இடுகைகள்

அன்பு முத்தத்தை எடுத்து கொண்டார்.

படம்
ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது. அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.... அன் ... று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார். யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார். அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள். அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார். அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார். பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.. நன்றி ...

செல்போனில் படம் எடுப்பதால் என்ன ஆபத்து? :-

செல்போனில் படம் எடுப்பதால் என்ன ஆபத்து? :- ++++++++++++++++++++++++++ என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம...

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!!

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!! குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு... குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இரு ... ப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம். குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி. அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். க...

எச்சாிக்கை பெண்களே

படம்
எச்சாிக்கை பெண்களே…!!! ‘வெப்கேமில் காதலன் ஆசைப்டுகிறான், வெளிநாட்டில் இருந்து கணவர் ஆசைப்படுகிறார் என்று தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் அழிந்திருந்தாலும் (Delete) மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும். அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் அழித்து (Delete) செய்து விடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன....

நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10!

படம்
நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10! உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஊட்டச்சத்து மிகமிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கருவுற்ற நேரத்திலும ஊட்டச்சத்துக்களின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான பத்து ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே.. 1. ஃபோலிக் ஆசிட் கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது. பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது. 2. இரும்புச்சத்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும். மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம். 3. கால்சியம் உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம...

உங்களுக்கு தலைவலி அடிக்கடி வருகிறதா ? அதை தடுக்க சில தகவல்கள் !!!

படம்
உங்களுக்கு தலைவலி அடிக்கடி வருகிறதா ? அதை தடுக்க சில தகவல்கள் !!! அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும். ஈரமான கூந்தல் காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்...

சிறுநீர் பரிசோதனை சிறிய விஷயம் அல்ல!

படம்
சிறுநீர் பரிசோதனை சிறிய விஷயம் அல்ல! “சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி’’ என்று சிறுநீர் பற்றி அறிமுகம் கொடுக்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான சௌந்தர்ராஜன். சிறுநீர் பற்றியும் அதன் பரிசோதனைகள் பற்றியும் நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து... மூன்று அடையாளங்கள் மருத்துவத்தில் இருக்கும் மற்ற பரிசோதனை களைவிட மிகவும் எளிமையானது சிறுநீர் பரிசோதனை. குறைந்தபட்சம் 40 ரூபாயில் செய்துவிட முடியும். சோதனை முடிவுகளையும் உடனே சொல்லிவிடுவார்கள். வெளியேறும் அளவு, நிறம், மணம் ஆகிய மூன்றின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எளிதில் எடுத்துச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது சிறுநீர்.  ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் 400 மி.லி.க்குக் குறைந்தாலோ, 2,500 மி.லி.க்கு அதிகமானாலோ, நோயின் வெளிப்பாடாகவே இருக்கும். பிறந்த குழந்தைக்கு இந்த சிறுநீரின் அள...

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?

படம்
உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா? பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா? அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்? இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com ->Settings->Security Settings -> Where You're Logged In செல்லுங்கள். பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள். மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம். ...

பெண் குழந்தைகள் பெற்ற அப்பாக்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள்!

படம்
பெண் குழந்தைகள் பெற்ற அப்பாக்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள்! நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம். 1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும். 2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா? 3. கல்வியின் முக்கியத்துவத்தை எடு...

கொய்யாபழம் சாப்பிடுங்க..

படம்
கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க.. 1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. 2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. ... 3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. 4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். 5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம். 6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. 7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது. 8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும். 9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும். 10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது..... ...

ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!

படம்
ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்! இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா. ஸ்கிரீன் லாக்! எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம். இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி. என்க்ரிப்ட் வசதி! மேலே ...

I Phone

படம்
உங்களுடைய IPhone காணமல் அல்லது தவறுதலாக தொலைந்துபோனால் அது எங்கு உள்ளது என்று பார்ப்பது எவ்வாறு ? இன்று உலகத்தில் மிகவும் பாதுகாப்பு கூடிய மொபைல் என்றால் அது iPhone அது பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்... சில நண்பர்கள் iPhone பாவனையில் இருக்கும் ஆனால் இந்த பதிவு பற்றி தெரிந்திருக்காது தெரியாதா நண்பர்கள் இதை பார்த்து பயன்பெறுங்கள். முதலில் உங்களுடைய iPhoneயில் Settings சென்று i Clout என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து Find iPhone Or iPod இதில் ஒன செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இந்த வலைத்தளம் சென்று உங்களுடைய Apple ID And Password கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள் >>> கிளிக் <<< அதன் பின்னர் கீழ் உள்ள புகைப்படத்தில் உள்ளது போல் ஒரு இருக்கும் அதில் Find என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் இதன் பின்னர் உங்களுடைய மொபைல் Online இருந்தால் உங்களுடைய மொபைல் உள்ள இடத்தை காட்டும் அது போல உங்களுடைய Apple ID எதனை மொபைல் உள்ளது என்று காட்டும்.. இலக்கம் 02 பார்க்கவும் அதன் பின்னர் இந்த மொபைல் Reset செய்வது என்றால் இதன் மூலம் Reset செய்து கொள்ள முடி...

தலையணை சரியா... தவறா?

படம்
தலையணை சரியா... தவறா? உ ப்பில்லாத சாப்பாடுபோல்தான் இங்கு பலருக்கு தலையணை இல்லாத உறக்கமும்.  ‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி. தலையணை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும், பயன்படுத்தினால் நேரும் பாதிப்புகள் பற்றியும் இங்கே பேசுகிறார் டாக்டர். ''தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ... அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது. இதுவும்கூட ராஜாக்கள், பணக்காரர்கள் என்று மட்டுமேதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர் என்று அனைவரும் தலையணைக்கு அடிமையாகிவிட்டனர். இன்று அது வளர்ந்து விதவிதமான, வண்ண வண்ணமான தலையணைகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்திருக்கின்றன. நடக்கும்போது நாம் எப்படி நேராக நடக்கிறோமோ, அப்படித்தான் படுக்கும்போதும் சமமான தரையில் நேராகப் படுத...

மெட்டி அணிந்தால் கருப்பை பாதிப்பு வராது

படம்
மெட்டி அணிந்தால் கருப்பை பாதிப்பு வராது பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அதுமட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளதாம். பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, ப ... சியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். இதனை எப்போதும் செய்து கொண்டு இருக்க முடியாது என்பதற்காக, வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியை குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றனர். See More உலமாக்கள் உலகம்

தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்!

படம்
YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்! சிறந்த பொழுதுபோக்கு வீடியோ தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோகளை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும். இதன் வசதிகள் YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோ களை லைக் செய்யும் வசதி. ஒரே நேரத்தில் பல வீடியோ களை தரவிறக்கம் செய்யும் வசதி. இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும். உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும்.  MP3 யாக மற்றும் வசதி வீடியோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி. பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம் . இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தெரிவு செய்ய முடியும். இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவினை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்...

பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் இணையதளம்!

படம்
பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் இணையதளம்! யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் வீடியோக்களையும் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஒரு சில இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அம்மென்பொருட்களை தரவிறக்கம் செய்து, அதை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பிறகே பயன்படுத்த முடியும். உடனடியாக பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளம் பயன்படும். இணையதளத்தின் முகவரி:  http://www.downvids.net/ இந்த தளத்தில் சென்று, நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் லிங்கை கொடுத்து, அருகில் உள்ள Download பட்டனை அழுத்தினால் போதும். (உதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.) அதன் பிறகு ஓரீரு வினாடிகளில், உங்களுக்கு அந்த வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து வீடியோவை சேமிக்கலாம். அல்லது அந்த லிங்கின் மீது கிளிக் செய்து, Save As Link என்பதைத் தேர்ந்தெடுத்தும், வீடியோவை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்...

பேஸ்புக் வீடியோவை எளிதாக ‘டவுன்லோட்’ செய்வது எப்படி ? தெரிந்துகொள்ளுங்கள்!

படம்
பேஸ்புக் வீடியோவை எளிதாக ‘டவுன்லோட்’ செய்வது எப்படி ? தெரிந்துகொள்ளுங்கள்! பேஸ்புக்தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை நம்மால் பார்பதற்கு மட்டுமே முடிவதுடன் அதனை இலகுவாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி பேஸ்புக் தளத்தில் வழங்கப்படவில்லை. இருந்தாலும் பேஸ்புக் தளத்தில் மாத்திரமின்றி இணையத்தில் எந்த ஒரு இடத்திலும் இருக்கக் கூடிய வீடியோ கோப்பு ஒன்றினையும் பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ள முடியும். இதற்கு பின்வரும் வழிமுறைய பின்பற்றுக. நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம். பின் அதனை keepvid எனும் தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Past செய்க. பின் Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும். இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும். பிறகு அதனை Rig...