இடுகைகள்

அக்டோபர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

LOVE

படம்
கடந்து போன போது..!! காதல் சொன்னபோது தந்த ரோஜா இறந்துவிட்டது அவள் தூக்கி எறிந்தபோது.. கொல்லப்பட்டது அவைகள் ஏறி சென்றபோது.. *************************** இறுக்கங்கள் தளர்த்தபட மனமில்லை நெருக்கங்கள் குறைக்கப்பட மனமில்லை தூரங்கள் அதிகப்பட மனமில்லை இருந்தாலும் வேறு வழியில்லை.. விடிந்துவிட்டது.. போய் பல் துலக்கு..!! ****************************** செல்லாதே என்னை விட்டு சில தூரம் போனாலும் தொடர முடியவில்லை உன்னை.. செல்லாதே என்னை விட்டு சில அடிகள் கடந்தாலும் பிரிய முடியவில்லை உன்னை.. செல்லாதே என்னை விட்டு சில மணித்துளிகள் நடந்தாலும் மறக்க முடியவில்லை உன்னை.. இப்படி எல்லாம் புலம்புகிறேன்.. நீ விடிகாலையில் கட்டில் விட்டு கடந்து போன போது..!!

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு

படம்
’என்’ எழுத்து இகழேல் <> தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு Posted: 23 Oct 2009 11:30 PM PDT நாள் நட்சத்திரம் பார்க்காமல், ஜாதகக் குறிப்பையும் புரட்டாமல், மணம் முடித்தன சுக்கிலமும் சுரோணிதமும்! இரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள இதயமாய் துடித்தேன் நான்! குழாய் மூலம் வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவது போல நேரத்துக்கு நேரம் எனக்கு சோறு பாய்ச்சினார்கள்! பேரில் பனி இருந்தாலும் இந்த குடத்துக்குள் குளிரில்லை! நீரில் நான் மிதப்பதால், தண்ணீர் பஞ்சம் எனக்கில்லை!! இடத்தகராறு நிலத்தகராறு நான் செய்யாமல், கிடைத்த இடத்தில் குந்திக் கொள்வேன்! திட உணவு உண்ணாவிட்டாலும், சத்துக்களை உறிஞ்ச மட்டும் முந்திக் கொள்வேன்!! தடைச்சுவராய் தோள்சுவர்கள், தாண்டிடுவேன் ஒரு நாள் நான்! விடைதருவேன் கருவறைக்கு வியனுலகைக் கண்டிடவே!! கோபமென்றாலும் குஷியென்றாலும் விடுவேன் ஒரு உதை! என் உதைக்கு மனிதவதைத் தடுப்பு சட்டத்தில் தண்டனை தர வழியில்லை என்பதால், தைரியமாகச் சொல்கிறேன் இதை!! அம்மா! நீ தூங்கும் போது உனக்கே தெரியாமல் மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும் அப்பாவின் செய்கையை, நீ அறிவாயா

சீரியல் தாய்

ஷேக் அப்துல்காதர் சீரியல் தாய்   திரை மறைவில் சுகப் பிரசவங்கள் போய் இன்று ... கட்டுப் பணத்தோடு.. கட்டிலில் குறை பிரசவங்கள் இவர்கள் இன்றைய யுகத்து இயந்திரத் தாய்க்குலங்கள் இவர்கள் குழந்தை வளர்ப்பதே அலாதியானது... கருப்பை திறந்து. . . கண்கள் திறக்காத போதே ஆயாக்களைத் தேடும் அவசரத் தாய்க்குலங்கள் தாய்ப்பால் போய் தாதிப் பாலும் போய் வேதிப் பாலும் சிலநேரம் கள்ளிப்பாலும் புகட்டுகின்றனர்   ஆம்..! இவர்கள் இன்றைய யுகத்து இயந்திரத் தாய்க்குலங்கள் இவர்கள் குழந்தை வளர்ப்பதே அலாதியானது!... " மெகா" சீரியல் முடிந்தும் சோகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் சமையலறை ஒருபுறமிருக்க சக்கர நாற்காலியில் நடை பயின்று FM சப்தத்தில் கண்ணயர்கின்றனர்! இக்கால மழலைகள்.

அயல்நாட்டு தீபாவளி

படம்
அயல்நாட்டு தீபாவளி Posted: 16 Oct 2009 09:28 PM PDT தாய்தந்தை தாள் பணிந்து கண்விழிக்கும் நன்னாளும் வாசலிலே நீர்தெளித்து, கோலமிட்டு முடிப்பதுவும், கிண்கிணியாய் சிரிப்பொலிக்க கிணற்றடியில் குளிப்பதுவும் வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திருநாளினிலே! தாயெங்கே, தந்தையெங்கே, கிணறெங்கே, சிரிப்பெங்கே? ஆனாலும் பெருநாளும் வந்தேதான் செல்கிறது! சந்தோஷம் எதுவென்று தேடித்தான் பிடித்தாலும் சம்சார சாகரத்தின் அலையிங்கு இல்லையடா!! பட்டாசு வெடிவெடித்து உற்சாகம் புரண்டோட, பட்டாடை சரசரக்க உற்றாரைக் காண்பதுவும், தோழியரின் கரம்பிடித்து ஊர்க்கதைகள் பேசுவதும் வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திரு நாளினிலே! பட்டாசு இருந்தாலும் வெடிவைக்க இடமில்லை, பட்டாடை அணிந்தாலும் பாழ்மனதில் நிறைவில்லை எட்டாத கனிக்காசை மனமெல்லாம் இப்போது! விட்டாலும் விலகாத எண்ணத்தில் தப்பேது? தாய் செய்யும் பட்சணத்தை நாம் திருடி வைத்திருந்து போய் ஒளிந்து தின்னும் போது நாவினிக்கும் தனிசுவைதான்! மாலையிலே குடும்பத்தோடு குதூகலிக்கும் நேரங்காலம், மங்கலாக மனவெளியில் குதியாட்டம் போடுதடா! உயிரெல்லாம் தாய்நாட்டில் உடல்மட்டும் அயல்கூ

E Mail News

படம்

அன்புள்ள மனைவிக்கு

படம்
அன்புள்ள மனைவிக்கு துபாயிலிருந்து சுல்தான் , மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான் அன்புள்ள மனைவிக்கு , நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.. ? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்.. என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது அன்புள்ள கணவனுக்கு தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன். அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்க

குழந்தைகளின் மனநிலை

படம்
’என்’ எழுத்து இகழேல் குழந்தைகளின் மனநிலை Posted: 13 Oct 2009 09:50 AM PDT "கண்ணா...வெளியே போனால், எதுவும் கேட்கக் கூடாது. அப்படினா வா... இல்லாட்டி வேண்டாம்.. வீட்டிலேயே இருந்துக்கோ" இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்த காலம் போய், "கண்ணா வெளியே போகலாம், வரியா?" "எனக்கு எதாவது வாங்கித் தர்ரதுனா வரேன், இல்லாட்டி வரல" இப்படி சொல்ல ஆரம்பித்தான் என் ஆறு வயது மகன் லாமின். பணத்தின் அருமை கொஞ்சமும் தெரியாமல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் கேட்டு அடம் பிடிப்பான். அந்த பொருள் அவனுக்கு தேவையில்லை அல்லது உபயோகமில்லை என்று எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை. ஆனால்... ஆனால்...எங்கள் வீட்டு முருங்கை மரம் காய்க்க ஆரம்பித்த போது, அக்கம் பக்கம், உறவுகளுக்கெல்லாம் கொடுத்தது போக நிறையவே இருந்தது. அதை என்னவர், பக்கத்து கடையில் கொடுத்து காசு வாங்கி வர என் மகனிடம் சொல்ல, ரொம்ப ஆர்வமாக முருங்கைக்காய் விற்ற பணத்தை உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தான். எங்களிடம் காசு வாங்கி போய், கடையில் பலூன் போன்ற பொருட்கள் வாங்குவானே தவிர, முருங்கைக்காய்காசை தொட மாட்டான். அது தன் பணம

அரபு சீமையிலே... - 10

படம்
அரபு சீமையிலே... - 10 Posted: 11 Oct 2009 05:02 AM PDT செல்வந்தர் வீட்டு செல்வங்களையெல்லாம் செவ்வனே வளர்க்க செவிலித் தாய்கள், நியமிப்பது அந்த ஊரின் வழக்கம்! அதற்கென கூலியும் கொடுப்பது பழக்கம்!! தகப்பனில்லாப் பிள்ளை - எனவே வளர்பணம் அதிகம் கிட்டாதென அருமைப் பிள்ளை முஹமதுவை பெருமை பொங்க வளர்த்திடவே யார்க்கும் எவர்க்கும் துணிவில்லை! சேர்த்து வளார்க்க மனமில்லை!! மெலிந்த கோவேறு கழுதை - மடிவற்றி நலிந்த ஒட்டகை தன்னை இழுத்தபடி இறுதியாக ஹலிமா வந்தார்! வளக்கவொரு பிள்ளை கிடைக்காமல் நொந்தார்!! பாலகர் முஹமதுவைக் கண்டார்! சேவகம் செய்ய மனம் கொண்டார்!! செய்கூலி குறைந்தாலும், சேதாரமின்றி நான் வளர்ப்பேன், என, மெய்யோடு மெய்யாக சேர்த்தணைத்தார் திருமலரை! சன்மானம் கிடைக்காவிட்டாலும் தன்மானம் காக்க வேண்டுமென, எடுத்துச் சென்றார் முஹமதுவை! ஏந்தல் ரசூல் அஹமதுவை!! அநாதையாம் முஹமதுவை அற்புத பிள்ளை அஹமதுவை பொக்கிஷமாய் அரவணைக்க், மார்பில் பால் சுரந்தது! ஒட்டகமும் மடு பெருத்து கரந்தது!! அனைவர் பசியும் தீர்ந்தது! அகமும் முகமும் குளிர்ந்தது!! களைத்துச் சோர்ந்திருந்த கோவே