இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நன்றி சகோதரா... Posted: 12 May 2010 07:14 AM PDT நேற்று நான் வெளியே இருந்த போது, என் தம்பி அழைத்து அன்னையர் தின நல்வாழ்த்து சொன்னான்...அவனுடைய ப்ளாக் பார்க்க சொன்னான்...! இன்று தான் அதைப் பார்க்க நேரம் கிடைத்தது...! படித்தேன்... நெகிழ்ந்தேன்...! தற்சமயம் மலேசியாவில் இருக்கும் அவனுடைய மன உணர்வுகள் நம் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், என் இனிய நண்பர்களின் பார்வைக்கு இங்கு லின்க் தருகிறேன்! எண்ணத்துளிகள் இந்நாள் அன்னையர்களுக்கும் இனி அன்னையாகப் போகிறவர்களுக்கும் எனதினிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now . Email delivery powered by Google Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் வெப் ஹோஸ்ட்டில் வோர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி? Posted: 18 Aug 2012 10:53 AM PDT தற்சமயம் உங்களிடம் இருக்கும் வெப்சைட்டில் ப்ளாகை இணைக்க வேண்டும் என்றாலோ அல்லது வோர்டுபிரஸில் உங்கள் சைட் இயங்க வேண்டும் என்றாலோ நீங்கள் வோர்டுபிரஸை உங்கள் வெப் ஹோஸ்ட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு என்ன தேவை: 1. வெப் சர்வர் (Web Server) 2. File Zilla போன்ற FTP Client 3. டெக்ஸ்ட் எடிட்டர் செய்முறை 1. முதலில் நீங்கள் வோர்டுபிரஸ் லேட்டஸ்ட் எடிசனை இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பிறகு அதை UNZIP செய்து வைத்துக் கொள்ளுங்கள். 2. FileZilla இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இது இல்லாதவர்கள் இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் டொமைன் பெயர், யூசர் பெயர், பாஸ்வோர்டு ஆகியவை கொடுக்க வேண்டும். அதை உங்கள் வெப் ஹோஸ்ட்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 3. அடுத்து நீங்கள் ஒரு MySQL டேட்டாபேஸ் உங்கள் வெப் ஹோஸ்ட்டில் உருவாக்க வேண்டும். இது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் வெப் ஹோஸ்ட் கண்ட்ரோல் பேனலில் அதற்க

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் டேப்லட் பிஸி வாங்கும் முன்பு… Posted: 14 Aug 2012 03:23 PM PDT "மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்" "தர மாட்டேன் போடா…" "டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி" என் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன். என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதை இங்கே தருகிறேன். ஆகாஷ் டேப்லட் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்று ரூ.4000 முதலே டேப்லட் கிடைக்கிறது. ஆனால் எவ்வித வசதிகள் தேவை என்று நாம் முடிவு செய்தபின் வாங்குவது நல்லது. டேப்லட் வாங்கும் முன் எனக்குள் சில கேள்விகள் இருந்தன. அவை, 1. டேப்லட்டில் ஃபோன் பேச முடியுமா? 2. அதில் விண்டோஸில் செய்யும் எல்லாம் செய்ய முடியுமா? 3. M

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் போட்டி போடலாம் வாருங்கள்! பரிசு ரூ. 10,000 Posted: 13 Aug 2012 03:24 AM PDT வீதி விஷுவல் கான்டெஸ்ட் மொத்த பரிசு – ரூ. 10,000 உங்கள் ஊரின் மண்வாசனை கலந்த புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைப்பு தர வேண்டும். உங்கள் வேலை அவ்வளவு தான். முதல் பரிசு – ரூ. 3,000 இரண்டாம் பரிசு – ரூ. 2,000 5 ஆறுதல் பரிசுகள் – ரூ. 1,000*5 = ரூ. 5,000 வீதியில் உறுப்பினராக இங்கே க்ளிக் செய்யவும்: MEMBER SIGNUP புகைப்படம் பதிவேற்ற இங்கே க்ளிக் செய்யவும்: UPLOAD PHOTOS போட்டி பற்றிய அறிவிப்பு ஆங்கிலத்தில் இங்கே: VEETHI VISUAL CONTEST விதிமுறைகள்: 1. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக பதிவு செய்து புகைப்படங்கள் அப்லோட் செய்யலாம். 2. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும். வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. 3. படம் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் ஊர் அல்லது கிராமத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நல்லது. 4. ஒருவர் எத்துணை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 17 Posted: 13 Mar 2010 07:37 PM PST அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல் பெருமதிப்பு கொண்டிருந்தனர். அவர்பொருட்டு, தம்முயிரையும் ஆசையுடன் தரத்துடித்தனர். அத்தகைய தோழரொருவர் அர்க்கம்; என்றும் நாடினார் சொர்க்கம்! சபா குன்றின் மேலிருந்த தம் மாளிகையை நபிகளுக்கு செய்தார் தத்தம்! அவர் பதினெட்டு வயது மக்ஜூமி கோத்திரத்தாரே! அதே கோத்திரத்து அபூஜஹலும் தறிகெட்டு மதிகெட்டு ஆத்திரத்தால் கொக்கரித்தானே!! அர்க்கமின் மாளிகையில் சொர்க்கத்தைத் தேடி சர்க்குண மார்க்கத்தின் தொழுகை நடந்தது; இறையை நோக்கி, அழுகை புரிந்தது! தாருஸ்ஸலாம் என்று அது பேரும் பெற்றது! சாந்தி மாளிகையில், சாந்தம் தவழ்ந்தது!! கொக்கரித்த அபூஜஹல், தாருல் நத்வாவில் கூடினான்! கட்டிளங்காளையர் பலரைக் கூட்டினான்! நபிகளுக்கு எதிராக ஒரு வேள்வியை மூட்டினான்!! விலை வைத்தான் நபிகள் தலைக்கு! உலை வைத்தான் முஸ்லிம்கள் நிம்மதிக்கு!! நூறு ஒட்டகை தருவேனென்று தத்தம் செய்தான். பேரும் புகழும் தமக்கே என்று சத்தம் செய்தான். உமர் இப்னு கத்தாப் என்னும் முப்பத்திமூன்று வயது இளவல் ஒருவர் அப்பக்கம் வந்தார்

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் காதலென்னும் தனிசுகம் Posted: 09 Aug 2012 01:54 PM PDT ஆசையெல்லாம் ஒன்றாகிப் பெண் வடிவம் எடுத்துவர நேசமெல்லாம் நிறைவாகி கண் இமையில் கனவு தர பாசவெள்ளம் கரைதொட்டு கண்மாயைத் தகர்த்துவிட தாசனுந்தன் தாள்பணியப் பேரின்பப் பரவசமே! கண்பார்க்கும் காட்சியெல்லாம் உன்னுருவாய் நான் பார்க்க பெண் இங்கே பேதையென மதிமயங்கித் தள்ளாட கன்னத்தின் செஞ்சிவப்பு நாணத்தின் மறு உருவாய் அன்பன் உந்தன் கைசேர முகம் காட்டும் நவரசமே! சாந்தி கொண்ட மனம் உந்தன் வருகைக்கு வழிபார்க்க பாந்தமாக அலங்கரித்து பதி மனதை எதிர்நோக்க ஏந்திழையாள் எண்ணம் போல என்னருகே நீயும்வர காந்தமென ஒட்டிக் கொள்ள காதலென்றும் தனிசுகமே! பார்த்த விழி பூத்திடாமல் பாதையில் நீ இணைந்திருக்க சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் செங்கரும்பாய் இனிமை தர ஆத்தங்கரை மேட்டினிலே ஆலமர நிழலினிலே பூத்திருக்கும் பூவைப்போல பூவை மனம் விரிந்திடுமே!!! - சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these e