மகனுக்கு அம்மாவும் சொல்லவேண்டியது
கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது. காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!! 5 Marriage Lessons that Mothers Should Give to their Sons ... 1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!! மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள். 2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!! மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர...