இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல் மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா? Posted: 04 Sep 2013 08:10 AM PDT நான் போன மாதம் என் வேலை விஷயமாக ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. நன்கு படித்து ஈரோட்டில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியும் ஒரு ஸ்கூலும் நடத்தி வருபவர். என் கணவரின் உடல்நிலை பற்றியும், மூளையில் ஹெமரேஜ் ஆனது பற்றியும் வலது கை இயக்கம் சரியாக மருந்தே இல்லை என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே அவரின் மொழியில் தருகிறேன்: "உங்க பெற்றோர் வீடு இருப்பதாக சொல்லும் கந்தசாமி வீதியில் குடியிருக்கும் முஹமதலியை உங்களுக்கு தெரியுமா?" "தெரியும் ஆனால் அவ்வளவாக பழக்கம் இல்லை" "மேடம்... அவருடைய பேரன் 3 வயது குழந்தை. பிறந்ததில் இருந்து ஹார்ட்டில் சின்னதாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் குடும்பம் இருப்பது சவூதியில். அவர்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கும் சென்று வந்தனர். அக்குழந்தை கிராஅத் ஓதும் அழகைக் கண்டு சவூதிகளே வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த குழந்தை இந்தியாவில் இருந்த போது திடீரென்று சுயநினைவை

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்.... நன்றி சகோதரா... எழுதி வைக்க நேரமில்லையே! சொந்த கதை! நொந்த கதை! அரபு சீமையிலே... - 17 பாடி வாழ்க்கை - 5 மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்.... Posted: 23 Jun 2010 07:28 AM PDT அது ஒரு அழகான நந்தவனம். பூத்துக் குலுங்கும் அழகிய பூக்களின் வாசனை அனைவரையும் ஈர்த்தது. ஓங்கி உயர்ந்த மரங்களின் ஒய்யாரக் கிளைகளில் ஒயிலான பறவைகள் எந்நேரமும் பாடிக் கொண்டே இருந்தன. அந்த நந்தவனத்தில் ஒரு சின்ன சுண்டெலி ஒன்று இங்குமங்கும் ஓடி சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. அது செய்யும் சேட்டைகளை ரசிக்க, மயிலினங்களும் மான் கூட்டங்களும் பச்சைக் கிளிகளும் பாடும் பறவைகளும் சிங்கங்களும் சிறும் சிறுத்தைகளும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தன. இவை அனைத்தையும் சுண்டெலி தன் நண்பர்களாக்கிக் கொண்டது. இவ்வாறு சந்தோஷமும் சங்கீதமும் நிறைந்திருந்த வேளையில், ஒரு நாள் லேசாக மழை தூற ஆரம்பித்தது. விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், அவ்வப்போது மட்டும் சுண்டெலி தலை காட்டிக் கொண்டிருந்தது. அதனால், அதை எதிர்பார்த்திருந்த அதன் நண்பர்களும்

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை Posted: 02 Feb 2013 11:23 AM PST மகன் லாமின் முன்பு மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கம் பக்கமாக fair noteல் எழுத வேண்டும். பொதுவாகவே எழுதுவதென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். எழுதி முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக பள்ளி நேரம் முடிந்த பிறகும் பள்ளியில் இருத் திக் கொள்வார்கள். பல நேரங்களில் பசியோடு வாடிப் போய் கிடக்கும் பிள்ளையை நாங்கள் 7 மணிக்கு போய் அழைத்து வருவோம். அவனுடைய ஃபேர் நோட்டில் நானும் சில நேரம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மார்க்கும் சுமாராகத் தான் வாங்குவான். முடிவில் இது ஒத்துவராது என்று வேறு பள்ளிக்கு மாற்றி விட்டோம். இப்போது படிக்கும் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸ் ஃபாலோ பண்ணுகிறார்கள். இந்த சிலபஸ் கஷ்டம், புரிந்து படித்தால் தான் முடியும் என்று எல்லாரும் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் பார்க்கலாமே என்று கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் சேர்த்தோம். இப்போது லாமின் 4த் படிக்கிறான். வகுப்பில் முதல் இரண்டு இடத்துக்குள் வருகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நாளு

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்? Posted: 31 Jan 2013 05:48 AM PST உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன... (என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான். நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக்  கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப