இடுகைகள்

Tanzil - Quran Navigator

Tanzil - Quran Navigator

Follow அழகிய தருணங்கள்

படம்
Follow அழகிய தருணங்கள் Howdy. You recently signed up to follow this blog's posts. This means once you confirm below, you will receive each new post by email. To activate, click Confirm Follow. If you believe this is an error, ignore this message and nothing more will happen. Blog Name: அழகிய தருணங்கள் Blog URL: http://lovablemoments.wordpress.com Confirm Follow If you want to see all of the blogs you follow on the web in one easy place, sign up for a WordPress.com account . Want less...

’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல் மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா? Posted: 04 Sep 2013 08:10 AM PDT நான் போன மாதம் என் வேலை விஷயமாக ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. நன்கு படித்து ஈரோட்டில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியும் ஒரு ஸ்கூலும் நடத்தி வருபவர். என் கணவரின் உடல்நிலை பற்றியும், மூளையில் ஹெமரேஜ் ஆனது பற்றியும் வலது கை இயக்கம் சரியாக மருந்தே இல்லை என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே அவரின் மொழியில் தருகிறேன்: "உங்க பெற்றோர் வீடு இருப்பதாக சொல்லும் கந்தசாமி வீதியில் குடியிருக்கும் முஹமதலியை உங்களுக்கு தெரியுமா?" "தெரியும் ஆனால் அவ்வளவாக பழக்கம் இல்லை" "மேடம்... அவருடைய பேரன் 3 வயது குழந்தை. பிறந்ததில் இருந்து ஹார்ட்டில் சின்னதாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் குடும்பம் இருப்பது சவூதியில். அவர்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கும் சென்று வந்தனர். அக்குழந்தை கிராஅத் ஓதும் அழகைக் கண்டு சவூதிகளே வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த குழந்தை இந்தியாவில் இருந்த போது திடீரென்று சுயநினைவை ...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்.... நன்றி சகோதரா... எழுதி வைக்க நேரமில்லையே! சொந்த கதை! நொந்த கதை! அரபு சீமையிலே... - 17 பாடி வாழ்க்கை - 5 மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்.... Posted: 23 Jun 2010 07:28 AM PDT அது ஒரு அழகான நந்தவனம். பூத்துக் குலுங்கும் அழகிய பூக்களின் வாசனை அனைவரையும் ஈர்த்தது. ஓங்கி உயர்ந்த மரங்களின் ஒய்யாரக் கிளைகளில் ஒயிலான பறவைகள் எந்நேரமும் பாடிக் கொண்டே இருந்தன. அந்த நந்தவனத்தில் ஒரு சின்ன சுண்டெலி ஒன்று இங்குமங்கும் ஓடி சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. அது செய்யும் சேட்டைகளை ரசிக்க, மயிலினங்களும் மான் கூட்டங்களும் பச்சைக் கிளிகளும் பாடும் பறவைகளும் சிங்கங்களும் சிறும் சிறுத்தைகளும் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தன. இவை அனைத்தையும் சுண்டெலி தன் நண்பர்களாக்கிக் கொண்டது. இவ்வாறு சந்தோஷமும் சங்கீதமும் நிறைந்திருந்த வேளையில், ஒரு நாள் லேசாக மழை தூற ஆரம்பித்தது. விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், அவ்வப்போது மட்டும் சுண்டெலி தலை காட்டிக் கொண்டிருந்தது. அதனால், அதை எதிர்பார்த்திருந்த அதன் ந...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை Posted: 02 Feb 2013 11:23 AM PST மகன் லாமின் முன்பு மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கம் பக்கமாக fair noteல் எழுத வேண்டும். பொதுவாகவே எழுதுவதென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். எழுதி முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக பள்ளி நேரம் முடிந்த பிறகும் பள்ளியில் இருத் திக் கொள்வார்கள். பல நேரங்களில் பசியோடு வாடிப் போய் கிடக்கும் பிள்ளையை நாங்கள் 7 மணிக்கு போய் அழைத்து வருவோம். அவனுடைய ஃபேர் நோட்டில் நானும் சில நேரம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மார்க்கும் சுமாராகத் தான் வாங்குவான். முடிவில் இது ஒத்துவராது என்று வேறு பள்ளிக்கு மாற்றி விட்டோம். இப்போது படிக்கும் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸ் ஃபாலோ பண்ணுகிறார்கள். இந்த சிலபஸ் கஷ்டம், புரிந்து படித்தால் தான் முடியும் என்று எல்லாரும் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் பார்க்கலாமே என்று கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் சேர்த்தோம். இப்போது லாமின் 4த் படிக்கிறான். வகுப்பில் முதல் இரண்டு இடத்துக்குள் வருகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்? Posted: 31 Jan 2013 05:48 AM PST உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன... (என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான். நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக்  கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் புகைப்பட போட்டி முதல் சுற்று முடிவுகள் & அடுத்த போட்டி அறிவிப்பு Posted: 18 Nov 2012 07:38 AM PST கீழ்கண்ட 23 புகைப்படங்களும் வீதி விஷுவல் காண்டெஸ்ட் இறுதிச் சுற்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 7 புகைப்படங்கள் பரிசு பெறும். பரிசு பெறத் தகுதியான டாப் 7 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491 ஃபோரமில் தலைப்புவாரியாக வரிசைப்படுத்துங்கள். உங்கள் தேர்வும் வீதி டீம் தேர்வும் ஒன்றாக இருந்தால், ஒருவருக்கு ரூ.2000 பரிசு உண்டு. யார் வேண்டுமானாலும் எந்நாட்டவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பார்க்க http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491 ஒவ்வொரு படத்தின் மேலும் க்ளிக் செய்தால், பெரிதுபடுத்திப் பார்க்கலாம். ...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் எழுதி வைக்க நேரமில்லையே! Posted: 11 Aug 2012 08:11 AM PDT வானத்திலே நிலவிருக்கு, கவியூறும் சுவை எனக்கு, எழுதி வைக்க நேரமில்லையே!! தோட்டத்திலே மலரிருக்கு, எழுதப்படா கவியிருக்கு, பதிந்து வைக்க காலமில்லையே!! மொட்டைமாடி தனிமையிலே, வெட்டவெளி நோக்கையிலே, வேகமாக நினைவு நகருதே!! வட்டமாக புத்தகங்கள், திட்டமாக இடம்பிடிக்க, காண அதைக் கனவு கலையுதே!! பதிவுலகம் வர ஆசை, பதில் கூறும் மனவோசை, படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!! இணையத்தில் 'லாக்'(log) ஆனால், படிப்பிங்கு 'லாக்' (lock) ஆகும், கடிவாளம் பிடித்து இழுக்குதே!! தேர்வு தரும் சுமையெனக்கு, படித்துக் களைத்த இமையிருக்கு, வேறெதிலும் நாட்டமில்லையே!! படிப்பென்னும் துணை நமக்கு, எதிர் காலம் அதிலிருக்கு, அதனால், மன வாட்டமில்லையே!! நண்பர்களுக்கு, தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நன்றி சகோதரா... Posted: 12 May 2010 07:14 AM PDT நேற்று நான் வெளியே இருந்த போது, என் தம்பி அழைத்து அன்னையர் தின நல்வாழ்த்து சொன்னான்...அவனுடைய ப்ளாக் பார்க்க சொன்னான்...! இன்று தான் அதைப் பார்க்க நேரம் கிடைத்தது...! படித்தேன்... நெகிழ்ந்தேன்...! தற்சமயம் மலேசியாவில் இருக்கும் அவனுடைய மன உணர்வுகள் நம் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், என் இனிய நண்பர்களின் பார்வைக்கு இங்கு லின்க் தருகிறேன்! எண்ணத்துளிகள் இந்நாள் அன்னையர்களுக்கும் இனி அன்னையாகப் போகிறவர்களுக்கும் எனதினிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now . Email delivery powered by Google Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610