இடுகைகள்

அக்டோபர் 25, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு

படம்
’என்’ எழுத்து இகழேல் <> தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு Posted: 23 Oct 2009 11:30 PM PDT நாள் நட்சத்திரம் பார்க்காமல், ஜாதகக் குறிப்பையும் புரட்டாமல், மணம் முடித்தன சுக்கிலமும் சுரோணிதமும்! இரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள இதயமாய் துடித்தேன் நான்! குழாய் மூலம் வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவது போல நேரத்துக்கு நேரம் எனக்கு சோறு பாய்ச்சினார்கள்! பேரில் பனி இருந்தாலும் இந்த குடத்துக்குள் குளிரில்லை! நீரில் நான் மிதப்பதால், தண்ணீர் பஞ்சம் எனக்கில்லை!! இடத்தகராறு நிலத்தகராறு நான் செய்யாமல், கிடைத்த இடத்தில் குந்திக் கொள்வேன்! திட உணவு உண்ணாவிட்டாலும், சத்துக்களை உறிஞ்ச மட்டும் முந்திக் கொள்வேன்!! தடைச்சுவராய் தோள்சுவர்கள், தாண்டிடுவேன் ஒரு நாள் நான்! விடைதருவேன் கருவறைக்கு வியனுலகைக் கண்டிடவே!! கோபமென்றாலும் குஷியென்றாலும் விடுவேன் ஒரு உதை! என் உதைக்கு மனிதவதைத் தடுப்பு சட்டத்தில் தண்டனை தர வழியில்லை என்பதால், தைரியமாகச் சொல்கிறேன் இதை!! அம்மா! நீ தூங்கும் போது உனக்கே தெரியாமல் மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும் அப்பாவின் செய்கையை, நீ அறிவாயா