இடுகைகள்

மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

கல்யாணம் ஆன புது மனைவி சமைப்பதை கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னுவதில் தப்பில்லை.மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது: சாப்பிட்டது சாம்பார் ... என்று உறுதி செய்வது எப்படி ? மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய், வெங்காயம் போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார்தான். சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்து விடுவார்கள் அப்படி இருந்தாலும்அது கண்டிப்பாக சாம்பார்தான். ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்து கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள். ரசம் என்று உறுதி செய்வது எப்படி ? நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை, முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்...

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது. ஒரு எதிர்மறை சிந்தனையாளர், எப்போதும் பிறரிடம் குறைகளையே காண்பார். ஒரு ஆரோக்கிய மனிதரைக் கண்டால், அவர் நோயுற்றிருந்தால் என்ன ஆகும் என்ற வகையில் யோசனை செய்வார். அவர்கள் தங்களின் முழு வாழ்வையும், பிற விஷயங்களில் குறை கண்டுபிடித்தே வீணாக்குவார்கள். அதே சமயத்தில் நேர்மறை சிந்தனையாளர் என்பவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களிலுமே அதே எண்ணத்துடன் இருக்க முடியாது. ஒரு சில விஷயங்களில் அவர் எதிர்மறையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். அந்த விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஒருவருக்கு வாழ்வில் எதாவது ஒரு சூழலில் அல்லது சூழல்களில் எதிர்மறை எண்ணங்களை வந்தே தீரும். உதாரணமாக, தேர்வை சரியாக எழுதாததால் அதில் தோல்வியடைந்து விடுவோமா? என்று நினைப்பது அதில் ஒருவகை. ஆனால் இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான ...

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு

உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும்.  இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை  யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.  சிலர் உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற் கொள்வார்கள். இதனால் மட்டும் உடல் எடை குறையாது. எப்போதும் ஒரே  மாதிரி யான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் தொப்பை ஏற்படுகிறது. அதேபோல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. க்ரீன் டீ யில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கள் மட்டுமின்றி, கொழுப்புகளை கரைக்கும் பொருட்களும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க தின மும்  காலையில் க்ரீன் டீயை குடித்து வர வேண்டும். பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள டாக்ஸின்களை (வேதிப்பொருள்)  வெளி யேற்றுவ...

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும்  ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா? * உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்? வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது. * தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்? தேயிலை அதிக அளவு  அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும். * புகை பிடிக்கக் கூடாது. ஏன்? உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. * இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்? சாப்பிட்ட பிறகு  லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட  உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செ...

உன்னை உயர்த்தும் 7 அதிசயம் ..!

உன்னை உயர்த்தும் 7 அதிசயம் ..! 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் ... 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு விஷயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள் 7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள் கவனிக்க ஏழு விஷயங்கள் 1) கவனி உன் வார்த்தைகளை 2) கவனி உன் செயல்களை 3) கவனி உன் எண்ணங்களை 4) கவனி உன் நடத்தையை 5) கவனி உன் இதயத்தை 6) கவனி உன் முதுகை 7) கவனி உன் வாழ்க்கையை

பாட்டி வைத்தியம் :-

பாட்டி வைத்தியம் :- 1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை ... கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும். 2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும். 3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். 4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு ப...

மிளகு மருத்துவம்:-

படம்
மிளகு மருத்துவம்:- சளி பிடித்திருந்தால் மிளகை எடுத்து ஊசி முனையில் குத்தி தீயில் வாட்டினால் அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தால் சளியும், மூக்கடைப்பும் சரியாகும். பக்கவாதமென்னும் பெராலிசிசஸ்யை குணப்படுத்த 50 கிராம் மிளகை தூள் செய்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் நன்றாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். அதை பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மீது தினமும் இந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால் விரைவில் குணமடையும். ஒவ்வாமை என்னும் அலர்ஜியா? ஒத்துவராத உணவால் ஒவ்வாமை ஏற்பட்டால் ... கொஞ்சம் மிளகுத் தூளை ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் பகுதியாக வற்றும்படி காய்ச்சிக் குடித்தால் உஷ்ணம், அஜீரணம், பேதி, தொண்டைக்கம்மல், சாதா காய்ச்சல் போன்றவற்றிற்கு இந்நீர் மிகவும் உதவும். மிளகுத்தூளை உச்சந்தலையில் நன்றாகத் தேய்த்தால் தலைவலி நீங்கும். ஒரு தேக்கரண்டி அளவு மிளகும், அதே அளவு சர்க்கரையும் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைக்கவும். வலி குறையும் வரை வைத்தால் விரைவில் பல்வலி குணமாகும். See More Like Like · · Share

'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி?

படம்
'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி? டெக்னாலஜி ச.ஸ்ரீராம், படம்: ச.ஹர்ஷினி ச மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் 'வாட்ஸ்ஆப்' எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. 'வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில் விரிவாக! என்னென்ன ஆபத்துகள்? தெரிந்தவரோ, தெரியாதவரோ... உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்... அவர்களால் உங்கள் 'வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங...

கிவி பழம்: சத்துப்பட்டியல்:-

படம்
கிவி பழம்: சத்துப்பட்டியல்:- கிவிப் பழத்திற்கு சீனத்து கள்ளிப்பழம் என்ற பெயரும் உண்டு. உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள், ரசாயன மூலக்கூறுகள் நிறைந்தது கிவி. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா... * கிவிப் பழத்தின் தாயகம் மேற்கு சீனப் பிரதேசமாகும். இது சீனாவின் தேசியக் கனி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அறிவியல் பெயர் அக்டினிடியா சைனிசிஸ். வெப்ப மண்டல கனி வகைகளில் இதுவும் ஒன்று. ... * கிவிப் பழத்தின் சிறப்பம்சமே அதன் நார்ச்சத்துதான். எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் இதில் ஏராளம் உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.8 கிராம் நார்ச்சத்து அடங்கி உள்ளது. * பழத்திலுள்ள நார்ப்பொருட்கள் மலச்சிக்கலை உடனே போக்கக் கூடியது. குடற்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் தீய ரசாயனங்களை அகற்றும் திறனும், குடற் புற்றுநோய்க்கு எதிர்ப்புத்தன்மையும் வழங்கக்கூடியது கிவிப் பழத்திலுள்ள நார்ப் பொருட்கள். * 'வைட்டமின் சி' கிவிப் பழத்தில் நிறைந்துள்ளது. தினசரி உடலில் சேர்க்கப்பட வேண்டிய டி.ஆர்.ஐ. அளவில் இது 154 சதவீதம் 'வைட்டமின் சி'யைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உடலி...

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:-

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:- சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி ... வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்...

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்!

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! 1. பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் முன் அதனை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடவும். ஈரத்தை சூடுபடுத்தி காயச்செய்ய கேஸ் ... சற்றே அதிகம் செலவழியும். எனவே நன்றாகத் துடைத்து வைப்பதன் மூலம் சிறிதளவு மிச்சம் செய்யலாம். 2. சமையலைத் துவங்குவதற்கு முன்பு வெட்டப்பட்ட காய்கள், மற்றும் தேவையான பொருட்களை உடனடியாகத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பத்திரத்தை வைத்து விட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவழியும்! 3. பிரிட்ஜில் வைத்த பொருளை கொதிக்க வைக்கும்போது அது சாதாரணமாக உலரவிடவும். இதனால் நேரடியாக பிரிட்ஜில் இருந்து அடுப்பில் வைத்து அது காய்ம் நேரத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும். 4. சமையல் பாத்திரம் போதுமான அளவுக்கு சூடான பிறகு பர்னரை சிம்மில் வைக்கவும். குறைந்த நெருப்பில் கொதிக்கும் உணவிற்கு ஊட்டச்சத்து அதிகம் என்று கூறப்படுகிறது. 5. சமைக்கும்போது பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் கொதிப்படைவது விரைவில் நிகழும் எரிபொருளை பெருமளவு மிச்சப்படுத்தலாம். 6. பிரஷர் குக்கர் மூலம்...

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது? புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்ச ... த்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும். ஆனால், பச்சரிசியில், உமியெடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன. எனவே, புழுங்கலரிசியே சத்தானது. கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என இன்று ஏகப்பட்ட அரிசி வகைகள் கிடைக்கின்றன. இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் கிளைசமிக் இன்டக்ஸ் (அதாவது, சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல்) குறைவு. காலையில் இட்லியோ, தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது 3 மணி நேரத்தில் செரித்து விடும். அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்தத்தில் கலந்து, சீக்கிரமே செரித்து விடுகிறது. சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 110 தான் இருக்க வேண்டும். அரிசி உணவின் மூலம் ரத்தத்தில் சேர்கிற ஆற்றலானது, தேவைக்கதிகமாக இருக்கும்பட்சத்தில் அப்படியே சேமிக்கப்படுகிறது. இது சாதாரண...

உன்னை அறிந்தால்”

உன்னை அறிந்தால்” ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. ... இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்ல...

உடலை ஆரோக்கியமாக வைத்துக்

இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நிறையபேர் ... அதிகமாக முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் டயட், பட்டினி கிடப்பது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காமல் நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டில் சிலவற்றை ஒதுக்கி சிலவற்றை சேர்த்து கொண்டாள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.. அவை என்னவென்று பார்க்கலாம். * நாம் சாப்பிடும் உணவில் எப்போதும் மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் காரம் அதிகமாக சேர்க்க கூடாது. பச்சை மிளகாய் காரத்தை கண்டிப்பாக சேர்க்க கூடாது. * எண்ணெய் அதிகமாக உள்ள உணவினை தவிர்த்து விடுங்கள். அதாவது மாலை நேரத்தில் நொறுக்கு தீனிகளை சாப்பிடாமல் வேக வைத்த காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை சேர்த்து கொள்ளுங்கள். சூப் எடுத்து கொள்ளுங்கள். * சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ் குடியுங்கள். சர்க்கரை சேர்த்தால் அதன் சத்து குறைந்து விடும். அதற்கு பதிலாக தேன், நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். * சாப்பிடும் சாப்பாடனாது ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருக்கட்டும். அதாவது இட்லி, இட...

சர்வரோக நிவாரணியாக வெண்டைக்காய்

படம்
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நல்லா போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம்.  வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு  வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக வெண்டைக்காய் உள்ளது. ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என வெண்டைக்காய் அழைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம்  வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின்  நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம். வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை.  உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து  அல்சர் பாதி...

வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய மருந்து கற்பூரவள்ளி

படம்
இந்தியா முழுவதும் கற்பூரவள்ளி விநியோகிக்கப்படுகிறது. இது தோட்டங்களில் பயிரிடப்பட்டு எந்த காலநிலையிலும் வளர்க்கலாம். இவற்றை தொட்டியிலும் வளர்க்கலாம். இந்த செடியின் இலையில் மருத்துவ மதிப்புகள் நிறைய உள்ளன. இதில் இயற்கையாக மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக சளி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். இந்த இலையை மலேரியா காய்ச்சல், இருமல், ஆஸ்துமா சிகிச்சைக்கு உபயோகப்படுத்துகிறது. மேலும் இந்த இலையை மனிதர்கள் சாப்பிட்டால் மனித உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவு...

ஆரோக்கியப் பெட்டகம்: குடைமிளகாய்

படம்
பெயரில் மட்டுமே காரம்... ஆனால், உள்ளே இருப்பது அத்தனையும் காரத்துக்கு நேர்மாறான நல்ல குணங்கள். ‘சேரிடம் அறிந்து சேர்’ என்பதற்கு  எதிராக, எந்த உணவுடன், எப்படிச் சேர்த்தாலும் தன் தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தனியாகவும் நிற்காமல் சுவை கூட்டும்  ஒரு காய் குடைமிளகாய். பச்சையாகவும் சாப்பிட ஏற்றது. சாம்பார், பொரியல் முதல் பீட்சா வரை எதனோடும் இணக்கமாகப் போவதுதான் இதன் சிறப்பு. குடைமிளகாயின் நல்ல விஷயங்களைப் பட்டியலிடுவதுடன், அதை வைத்து செய்யக்கூடிய இரண்டு புதுமையான ரெசிபிகளையும் பகிர்ந்து கொள்கிறார்  டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ். ‘‘குடைமிளகாயை ஏன் விரும்ப வேண்டும்? இந்தக் கேள்விக்கு காரணங்கள் ஏராளம். பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு  என கண்களைக் கவரும் அதன் நிறமா? எந்த உணவுடனும் பொருந்திப் போவதுடன், பிரத்யேகமான மணம் மற்றும் சுவையுடன் தன் இருப்பை  உணர்த்தும் குணமா? ஏராளமான சத்துகளை உள்ளடக்கிக் கொண்டு, ஆரோக்கியத்துக்கு உதவும் தன்மையா? இத்தனை நல்ல தன்மைகளைத்  தன்னகத்தே கொண்டிருப்பதால்தான் குடைமிளகாய் பல நாடுகளிலும் பல பாணி சமையல்களிலும் இடம் பெற...

ஆரோக்கியப் பெட்டகம்: தக்காளி

படம்
வீட்டில் வேறு எந்தக் காய்கறி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தக்காளி இருந்தால் போதும்... சூப் செய்து குடிக்கலாம். ரசம் வைக்கலாம்.  தக்காளியை மட்டுமே சேர்த்து சாம்பார் வைக்கலாம். சாலட்டாக சாப்பிடலாம். அவசரப் பசிக்கு ஜூஸாக அடித்துக் குடிக்கலாம். இப்படி தக்காளியின்  பயன்பாடுகளை பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். வேறு எந்தக் காயாக இருந்தாலும் தொடர்ந்து 2 நாட்களுக்கு எடுத்துக் கொண்டாலே அலுத்துச்  சலிக்கும். ஆனால், தக்காளி இல்லாத சமையல் ஒரு நாளும் ருசிப்பதில்லை! ‘‘சுவையை மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கான நிறைய நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்  புவனேஸ்வரி. இதோ அவர் தருகிற தக்காளித் தகவல்கள்... ‘‘மிகக் குறைந்த கலோரி கொண்ட காய்களில் ஒன்று தக்காளி. அதே நேரம் அதை ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம்.   ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை வைட்டமின்களையும் தாதுச்சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அருமையான காய் இது.  லிஹ்நீஷீஜீமீஸீமீ என்கிற மிகவும் சக்தி வாய்ந்த இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடன்ட் தக்காளியில் அபரிமிதமாக இரு...

புற்றுநோயை தடுக்கும் கொய்யா பூசணி

படம்
மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல; பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாப்பழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘பி‘ மற்றும் ‘சி‘ ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும், ஈறுகளும் வலுவடையும். ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மர...

கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு!

படம்
கல்லீரல் அழற்சி தடுக்கும் சைவ உணவு! மனிதன் உயிர் வாழ முக்கிய உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. இக்கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் ஆகும். இதில் ஏ, பி,  சி, டி, இ என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்னையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலை பாதிக்கும் வைரஸ்  கிருமிகள் ஆகும். பொதுவாக கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் அழற்சியை கடுமையான வகை,  நீடித்த கடுமையான வகை என்று இரண்டாக பிரிக்கலாம். கடுமையான வகை கல்லீரல் அழற்சி என்பது கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை நோய்  ஏற்படும். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகை பிடிக்க  வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, தோல் மஞ்சள் நிறமடைதல், வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள். நீடித்த கடுமையான வகை நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் ஹெபடைடிஸ் இருப்பது தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள...