இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாத சில மருந்துகளை

குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது எச்சரிக்கை தேவை !! குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல் என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை கொடுக்கின்றோம். குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால், குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன. அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும். பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் ப

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் குட மிளகாய்

படம்
நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் குட மிளகாய் சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு. இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகா

சமையலில் செய்யக்கூடாதவை...

சமையலில் செய்யக்கூடாதவை... ***************************** * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. ... * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. ....செய்ய வேண்டியவை.... *************************** * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும். * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். * ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும். * போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்

படம்
அரசு தரும் டிஜிட்டல் லாக்கர் மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது. அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே படியுங்கள். CLICK THIS BANNER TO  WATCH HOW TO USE THIS DIGITAL LOCKER இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பெற உங்களுக்கென ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஆதார் அட்டை எண்ணுடன் இந்த லாக்கர் வசதி இணைக்கப்படும். இந்த லாக்கரில், உங்கள் ஆவணங்களின் மின்னணு நகல்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். அரசின் பல்வேறு துறைகள் உங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களையும் இதில் சேவ் செய்து வைக்கலாம். இதில் உள்ள ஆவணங்களில், நீங்கள் உங்கள் மின்னணு கையெழுத்தினையும் (e-signature) போடலாம். இதனைப் பெற https://www.digilocker.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் பிரவுசர் இந்த தளத

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?

படம்
உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்! CLICK THIS BANNER TO  WATCH THIS VIDEO உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?nநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். http://uidai.gov.in/update-your-aadhaar-data.html அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது? 1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும். 2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும். 3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும். ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டி

கொய்யா

படம்
மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல; பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாப்பழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘பி‘ மற்றும் ‘சி‘ ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும், ஈறுகளும் வலுவடையும். ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை தண்ணீ