இடுகைகள்

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு

உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும்.  இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை  யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.  சிலர் உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற் கொள்வார்கள். இதனால் மட்டும் உடல் எடை குறையாது. எப்போதும் ஒரே  மாதிரி யான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் தொப்பை ஏற்படுகிறது. அதேபோல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. க்ரீன் டீ யில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கள் மட்டுமின்றி, கொழுப்புகளை கரைக்கும் பொருட்களும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க தின மும்  காலையில் க்ரீன் டீயை குடித்து வர வேண்டும். பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள டாக்ஸின்களை (வேதிப்பொருள்)  வெளி யேற்றுவ...