இடுகைகள்

அக்டோபர் 6, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி?

படம்
'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி? டெக்னாலஜி ச.ஸ்ரீராம், படம்: ச.ஹர்ஷினி ச மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் 'வாட்ஸ்ஆப்' எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. 'வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில் விரிவாக! என்னென்ன ஆபத்துகள்? தெரிந்தவரோ, தெரியாதவரோ... உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்... அவர்களால் உங்கள் 'வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங

கிவி பழம்: சத்துப்பட்டியல்:-

படம்
கிவி பழம்: சத்துப்பட்டியல்:- கிவிப் பழத்திற்கு சீனத்து கள்ளிப்பழம் என்ற பெயரும் உண்டு. உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள், ரசாயன மூலக்கூறுகள் நிறைந்தது கிவி. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா... * கிவிப் பழத்தின் தாயகம் மேற்கு சீனப் பிரதேசமாகும். இது சீனாவின் தேசியக் கனி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அறிவியல் பெயர் அக்டினிடியா சைனிசிஸ். வெப்ப மண்டல கனி வகைகளில் இதுவும் ஒன்று. ... * கிவிப் பழத்தின் சிறப்பம்சமே அதன் நார்ச்சத்துதான். எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் இதில் ஏராளம் உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.8 கிராம் நார்ச்சத்து அடங்கி உள்ளது. * பழத்திலுள்ள நார்ப்பொருட்கள் மலச்சிக்கலை உடனே போக்கக் கூடியது. குடற்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் தீய ரசாயனங்களை அகற்றும் திறனும், குடற் புற்றுநோய்க்கு எதிர்ப்புத்தன்மையும் வழங்கக்கூடியது கிவிப் பழத்திலுள்ள நார்ப் பொருட்கள். * 'வைட்டமின் சி' கிவிப் பழத்தில் நிறைந்துள்ளது. தினசரி உடலில் சேர்க்கப்பட வேண்டிய டி.ஆர்.ஐ. அளவில் இது 154 சதவீதம் 'வைட்டமின் சி'யைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உடலி

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:-

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:- சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி ... வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்!

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! 1. பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் முன் அதனை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடவும். ஈரத்தை சூடுபடுத்தி காயச்செய்ய கேஸ் ... சற்றே அதிகம் செலவழியும். எனவே நன்றாகத் துடைத்து வைப்பதன் மூலம் சிறிதளவு மிச்சம் செய்யலாம். 2. சமையலைத் துவங்குவதற்கு முன்பு வெட்டப்பட்ட காய்கள், மற்றும் தேவையான பொருட்களை உடனடியாகத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பத்திரத்தை வைத்து விட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவழியும்! 3. பிரிட்ஜில் வைத்த பொருளை கொதிக்க வைக்கும்போது அது சாதாரணமாக உலரவிடவும். இதனால் நேரடியாக பிரிட்ஜில் இருந்து அடுப்பில் வைத்து அது காய்ம் நேரத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும். 4. சமையல் பாத்திரம் போதுமான அளவுக்கு சூடான பிறகு பர்னரை சிம்மில் வைக்கவும். குறைந்த நெருப்பில் கொதிக்கும் உணவிற்கு ஊட்டச்சத்து அதிகம் என்று கூறப்படுகிறது. 5. சமைக்கும்போது பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் கொதிப்படைவது விரைவில் நிகழும் எரிபொருளை பெருமளவு மிச்சப்படுத்தலாம். 6. பிரஷர் குக்கர் மூலம்