பிரக்கோலி
ஆரோக்கியப் பெட்டகம்: பிரக்கோலி பிரக்கோலி என்கிற காயைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு வரவான இந்தக் காய் நம்மூருக்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், அதன் பயன்பாடு இன்னும் பரவலாகவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே சமைத்துப் பரிமாறப்படுகிற காஸ்ட்லியான காயாக இருப்பதே காரணம். சமீப காலங்களில் பிரக்கோலியின் பயன்பாடு சாமானிய மக்களுக்கும் ஓரளவுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிரக்கோலி என்பது ஒரு வகை காய் என்ற அளவில் மட்டுமே நிற்கிறதே தவிர, அதை எப்படி சமைப்பது என்கிற தகவல்கள் பலருக்கும் புரியாத புதிர்தான்! ‘‘பிரக்கோலி இத்தாலி நாட்டை சேர்ந்த காய். இது முதலில் அந்த நாட்டில்தான் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காயைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. அறிமுகம் இல்லாத இந்தக் காயில் நிறைய ஆரோக்கியங்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் ...