இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 25 Posted: 01 Nov 2010 10:10 AM PDT பத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில் பசுந்தானியம் விளையும் பழத்தோட்டங்களும் கனிந்த பேரிச்சையும் தெளிந்த நீரோடையும் நிறைந்த யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள் குழுமினர். மினாவுக்கு அருகில் அவர்தம் கூடாரம் – சென்று நபிகளார் செய்தார் பிரச்சாரம். நல்லொழுக்க மக்கள் பலர் முன்னொழுகி வந்ததனால் மார்க்கமருகி போனது, தீர்க்கதரிசி ஏற்றது! பூசல் பிணக்கு ஒழிந்திட வாசலாக அமைந்தது! நாசவேலை குறைந்திட நாளும் பொழுதும் பிறந்தது!! அவ்ஸ், கஸ்ரஜ் என்று கோத்திரம் இரண்டு! கோத்திரத்துக்குள்ளே சாத்திரம் நூறு!! – அதனால் ஆத்திரம் பலமடங்கு! சாத்தியம் உணர்ந்து நபிகள்(ஸல்) சாதகமாக்க, வேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது! அஸ்அத், அவ்பு, ரபீஆ, குத்பா, உத்பா, ஜாபிர் என அறுவரும் இஸ்லாத்தை பெறுவராய், எடுத்துவைத்த தூதுவத்தை நபிகளாரின் மாதவத்தார், சிரமேற்றுக் கொண்டார்கள்; பெருவாழ்வு கண்டார்கள்! அடியொற்றி பலரும் இறைவனது சந்ந

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 23 அரபு சீமையிலே... - 22 அரபு சீமையிலே... - 21 அரபு சீமையிலே... - 20 அரபு சீமையிலே... - 23 Posted: 31 Oct 2010 10:28 AM PDT சோதனையைக் கண்டு மனம் வேதனையை அடையப் பெற்று, ஜைதவரும் நபிகளிடம், வன்னெஞ்சை சபிக்க சொன்னார்!!! காருண்யக் கடலாம் காத்தமுந்நபிகளோ, 'நெறிப்படுத்தத் தரித்துள்ளேன், சாபமிட அல்ல, அறியாமை இருளகல பாபம்போம் மெல்ல, ஒரு நாள் இம்மக்களெல்லாம் நேர்வழியில் வருவார்கள், ஒரு காலும் வராவிட்டால், வழித்தோன்றல் வருவார்கள்! – என் வறிய நிலை நீக்கிவிட வல்லவனே போதுமப்பா! உரிய பதில் அவன் தருவான், உண்மை என்றும் வெல்லுமப்பா!' தளராத மனதோடு தக்க பதில் தந்தநபி, கண்ணிறைந்த நீரோடு, கையிரண்டை ஏந்தியவர் கருத்ததிலே கவலைகொண்டு வல்ல இறையை வேண்டிநின்றார். இளைப்பாறி களைப்பாறி முனைப்போடு தடுமாறி முன்னெட்டு வைத்தவரும் சின்னாட்கள் பயணப்பட, சிரமங்கள் இருந்தாலும் கருமத்தில் கண்ணாக, இஸ்லாத்தின் தூததனை இதமாக எடுத்தோத, மண்ணினத்து ஜின்களெல்லாம், மறையோதி முறைதழுவ, சீறாப்புதல்வரவர், ஹீரா குக

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 19 Posted: 12 Sep 2010 09:46 PM PDT நிகழ்ந்த மாற்றமேதும் அறியாமல், தோழர்கள் வாளேந்தி உமர் வருவதைக் கேள்வியுற்றனர்! கிலேசமுற்றனர்! சவாலிட்ட வாலிபரை எண்ணி கலக்கமுற்றனர்!! தட்டப்பட்ட கதவின் கிட்டேவந்தனர் தோழர்கள்; நோக்கம் அறிந்தபின் தாக்குவோம்; ஆக்கம் கொண்டிடின் போற்றுவோம், என்று திறக்கின்றனர் கதவை! உள்ளே விட்டனர் இப்னு கத்தாபை!! பெருமானார், கத்தாப் மைந்தரை நோக்கி வீசினார் சில கேள்விகள், இஸ்லாத்தை வளரச் செய்ய, அவையெல்லாம் வேள்விகள்; "முறை மாறும் பாதையா? இறைக் கோபம் தேவையா? கல்லுருவைக் கடவுளாகத் தொழுவதை விடமாட்டீரோ?? அல்லாஹ்வை ஏகனாகத் தொழ வரமாட்டீரோ?" கனிவுடன் விளம்ப, தெளிவுடன் சொன்னார், கருத்ததில் கண்ணியம் ஏற்றிட்ட உமரவர்; "தேனையொத்த தீனை நான் ஏற்றுக் கொண்டேன் நாயகரே! வானைப் படைத்த ஏகனவன் தூதர் நீங்கள் தூயவரே!!" அகமும் முகமும் குளிர, கட்டியணைத்தார்! அல்லாஹு அக்பர் என்றே மும்முறை முழங்கினார்!! பெருமானார், முந்திய இரவு தொழுது, இறையை நோக்கி அழுது, கேட்ட தேவை நிறைவேறியது! நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில், இஸ்ல

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் வரும்......வருது.......வந்திருச்சு......... Posted: 09 Sep 2010 08:47 AM PDT எதப் பத்தி நான் சொல்றேனு யோசிக்கிறீங்களா??? இரண்டு விஷயங்கள்.......... முதலாவது ஈதுப் பெருநாள்! இரண்டாவது "நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்" என்ற என்னுடைய புத்தகம்!! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! இல்லத்தில் பிரியாணி மணமும்........ கைகளில் மருதாணி மணமும்........ சிரிக்கும் கண்களும்...... இனிக்கும் புன்னகையும்........ சுட்டிகளின் கலக்கலும்........ சுந்தர மொழிகளுமாக....... தூரத்து உறவுகள் ஊர் தேடி உவகை புரிய....... தொலைபேசி மணியொலியில் தொலைத்த இன்பங்கள் தேடி வர....... ஊரோடும் உறவோடும் உள்ளார்ந்த சிரிப்போடும் நாயனவன் நாட்டத்தினால் நல்ல செய்தி நாடி வர........ ஈத் முபாரக்! ஈத் முபாரக்!! வறியவர்க்கும்.... உரியவர்க்கும்.... நண்பருக்கும்..... பகைவருக்கும்..... நல்லவர்க்கும்..... தீயவர்க்கும்..... சின்னவர்க்கும்.... பெரியவர்க்கும்..... மனங்கனிந்த ஈத் முபாரக்!!! இரண்டாவது விஷயம்........ ரொம்ப நாளாக எதிர்பார்த்த வலைப்பூ

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் மழை விட்டாலும் கருப்பு இடி விடவில்லை. Posted: 21 Aug 2010 02:03 PM PDT ஆள் அரவமற்ற சாலையில் டூவீலர் சீறிப் பறந்தது. "என்னங்க" "என்ன?" "என்ன இவ்ளோ ஸ்பீடா போறீங்க.....90 கி.மீ. ஸ்பீடாமீட்டர் காட்டுது...கொஞ்சம் மெதுவா போங்களேன்" "இல்ல கொஞ்சம் ஸ்பீடா போனா இருட்டறக்குள்ள போயரலாம்" வேகமாகப் பறந்த வண்டி ஒரு வளைவில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய, படக் படக் இதயத்தோடு உட்கார்ந்திருந்தேன். உடலில் பயங்கர அசதி...அதிகாலையில் கிளம்பி 100 கி.மீ.தூரம் டூவீலரில் பயணித்து, மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் போய் ஜஸ்ட் லைக் தட்! ஒரே ஆட்டம் தான். உள்ளே போனவுடன் ஒரு சின்ன வளைவுக்குள் நாம் நுழைந்தால், நாம் அப்படியே தான் நிற்கிறோம், ஆனால் நம்மைச் சுற்றி அப்படியே வானவில்லின் வர்ணங்கள் ஜாலம் செய்ய, கண்ணையும் கருத்தையும் கவர்வதோடு, உலகமே நம்மைச் சுற்றுவது போல உணரச்செய்யும் விளையாட்டு. அடுத்து த்ரில்லேரியம். வானத்தில் நுழைந்து மேகத்தில் புகுந்து, அண்டசராசரியெல்லம் தாண்டி வெட்டவெளியில் வேற்று கிரங்களுக்கிடையே பயணித்து, கிரகங்களும் நட்சத்

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... Posted: 13 Jul 2010 01:14 PM PDT என் மகள் லாஃபிராவின் குழந்தைப் பருவத்தில் எழுதியது லாஃபு கண்மணியே ஆசை நடைபோடு உள்ளம் குளிர்ந்ததடி கண்ணே கண்ணுக்குள் நீதான் கருத்துக்குள் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் தேனானதே உன் வார்த்தைகள் சொல்...சொல்... (லாஃபு கண்மணியே) கன்னம் குழிய பேசினால், கன்னல் சாற்றின் ஞாபகம் சின்ன விழிகள் பார்க்கையில் மின்னல் தோன்றும் ஞாபகம் தன்னை மறந்த ராகத்தில் ஜோதியாகும் பூமுகம் தென்றல் வந்து வீசயில் தழுவி பார்க்கும் தேன்சுகம் வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே பூவில்லாமல் போனால் வாசமில்லை கண்ணே பூப்போலத்தான் உன் நேசமும் நில்...நில்...(லாஃபு கண்மணியே) வீசுகின்ற தென்றலும், உன்னை வாழ்த்தி வீசுமே பேசுகின்ற வெண்ணிலா உன்னை போற்றி பேசுமே பூமி பார்க்கும் வானமும் பூமழையாய் தூவுமே தாவுகின்ற மானினம் உன்னை கண்டு பாடுமே வாழுகின்ற வாழ்வில் வசந்தங்களும் வீசும் லாஃபிராமா கண்ணே ராகங்களும் பாடும் முத்தங்களும் தந்திடவா சொல்...சொல்...(லாஃபு கண்மணியே) -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: காதல் ரோஜாவ

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் திருமண பாடல் - அன்பே என் அன்பே.... Posted: 11 Jul 2010 07:11 AM PDT மணமகன்: ஹாமித் மணமகள்: சலூஜா சல்ஜாமா ஹாமித் உன்மடி சேர லண்டனை விட்டு வந்தார்…. இனிய தினத்தில் பொன்மலர் சூட புதிய வாழ்வைத் தந்தார்…… கண்ணில் கனவுகள் சேரும் – உம் நெஞ்சில் புதுகவி பாடும். அன்பில் மனம் இடம் மாறும் இனி வாழ்வினில் தொடர்ந்திடும் மலர் மணம்…. சா…பா… தந்த நறுமலர் நீயே தேன் தேன் சுவை ஊறிடும் தேனே! இன்று வாழ்க்கையில் சேர்ந்திடுவீரே! புகழ் நிறைந்திட இணைந்திடுவீரே!! இருவருமே சேர்ந்திடவே இனிமைகளும் கூடும். இறையருளும் வழிநெடுக புது உறவைச் சேரும்! பூ….பூ…. புது மஞ்சத்தினில் மணக்க, வாழ் நாள் என்றும் இன்சுவைகள் தொடர, அன்பு பொழிந்திட மகிழ்ந்திடுவீரே! நல்ல சாதனைக்கு வழியமைப்பீரே!! புது சுகத்தில் புவி மறக்க இனி தொடரும் இனிமை அந்தபுரத்தில் ஆட்சி அமைக்க, தரும் சுவையோ புதுமை! - சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… கண்களில

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி... Posted: 10 Jul 2010 12:02 PM PDT மணமகள்: சலூஜா மணமகன்: ஹாமித் மணநாள்: 23.05.2010 சலுஜாமா பைங்கிளி இணை ஹாமித் துணையினி சிரித்தாடும் மலர்கொடி சாய்ந்தாலே அவன்மடி இதழ் இரண்டும் கவிமொழி கனவோடு இவள்விழி மணம் வீசும் மலர் இனி…. புது வாழ்க்கை இந்நாளிலே, மணம் இனிக்க வருகிறதே! ஒரு தேவ குமாரனை நினைத்திதயம் உருகியதே!! புதுகவிதைகள் படித்திடுமே, கனவினிலே, கனவினிலே, அவனிருவிழி உனையிழுக்க மகிழ்ந்து நின்றாய் நனவினிலே, பொழியட்டுமே காதல் மழை அது தான் இனி எந்நாளும் சுவை சுவை!! கொம்புத் தேனாய் உன் வாழ்வினி இனித்திடுமே கனிந்திடுமே! மஞ்சம் நோக்கி உன்காலடி தயங்கிடுமே, தவித்திடுமே!! இரு மணங்களும் இணைந்திடவே பெருகிடுமே காதலலையே, புது உறவினி மலர்ந்திடவே பனி பொழியும் முதல் முறையே, மலர்கணைகள் மலர் தொடுக்க, பூஞ் சோலையில் உலாவி மகிழ்ந்திட!! - சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி (அனல் மேலே..) எந்த காற்றின் அல

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் இணையத்தில் பணம் சம்பாதிக்க... Posted: 26 Jun 2010 01:50 AM PDT வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது. உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே! இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். 'தொலைக்காட்சியி