ஆரோக்கியப் பெட்டகம்: தக்காளி
வீட்டில் வேறு எந்தக் காய்கறி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தக்காளி இருந்தால் போதும்... சூப் செய்து குடிக்கலாம். ரசம் வைக்கலாம். தக்காளியை மட்டுமே சேர்த்து சாம்பார் வைக்கலாம். சாலட்டாக சாப்பிடலாம். அவசரப் பசிக்கு ஜூஸாக அடித்துக் குடிக்கலாம். இப்படி தக்காளியின் பயன்பாடுகளை பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். வேறு எந்தக் காயாக இருந்தாலும் தொடர்ந்து 2 நாட்களுக்கு எடுத்துக் கொண்டாலே அலுத்துச் சலிக்கும். ஆனால், தக்காளி இல்லாத சமையல் ஒரு நாளும் ருசிப்பதில்லை! ‘‘சுவையை மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கான நிறைய நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. இதோ அவர் தருகிற தக்காளித் தகவல்கள்... ‘‘மிகக் குறைந்த கலோரி கொண்ட காய்களில் ஒன்று தக்காளி. அதே நேரம் அதை ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம். ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை வைட்டமின்களையும் தாதுச்சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அருமையான காய் இது. லிஹ்நீஷீஜீமீஸீமீ என்கிற மிகவும் சக்தி வாய்ந்த இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடன்ட் தக்காளியில் அபரிமிதமாக இரு...