டேன் உனை நானே.. அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன் ...

குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்...

படம்
குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்... Posted: 09 Jan 2010 05:37 PM PST இரண்டரை ஆண்டுகளுக்கு முன், என் தம்பிமகன் தைசீர் அஹமது பிறந்த போது, நான் பாடிய தாலாட்டு! அன்புடன் ஆட்சி செய்ய ஒரு கண்மணி வந்ததடா... பாசத்தைக் குழைத்தெடுத்து ஒரு பைங்கிளி பூத்ததடா... உன்முகத்தைப் பார்க்கையில், உள்ளம் கொள்ளை போகுதே - தேனின் சுவையைப் போலவே கண்ணன் குரலும் இனிக்குதே... அத்தை பாடிடும் ஒரு பாடல் தான் அதைப் பாடப் பாட பிஞ்சு மனது குளிர்ந்திடுமே! (அன்புடன்) கண்ணுக்கு கண்ணாக நீ பிறந்து வந்தாயே! முகத்தோடு முகம் சேர்த்து, கனிமுத்தம் தந்தேனே! பூஞ்சிட்டை பார்த்திட, மனம் பரவசமானதே! தம்பியின் முகத்திலே அட, பெருமை பொங்குதே!! தொட்டில் நானும் ஆட்டுகிறேன், ஆரீ ராரி ராரோ! விழிகள் மூடி கனவுடனே, நீயும் தூங்கிடுவாய்!! அத்தை பாடல் கேட்டு தாளம்போடு இளமகனே!! (அன்புடன்) சந்தன சிலை போல, இளவரசன் கண்டேனே! உயிருக்கு உயிராக, உனைக் கொஞ்சி ரசித்தேனே!! பெற்றவர் வாழ்க்கையில் தனி அர்த்தம் சேர்ந்தது! உன்முகம் ரசிப்பதே புது வேலை ஆனது!! செல்லக் கண்ணன் தூங்கிடவே, ஆரீ ராரி ராரோ!! மெல்ல மெல்ல பாடு...

குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...

படம்
குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்... Posted: 28 Dec 2009 06:33 AM PST இல்லையொரு பிள்ளையென்று ஏங்கும் போது வந்துதித்த என் செல்லத்தங்கத்துக்கு, பன்னிரெண்டு வருடங்களுக்கு முன், நான் எழுதிய தாலாட்டு! அன்பு எனும் மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் லாஃபிரா கண்ணே தூங்கிடுவாய் தாலேலோ - நீ மனம் நிறைய களிப்புடனே மகிழ்ச்சியுடன் ஆடியபின் தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ(அன்பு எனும்) பூவிதழால் புன்னகைத்து தாய்மனதைக் கொள்ளைகொண்டு பவுர்ணமியாய் ஒளிதருவாய் தாலேலோ - உந்தன் மழலையிலே எனை மயக்க குறும்பினிலே நீ கலக்க நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ! நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ!(அன்பு எனும்) இல்லையொரு பிள்ளையென ஏங்கும் போது வந்துதித்த லாஃபிராகண்ணே கண்மலர்வாய் தாலேலோ - உன் தேன்மொழியில் வாயொழுக தீந்தமிழில் பாட்டிசைக்க திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! (அன்பு எனும்) கையிரண்டில் அள்ளிக் கொண்டு கன்னத்திலே கன்னம் வைத்து முத்தங்களை பொழிந்திடவே தாலேலோ - உன் பொன்னழகை பார்ப்பதற்கும் பூமுகத்தை ரசிப்பதற்கும் கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ! ...

குழந்தை பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே...

படம்
குழந்தை பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே... Posted: 23 Nov 2009 05:44 AM PST கண்மணியே கண்மணியே உன்னைத்தானே கொஞ்சிடுவோம் விளையாட ஓடி வா நீ! (கண்மணியே) மஞ்ச பூமேனியே அன்பு லாஃபுகண்ணே உன்னை அன்போடு அணைத்து கொள்வோம்! (கண்மணியே) இது இசையல்ல வரும் பாட்டல்ல, இது என்றென்றும் உன்வாழ்வில் இருக்கட்டும்! கருவிழியாலே உன் மொழியாலே சில நேரங்கள் சட்டென்று மகிழ்வூட்டும்! பெண்ணே... கண்ணே... பூமேனி தன்னோடு தாங்கி வரும் பெண்ணே பொன்மாலை பூக்கூட உன்னை வாழ்த்தும் கண்ணே உன் குறும்பின் அழகில் எல்லைகளேது எந்நாளும் சிரிப்புண்டு! (கண்மணியே) இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு பிஞ்சுக்கை நெஞ்சோடு தீண்டிட வந்தவள் யாரு உனைக் கொஞ்சி கொஞ்சி உன்னழகை வியக்கிறேன் இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு? பெண்ணே... கண்ணே... பூமாரி உன்மீது என்றும் பொழிய வேண்டும் ஊரார்கள் உனைவாழ்த்தும் அழகை ரசிக்க வேண்டும்! அட வசந்தம் வீசிட வேண்டுமே நல் தென்றல் காற்றோடு! (கண்மணியே) -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே) இந்த பூலோக...

நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா?

படம்
  நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா? Posted: 16 Nov 2009 06:31 AM PST என் மகள் லாஃபிராவுக்கு ஆறு வயதில் காது குத்தியதற்காக வைத்த நலங்கு வைபோகத்துக்கு எழுதிய பாடல். அன்பு லாஃபிரா திருநாளோ தந்தை தாய் கொஞ்சும் புது நாளோ எங்க பூந்தோட்ட மலர் தானோ தங்க தேனூற்றாய் இனிப்பாளோ நலங்கெனும் சடங்கில் தன்னை மறப்பாளோ மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ பிஞ்சு விரல் கொலுசொலி கேட்கிறதே! (அன்பு லாஃபிரா) பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் ஊட்டினாள் வாழும் வாழ்வில் அர்த்தம் கூட்டினாள் இரவும் பகலும் கவி பாடினாள் இதயம் மகிழ மலர் சூடினாள் நாய கத்தின் வழி நாடினாள் நீ கேட்ட நலங்கின்று பொன்மானே! நீ தூங்க மடி ஒன்று தருவேனே!! சொந்தங்கள் உனைச் சுற்றி வாழ்த்தாதோ?! பந்தங்கள் ராகங்கள் பாடாதோ!! அல்லாஹ்வின் அருள் சேருமே!! (அன்பு லாஃபிரா) புதிய மலர்கள் அவள் கூந்தலில், குறும்பு தெரியும் அவள் பார்வையில் தேனின் துளி அவள் பாதையில் கனவு நிறைந்திருக்கும் கண்களில் இதயம் மகிழ்வு கொள்ளும் ஆசையில் பாசம் பொங்கும் அவள் வார்த்தையில் மம்மியின் மனம் போல இருக்கின்றா...

நாகப்பட்டினமே

படம்
நாகப்பட்டினமே Posted: 06 Nov 2009 08:57 PM PST நாகப்பட்டினம் என்ற ஊர் பெயர் வரும்படி சினிமாப்பாடல் இருக்கா என்று நண்பரொருவர் கேட்க, அப்படி இல்லையென்று இதோ ஒன்றை நானே உருவாக்கினேன். அவரவருக்கு விருப்பமான மெட்டு போட்டுக் கொள்ளுங்கள். பல்லவி சிப்பியுண்டு முத்துமுண்டு சிந்தையள்ளும் கடலுமுண்டு நாகப்பட்டினமே - எங்க நாகப்பட்டினமே! உப்புமுண்டு மீனும் உண்டு மிதவை ஏற மார்க்கமுண்டு மரத்தை கட்டணுமே - மச்சான் மரத்தை கட்டணுமே!! அட, கட்டுமரத்ததான் கட்டுபுட்டோம் கடலுக்குள்ளே குதிச்சுபுட்டோம் கரையும் தெரியல - பிழைக்கும் வழியும் புரியல... (சிப்பியுண்டு) சரணம் சேர்த்து வெச்ச கஞ்சி தண்ணி, நெத்திலி மீனு கருவாடு சோத்த எல்லாம் தின்னுபுட்டு சோக்கா போன கடலுக்குள்ள, போயி ரெண்டு வாரமாச்சு, பாத்த விழி பூத்து போச்சு கருகமணி பொன்னுனக்கு கைவளவி கொண்டு வாரேன் என்று சொல்லி ஏங்க வெச்சு கடலுக்குள்ள போன மச்சான் ஊழிக்காத்து அடிக்கையிலே ஊனும் உயிரும் நடுங்குதைய்யா நீ பத்திரமா திரும்பிவர பாவி மனசு துடிக்குதைய்யா - இந்த பாவி மனசு துடிக்குதைய்யா! (சிப்பியுண்டு) தலைவாழ இலைபோட்டு, அழகழ...

வெற்றியின் ரகசியம்

படம்
’என்’ எழுத்து இகழேல் வெற்றியின் ரகசியம் யாரும் அறியா உலகத்திலே ...நாம் இருவரும் கைகோர்ப்போம் எங்கும் இருக்கும் இறையருளால் ...இனிதாய் மனம் களிப்போம்-நாம் ...இனிதாய் மனம் களிப்போம். யாரும் அறியாப் பொழுதினிலே ...ஒன்றாய் இணைந்திடுவோம் காற்றும் நுழையா இடத்தில் கூட ...காதலில் கனிந்திடுவோம்-நாம் ...காதலில் கனிந்திடுவோம். நித்திய உலகை கடந்தே இருவரும் ...நிலவுக்குள் நுழைந்திடுவோம் நிலவில் கூட இணைந்தே ஒன்றாய் ...நாடகம் நடத்திடுவோம்-நாம் ...நாடகம் நடத்திடுவோம். ஈருடல் ஓருயிர் அல்ல அல்ல ...ஓருடல் ஒருயிர் தான் நீயே நான் என, நானே நீயென ...புரிந்திடல் சுகமே தான்-இதைப் ...புரிந்திடல் சுகமே தான். -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் Email delivery powered by Google

நலங்கு பாடல் - என்ன விலை அழகே

படம்
’என்’ எழுத்து இகழேல் நலங்கு பாடல் - என்ன விலை அழகே Posted: 02 Oct 2009 05:05 AM PDT என் மகளின் ஆறாவது வயதில் காது குத்தியதற்கு வைத்த நலங்குக்காக எழுதிய பாடல். லாஃபிராமா மயிலே நல்ல மலரை சூடி வருவாய் மலர் மணத்தை நீயும் தருவாய் என் மகளை கண்டு வியந்து போகிறேன் - நான் நலங்கை பார்த்து பாடல் பாடினேன்! தவத்தால் கிடைத்த மணியே மலைத்தேன் அதனின் சுவையே முகத்தில் சிரிப்பும் இனிய கனவும் உன்னிடம் சேர்ந்தது என் விழி பார்த்தது தினமும் தினமும் இனிமை தொடர தித்திக்கும் மலைத்தேன் நீ வீட்டுக்கும் நீ ராணி! இனியென்றும் வரும் வெற்றியே இருளுடன் செல்லும் தோல்வியே ஒளிவட்டம் கொண்ட வாழ்வினில் உயிர்வரை நெஞ்சம் இனிக்குதே! மம்மியும் டாடியும் அன்று, பண்ணிய துவாவில் ஒன்று பெண்ணென வந்தது இன்று லாஃபிரா.... உன் வாழ்வுக்கில்லை ஈடு! (லாஃபிராமா மயிலே) இறையின் அருளை பெற்று நபியின் வழியில் நடந்து மறையை தினமும் உவந்து படிக்கும் மதிமுகம் நீயே தான் மாணிக்க கல்லே தான் நெறியின் முறையில் உயிரின் வரையில் உண்டாகும் உன் நேசம் மாறாத பூ வாசம்... கரும்பென கண்ணே இனிக்கிறாய் வரும்வழி வாசம் தருகி...