இடுகைகள்

கொய்யாபழம் சாப்பிடுங்க..

படம்
கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க.. 1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. 2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. ... 3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. 4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். 5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம். 6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. 7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது. 8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும். 9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும். 10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது..... ...

ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!

படம்
ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்! இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா. ஸ்கிரீன் லாக்! எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம். இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி. என்க்ரிப்ட் வசதி! மேலே ...

I Phone

படம்
உங்களுடைய IPhone காணமல் அல்லது தவறுதலாக தொலைந்துபோனால் அது எங்கு உள்ளது என்று பார்ப்பது எவ்வாறு ? இன்று உலகத்தில் மிகவும் பாதுகாப்பு கூடிய மொபைல் என்றால் அது iPhone அது பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்... சில நண்பர்கள் iPhone பாவனையில் இருக்கும் ஆனால் இந்த பதிவு பற்றி தெரிந்திருக்காது தெரியாதா நண்பர்கள் இதை பார்த்து பயன்பெறுங்கள். முதலில் உங்களுடைய iPhoneயில் Settings சென்று i Clout என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து Find iPhone Or iPod இதில் ஒன செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இந்த வலைத்தளம் சென்று உங்களுடைய Apple ID And Password கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள் >>> கிளிக் <<< அதன் பின்னர் கீழ் உள்ள புகைப்படத்தில் உள்ளது போல் ஒரு இருக்கும் அதில் Find என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் இதன் பின்னர் உங்களுடைய மொபைல் Online இருந்தால் உங்களுடைய மொபைல் உள்ள இடத்தை காட்டும் அது போல உங்களுடைய Apple ID எதனை மொபைல் உள்ளது என்று காட்டும்.. இலக்கம் 02 பார்க்கவும் அதன் பின்னர் இந்த மொபைல் Reset செய்வது என்றால் இதன் மூலம் Reset செய்து கொள்ள முடி...

தலையணை சரியா... தவறா?

படம்
தலையணை சரியா... தவறா? உ ப்பில்லாத சாப்பாடுபோல்தான் இங்கு பலருக்கு தலையணை இல்லாத உறக்கமும்.  ‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி. தலையணை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும், பயன்படுத்தினால் நேரும் பாதிப்புகள் பற்றியும் இங்கே பேசுகிறார் டாக்டர். ''தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ... அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது. இதுவும்கூட ராஜாக்கள், பணக்காரர்கள் என்று மட்டுமேதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர் என்று அனைவரும் தலையணைக்கு அடிமையாகிவிட்டனர். இன்று அது வளர்ந்து விதவிதமான, வண்ண வண்ணமான தலையணைகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்திருக்கின்றன. நடக்கும்போது நாம் எப்படி நேராக நடக்கிறோமோ, அப்படித்தான் படுக்கும்போதும் சமமான தரையில் நேராகப் படுத...

மெட்டி அணிந்தால் கருப்பை பாதிப்பு வராது

படம்
மெட்டி அணிந்தால் கருப்பை பாதிப்பு வராது பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அதுமட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளதாம். பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, ப ... சியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். இதனை எப்போதும் செய்து கொண்டு இருக்க முடியாது என்பதற்காக, வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியை குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றனர். See More உலமாக்கள் உலகம்

தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்!

படம்
YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்! சிறந்த பொழுதுபோக்கு வீடியோ தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோகளை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும். இதன் வசதிகள் YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோ களை லைக் செய்யும் வசதி. ஒரே நேரத்தில் பல வீடியோ களை தரவிறக்கம் செய்யும் வசதி. இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும். உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும்.  MP3 யாக மற்றும் வசதி வீடியோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி. பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம் . இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தெரிவு செய்ய முடியும். இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவினை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்...

பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் இணையதளம்!

படம்
பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் இணையதளம்! யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் வீடியோக்களையும் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஒரு சில இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அம்மென்பொருட்களை தரவிறக்கம் செய்து, அதை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பிறகே பயன்படுத்த முடியும். உடனடியாக பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளம் பயன்படும். இணையதளத்தின் முகவரி:  http://www.downvids.net/ இந்த தளத்தில் சென்று, நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் லிங்கை கொடுத்து, அருகில் உள்ள Download பட்டனை அழுத்தினால் போதும். (உதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.) அதன் பிறகு ஓரீரு வினாடிகளில், உங்களுக்கு அந்த வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து வீடியோவை சேமிக்கலாம். அல்லது அந்த லிங்கின் மீது கிளிக் செய்து, Save As Link என்பதைத் தேர்ந்தெடுத்தும், வீடியோவை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்...

பேஸ்புக் வீடியோவை எளிதாக ‘டவுன்லோட்’ செய்வது எப்படி ? தெரிந்துகொள்ளுங்கள்!

படம்
பேஸ்புக் வீடியோவை எளிதாக ‘டவுன்லோட்’ செய்வது எப்படி ? தெரிந்துகொள்ளுங்கள்! பேஸ்புக்தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை நம்மால் பார்பதற்கு மட்டுமே முடிவதுடன் அதனை இலகுவாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி பேஸ்புக் தளத்தில் வழங்கப்படவில்லை. இருந்தாலும் பேஸ்புக் தளத்தில் மாத்திரமின்றி இணையத்தில் எந்த ஒரு இடத்திலும் இருக்கக் கூடிய வீடியோ கோப்பு ஒன்றினையும் பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ள முடியும். இதற்கு பின்வரும் வழிமுறைய பின்பற்றுக. நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம். பின் அதனை keepvid எனும் தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Past செய்க. பின் Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும். இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும். பிறகு அதனை Rig...

பேட்டரி நேரத்தை அதிகபடுத்த சில வழிகள்!!

படம்
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களின் பேட்டரி நேரத்தை அதிகபடுத்த சில வழிகள்!! ஆண்ட்ராய்டு மொபைலின் வருகை பெருமளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் அதில் ஒரு சில குறைபாடு இருக்கதான் செய்கிறது.. அதில் முக்கிய பிரச்சனை battery life .சாதரன nokia phone யில் 5 நாட்கள் வரை தாக்குபிடிக்கும் baterry இந்த ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஒரு நாள் தாண்டுவதே மிக பெரும் போராட்டமாக இருக்கிறது. நம்மால் 5 நாட்கள் nokia phone அளவுக்கு பேட்டரி செயல்திறன் கொண்டுவர முடியாவிட்டலும் நாம் சொல்லகூடிய ஒரு சில விசயங்களை கடைபிடித்தால் ஓரளவுக்கு நம் பேட்டரி திறனை அதிகரிக்க முடியும்..அவைகளை பற்றி கீழே காண்போம்.. முதலில் நாம் செய்யகூடியது எது நம் பேட்டரியின் திறனை அதிகம் பயன்படுதுகிறது என்று . அதனை அறிய settings சென்று அதில் more option சென்று பார்த்தால் battery என்று ஓன்று இருக்கும் அதை open செய்தால் இந்த படத்தில் உள்ளது போல் வரும்.. இதில் எதனால் நம் பேட்டரி சீக்கிரம் மண்டைய போடுதுன்னு தெரிஞ்சிக்கலாம்..நமக்கு தேவைபடாத service மற்ரும் அப்ளிகேசன் இருந்தால் அதனை நாம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதன் மூலம் நம் பேட்டரி நேரத்தை ...

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்!!!

படம்
குழந்தைகளிடம் எப்போதும் பெற்றோர்கள் சொல்லக்கூடாத விஷயங்கள்!!!   உங்கள் குழந்தை ரொம்ப சுட்டியா? அதனால் அவர்களிடம் சற்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வீர்களா? அப்படியெனில் உங்கள் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு தான் அதிகரிக்கும். ஏனெனில் குழந்தைகளுக்கு எப்போது எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாது. பெற்றோர்களாகிய நீங்கள் தான் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளிடம் ஒருசிலவற்றை அடிக்கடி சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் அது அவர்களின் மனதில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவதோடு, அவர்கள் உங்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையிடம் எதை சொல்லக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போமா!!! கொஞ்சம் தனியா விடு! குழந்தைகள் எவ்வளவு தான் கோபமாக இருந்தாலும், தாயிடம் தான் அரவணைப்பைத் தேடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தையை கோபமாக திட்டினாலோ அல்லது அடித்தாலோ, குழந்தை உங்களருகில் வரும் போது, அவர்களை அணைத்து அவர்கள் புரியும் படி சொல்ல வேண்டும். அதைவிட்டு 'என்னிடம் பேசா...

முஸ்லிம் ஆடும்! இந்து ஆடும் ?

படம்
முஸ்லிம் ஆடும்! இந்து ஆடும் ?குட்டிகதை! ஒரு விவசாயி தன இரண்டு ஆடுகளுக்கு ஒன்றுக்கு முஸ்லிம் என்ற பெயரையும் ஒன்றுக்கு இந்து என்ற பெயரையும் வைத்து வளர்த்து வந்தார் ! இரண்டு ஆடுகளும் ஒன்றாகவே வளர்ந்தன! விவசாயியை தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுக்கிறார்! நிருபர்: ஆட்டுக்கு சாப்பிட என்ன கொடுப்பீங்க விவசாயி: முஸ்லிமுக்கா, இந்துவுக்கா ? நிருபர்: முஸ்லிமுக்கு விவசாயி: புள்ளுத்தான் நிருபர்: அப்போ இந்துவுக்கு விவசாயி: அதுக்கும் புள்ளுதான் நிருபர் : எதுல குளுப்பாட்டுவீங்க விவசாயி:: முஸ்லிமையா ? இந்துவையா ? நிருபர் : இந்துவை ? விவசாயி: தண்ணில தான் நிருபர் : அப்போ முஸ்லிமை விவசாயி: அதையும் தண்ணில தான் நிருபர்: எங்கே கட்டிபோடுவீங்க விவசாயி: முஸ்லிமையா ? இந்துவையா ? நிருபர்: முஸ்லிமை விவசாயி: கொட்டகைல தான் நிருபர்: அப்போ இந்துவை விவசாயி: அதையும் கொட்டகைல தான் நிருபர்: யோவ் ரென்டுக்கும் ஒரேமாதிரி தானே செய்ரே அப்புறமென்ன? விவசாயி: அதுவந்து இந்து ஆடு என்னோடது நிருபர்: அப்போ முஸ்லிம் ஆடு ? விவசாயி: முஸ்லிம் ஆடும் என்னோடதுதான் நிருபர்: நீ என்ன லூசா ? விவசாயி : நீங்கதான்டா லூசு ? நிருபர் : என்னய்யா சொ...

சிகரெட் பிடிப்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்…!

படம்
சிகரெட் பிடிப்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்…! சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றி பல பதிவு இந்த வலைத்தளம் வெளியிட்டு உள்ளது.ஆனால் எனது நண்பர்கள் யாரும் இதுவரை சிகரெட் நிறுத்த வில்லை.ஆகவே அவர்களின் ஆரோக்கியத்திற்காக இப்பதிவு! நுரையீரல், நாம் உயிர் வாழ கண்டிப்பாக இது ஆரோக்யமாக இருக்க வேண்டும். இதுதான் நம் உடலின் சுவாசிக்கும் பணியை செவ்வனே செய்கின்றது. இதனை பாதுக்காக தவறினால் சுவாசப் பிரச்சனை நிச்சயம். புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு போன்றவை சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதனால், நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை சீராக்கும் உணவுகள் ஆகியவற்றை புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டும். இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் நுறையீரல் பாதுகாப்பு குறித்து காணலாம்!! மாதுளை: மாதுளைகள் உடற்கூறுக்குறைகளை நீக்கவல்லவை. மேலும் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. இதன் சாறு பல்வேறு உடல...

உங்கள் வயதை கணிக்கலாம்.

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம். அதிசயம் ஆனால் உண்மை 1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும் ... 2)அதை இரண்டால் பெருக்கவும்.. 3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும் 4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும் 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும் 6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின்

நிலக்கடலை பற்றி தெரிந்துகொள்ளுவோம்...!!!

நிலக்கடலை பற்றி தெரிந்துகொள்ளுவோம்...!!! நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள் ... ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பய...

தாய் மார்களே

தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்.....!! ஆபத்தாம்...!! கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேச ... ம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கு எடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழக வேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்பட...

அவசியமான தொடர்பு எண்கள்

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !! பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, ... செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639 பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828 மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599 வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424 ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500 ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445 சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS ) மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 மாநகரபேருந்தில அத்துமீறல் 09383337639 போலீஸ் SMS :- 9500099100 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு. SMS : 9840983832 போக...

வெந்தயக்கீரை...

வெந்தயக்கீரை... ************************** கண் பார்வை குறை, உடல் சூடு . சீதபேதி, வயிற்றுப் போக்கு மாதவிடாய் தொல்லை தீர்க்கும் வெந்தயக்கீரை... ... வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சீராகும் . சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து ல...

விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம்

விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம் அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும். சரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. how-airplane-landing ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift) B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும் Weight=Lift Drag=Thrust த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும் விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்...

கணிணியின் முதன்மை நினைவகமே RAM

படம்
கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memory என்பது. இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். Virtual memory தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும். பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது. ... இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன் கொண்ட Ram-ம் வந்துவிட்டது. Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். RAM எதற்கு என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம். RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது. இதனால்தான் கூடுதலாக நாம் கணினியில் RAM ஒன்றை இணைத்திருப்போம். இதனால் கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது. இதையும் மீறி கணினி...

புகழ் எத்தனை வகை…?

புகழ் எத்தனை வகை…? *********************************** எல்லாப்புகழும் என்று சொல்கின்ற நமக்கு அவை எத்தனை வகை? அவை எவை? என்ற வினாக்கள் எழுகின்றதல்லவா! ... இதோ அவற்றுக்கான விடை. புகழ் நான்கு வகைப்படும். ஒன்று - அல்லாஹ் தன்னைப் புகழ்தல் இரண்டு - அடியான் அல்லாஹ்வைப் புகழ்தல். மூன்று - அல்லாஹ் அடியானைப் புகழ்தல். நான்கு - அடியான் அடியானைப் புகழ்தல். இப்படியான நான்கு வகைப்புகழ்கள் இருக்கின்றன. இவை தவிர புகழில் வேறுவகையில்லை. யார் யாரைப் புகழ்ந்தாலும் எவ்வாறு புகழ்ந்தாலும் அப்புகழ் இந்நான்கு வகைகளில் ஒன்றில் அடங்கியதாகவே இருக்கும்