அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து
Female ல் male இருக்கு Woman ல் man இருக்கு She ல் he இருக்கு அடடா... . ... Mrs ல் Mr ம் இருக்கார்! கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தார் . வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவர் ; அவரைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றார் . அதற்கு அவர் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றார் . எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார் . அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் க...