தலைவலியை குணமாக்கும் மிளகு
தலைவலியை குணமாக்கும் மிளகு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நமக்கு ஆரோக்கிய வாழ்க்கையை வழங்குகிறது. அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு. இதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து என்பன அடங்கி உள்ளது. வலி மற்றும் காது சம்மந்தமான பிரச்சனைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்குவான் இருமல், ஆஸ்துமா போன்றவற்றிற்கு தீர்வு தரும். நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம் இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்,தலைவலி போன்றவை குணமாகும். மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி குணமாகும் அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும். தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும். மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்...