இடுகைகள்

நபி மருத்துவம் திராட்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நபி மருத்துவம் திராட்சை

திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா (ரலி) கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள். உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும். சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது. (அபூநயீம்) உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும். எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி பெருமானிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி (ரலி) என்பவர் கேட்டார். …குடிக்க வேண்டாம்† என்று அதற்கு பதில் கிடைத்தது. திராட்சை சாற்றை நாம் ந...