USB தெரிந்துகொள்வோம் :
தெரிந்துகொள்வோம் : தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive- களை பயன்படுத்துவார்கள் . இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை , வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive- ல் புகுந்து , தகவல்களை பாதிக்கிறது . அப்போது கணனியில் Pendrive- வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது . ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும் . கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு , எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை . இதற்கு முதலில் , 1. Pendrive- யை கணனியில் சொருகி கொள்ளுங்கள் . 2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும் . 3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள் . இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம் . 4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம் , அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும் . 5. அதன் பின் attrib -h -s -r /s /d *.* என டைப் செய்யுங்கள் , ஒவ்வொரு பகுதிக்கும் Space ...