இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் -2
இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் -2 51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும். 52) புண்கள் ஆற தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும். 53) முடி உதிர்வதை தவிர்க்க நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். 54) கட்டிகள் உடைய சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும். 55) அண்ட வாத கட்டு பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும். 56) கண் பூ குணமாக சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும். 57) இரத்த மூத்திரத்திற்கு மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும். 58) இரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும். 59) அசீரணம் குணமாக கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும். ...