வரகு!
சிறப்புமிக்க சிறுதானியங்கள்: வரகு! 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரகு என்கிற வரகரிசி இந்தியாவில் பயிரிடப்பட்டு வந்த சிறுதானியம். அப்போது நம் நாட்டில் இப்போது உள்ளதைப்போல எல்லோரும் சுற்றிலும் அமர்ந்து சாப்பிடுவதைப் போன்ற சாப்பாட்டு மேஜை பழக்கங்கள் கிடையாது. ஆங்கிலேயர் வந்த பிறகே இந்தப் பழக்கம் வந்தது. மத்திய தரக் குடும்பங்களில் கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கமே இருந்தது. ஓரளவு செல்வந்தர்கள், ஜமீன்தார்கள் போன்றவர்கள் மட்டும் தனித்தனி மேஜை நாற்காலிகளில் அமர்ந்து சாப்பிடுவர். ஓட்டல் என்று இல்லாதபோதும், வேறு விதமான உணவகங்கள் வந்தது எல்லாமே 17ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். அப்போதே சிறுதானியங்கள் இருந்தன. அவற்றை உண்ட நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். கைக்குத்தல், புழுங்கல் அரிசியை உண்டு ஆரோக்கியமாகவே வாழ்ந்தனர். விஞ்ஞான முன்னேற்றம் கண்ட பிறகு, பன்னாட்டு உணவுகள் நம் வீட்டு மேஜையை ஆக்கிரமித்த போது, விதவிதமான உணவுகளை ஓட்டல்களின் மூலம் உண்ண ஆரம்பித்த பிறகே, சிறிது சிறிதாக ஆரோக்கியக் குறைபாடுகள் வரத் தொடங்கின. இயற்கை முறையில் விவசாயம்...