ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்
ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய் பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்டதைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது பிரதானமானது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன. இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால் வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப் பல! “கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்...’’ என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மைய மருத்துவர் யாழினி. பாகற்காயின் பயன்களைப் பட்டியலிடுவதோடு, வாய்க்கு ருசியான மூன்று பாகற்காய் ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர். ‘‘ஆயுர்வேதம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும். பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விஷயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்...