இடுகைகள்

வியாபாரத் தந்திரம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வியாபாரத் தந்திரம்!

படம்
சந்தையில் நெல்லிக்கனிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான் ரவி. அவன் முன்னே நான்கு மூட்டை நெல்லிக்கனிகள் இருந்தன. ஆரம்பத்தில் மூட்டையிலுள்ள நெல்லிக் கனிகள் எல்லாம் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. நேரம் செல்ல, செல்ல அவனது வியாபாரத்தில் மந்தநிலை உருவானது. அதனை நினைத்துக் கவலையடைந்தான் ரவி. "இன்று வழக்கத்திற்கு மாறாகச் சந்தையில் நல்ல கூட்டம் இருக்கிறது. ஆனால், என் நெல்லிக்கனிகள் விறுவிறுப்பாக வியாபாரம் ஆக வில்லையே...' என்று கவலையடைந்தான். ரவியின் எதிர் கடையில் சேகர் இருந்தான். அவன் தன்னிடம் உள்ள நெல்லிக் கனிகளை எல்லாம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் விற்பனை செய்து கொண்டிருந்தான். "நெல்லிக்கனியை நம்மிடம் ஒருவர் கூட வாங்க வரவில்லையே. எல்லாரும் சேகரின் கடையிலேயே வாங்குகிறார்களே. என்ன காரணமாக இருக்கும்? இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்' என்று நினைத்தான் ரவி. உடனே கடையை விட்டு வெளியே வந்தான். எதிரே சேகரின் கடையில் இருந்து வாடிக்கையாளர்கள் நெல்லிக் கனிகளை வாங்கிச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தினான். ""நீங்கள் எல்லாரும் அந்தக் கடைய...