இடுகைகள்

உங்கள் வயதை கணிக்கலாம்.

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம். அதிசயம் ஆனால் உண்மை 1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும் ... 2)அதை இரண்டால் பெருக்கவும்.. 3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும் 4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும் 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும் 6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின்

நிலக்கடலை பற்றி தெரிந்துகொள்ளுவோம்...!!!

நிலக்கடலை பற்றி தெரிந்துகொள்ளுவோம்...!!! நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள் ... ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பய...

தாய் மார்களே

தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்.....!! ஆபத்தாம்...!! கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேச ... ம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கு எடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழக வேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்பட...

அவசியமான தொடர்பு எண்கள்

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !! பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, ... செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639 பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828 மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599 வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424 ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500 ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445 சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS ) மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 மாநகரபேருந்தில அத்துமீறல் 09383337639 போலீஸ் SMS :- 9500099100 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு. SMS : 9840983832 போக...

வெந்தயக்கீரை...

வெந்தயக்கீரை... ************************** கண் பார்வை குறை, உடல் சூடு . சீதபேதி, வயிற்றுப் போக்கு மாதவிடாய் தொல்லை தீர்க்கும் வெந்தயக்கீரை... ... வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சீராகும் . சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து ல...

விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம்

விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம் அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும். சரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. how-airplane-landing ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift) B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும் Weight=Lift Drag=Thrust த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும் விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்...

கணிணியின் முதன்மை நினைவகமே RAM

படம்
கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memory என்பது. இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். Virtual memory தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும். பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது. ... இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன் கொண்ட Ram-ம் வந்துவிட்டது. Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். RAM எதற்கு என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம். RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது. இதனால்தான் கூடுதலாக நாம் கணினியில் RAM ஒன்றை இணைத்திருப்போம். இதனால் கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது. இதையும் மீறி கணினி...

புகழ் எத்தனை வகை…?

புகழ் எத்தனை வகை…? *********************************** எல்லாப்புகழும் என்று சொல்கின்ற நமக்கு அவை எத்தனை வகை? அவை எவை? என்ற வினாக்கள் எழுகின்றதல்லவா! ... இதோ அவற்றுக்கான விடை. புகழ் நான்கு வகைப்படும். ஒன்று - அல்லாஹ் தன்னைப் புகழ்தல் இரண்டு - அடியான் அல்லாஹ்வைப் புகழ்தல். மூன்று - அல்லாஹ் அடியானைப் புகழ்தல். நான்கு - அடியான் அடியானைப் புகழ்தல். இப்படியான நான்கு வகைப்புகழ்கள் இருக்கின்றன. இவை தவிர புகழில் வேறுவகையில்லை. யார் யாரைப் புகழ்ந்தாலும் எவ்வாறு புகழ்ந்தாலும் அப்புகழ் இந்நான்கு வகைகளில் ஒன்றில் அடங்கியதாகவே இருக்கும்

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து --------------------------------------------------------- இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும். ... பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும். வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.  ...

வெள்ளைச் சீனி

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா...?? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒ ... ரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 2. பிழிந்த ச...

நான்கு மனைவி

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். ... அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவ...

மரு" (Skin Tag) உதிர அருமையான வழி முறை...!

மரு" (Skin Tag) உதிர அருமையான வழி முறை...! இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். ... அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை. அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும்பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்பப் பெற

மொபைல் நிறுவனங்கள் உங்களிடம் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்பப் பெற புது வசதி. இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருக்கும். இந்த பிரச்சி னையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். ... இப்படி நமக்கு Activate செய்யப் படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர் Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் .பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது. தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படு...

காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!

காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு! ********************************************************* குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது. ... * துளசி கஷாயம் சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம். * பனங்கற்கண்டு பால் ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு...

நம்பிக்கை தான் வாழ்க்கை - ஒரு சிறிய குட்டிக்கதை!

படம்
நம்பிக்கை தான் வாழ்க்கை - ஒரு சிறிய குட்டிக்கதை! நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில். ”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான். நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்… சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான். “அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?” ”சிறையிலே இருந்தேன்!” ”ஏன்?” ”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!” ”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!” ”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.” ”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?” "அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை...

விஞ்ஞானியும் டிரைவரும்! யார் புத்திசாலி? ஒரு சின்ன குட்டிக்கதை!

படம்
விஞ்ஞானியும் டிரைவரும்! யார் புத்திசாலி? ஒரு சின்ன குட்டிக்கதை! பிரபலமான அறிவியல் விஞ்ஞானி ஒருவர் நாட்டின் பல பாகங்களுக்கு சென்று அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பார். சகஜமாக பழகும் பழக்கமுடைய அவர் தனது பயணத்தின் போது தன் டிரைவரிடம் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அறிவியல் செய்திகள் பற்றி விவாதித்துக்கொண்டு செல்வது வழக்கம். டிரைவரும் அந்த விஞ்ஞானி பங்கேற்கும் அனைத்து மாநாடுகளிலும் ஒரு ஓரமாக நின்று நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருப்பார். இதனால் அவருடைய பேச்சுக்கள், மக்கள் கேட்கும் கேள்விகள் போன்றவை இந்த டிரைவருக்கு அத்துபடியாகி விட்டது. ஒருமுறை ஒரு மாநாட்டிற்காக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. வழக்கம் போல் இருவரும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருக்கும்போது யாருடைய வேலை சிரமம் மிக்கது என்ற பேச்சு தொடங்கியது. விஞ்ஞானி சொன்னார்: எங்கேயாவது வெளியில் சென்றால்தான் உனக்கு வேலை, மீதி நேரமெல்லாம் சும்மா உட்கார்ந்து விட்டு முழு மாதத்திற்கான சம்பளத்தை வாங்கிவிடுகிறாய் ! எனக்கு அப்படியா ? முழு நேரமும் ஆராய்ச்சி செய்தால்தான் விஷயங்களை விளக்க முடியும...

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்களும் தீர்வுகளும்!

படம்
பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்களும் தீர்வுகளும்! மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்க ளும் தீர்வுகளும் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத் தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை. அதே போ ல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற் பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம். சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர் ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என் றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப் படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது. உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதி யான வெளிப்படுத்தல்கள் போன்ற வைகள் இதற்கு காரணமாக விளங் கலாம். இது உங்களின் ஒட்டுமொ த்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மை யையும் உண்டாக்கி விடுகிறது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்ச ன...

உடல் இளைக்க கிரீன் டீ ! கிரீன் டீ-யின் பயன்கள் !

படம்
1. கேன்சர் உருவாவதை தடுக்கிறது. 2. சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது. 3. இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. 4. ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது. 5. எடை இழப்பிற்கு உதவி செய்கிறது . 6. முதுமை அடைவதை தடுக்கிறது , 7. இளமையாக இருக்க உதவுகிறது. 8. சீரான செரிமானத்திற்கு உதவுகிறது . 9. குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது. 10. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது . 11. எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. 12. சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. 1. கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது . 2. நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம். 3. கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்பட...

ஏ.டி.எம். கார்டு... உஷார்... உஷார்...!

படம்
முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..? கார்டு தொலைந்தால்..? சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு...

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்!

படம்
உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்! ஒ ரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. 'எனக்கு எடை கூடிடுச்சு... எப்படிக் குறைக் கிறதுன்னு தெரியலை' என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், பின்னர் அதற்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுவதுதான் நடக்கிறது. 'ஜிம்'மில் பணம் கட்டி சில நாட்கள் ஆர்வமாக உடற்பயிற்சி அல்லது ஜாகிங் என்று இருப்பவர்கள் அடுத்து அதை மறந்தே விடுகிறார்கள். சிலரோ விளம்பரங்களை நம்பி, 'கஷ்டமில்லாமல்' உடலைக் குறைக்க எண்ணி, மருந்து, மாத்திரைகள் என்று நாடுகிறார்கள். ஆனால், செயற்கை மருந்துப் பொருட்களின்றி, இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றிய விவரங்கள் இவை... தர்பூசணி தர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக, பயண வேளைகளி...