இடுகைகள்

டிசம்பர் 29, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூட்டுத் தேய்மானம்: மாற்று வழி

மூட்டுத் தேய்மானம்: மாற்று வழி **************************************************** மூட்டுத் தேய்மானம் இன்று அதிகமாகக் காணப்படும் ஒரு பிரச்சினை. இதை Osteoarthritis அல்லது sandhigata vatam என்று அழைப்போம். முதுமை, உராய்வு, அதிக வேலை செய்வது போன்றவற்றால் மூட்டுகளில் தேய்வு நிலை உண்டாகிறது. மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் இடையே cartilage என்று சொல்லக்கூடிய ரப்பரைப் போன்ற ஒரு பொருள் உள்ளது. ஆயுர்வேதம் இதை ஸ்லேஷ்மதர கலை என்று அழைக்கிறது. இது இருப்பதால் ஓர் எலும்பின் மேல் மற்றொரு எலும்பு நகர்ந்து போக முடியும். இந்த cartilage என்ற எலும்புச் சவ்வு தேயும்போது எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயும். இதனால் வலி, வீக்கம், தசை இறுக்கம் போன்றவை உருவாகும். தேய்மானம் முற்றும்போது புதிய எலும்புகள் மூட்டைச் சுற்றி முளைக்கும். தசை நார்களும், தசைகளும் பலவீனம் அடையும். 50 வயதுக்கு மேல், இது அதிகமாகக் காணப்படும். சில குடும்பங்களில் மரபு சார்ந்து வரலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படலாம், இடுப்பு மூட்டு, கணுக்கால் மூட்டு, பாத மூட்டு, குதிகால் மூட்டுகள் தேய்வடையும். எலும்பு முறிந்தாலும் தேய்வட