இடுகைகள்

Files மீளப் பெறமுடியவில்லையா?

படம்
     Virus தாக்கத்தால் மறைக்கப்பட்ட Files மீளப் பெறமுடியவில்லையா? கோப்புக்கள் மீளத் தென்படும்.   உங்கள் கணணியில் ஏற்படும் வைரஸ் தாக்கத்தால் சிலவேளைகளில் கணணியில் உள்ள கோப்புக்கள் மறைக்கப்பட்டிருக்கும். இவற்றை Folder Options சென்று “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தே மீளப் பார்க்கலாம். இதில் சிலவேளை “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தாலும் வைரஸ் தாக்கம் காரணமாக தன்னிச்சையாகவே மீண்டும் மீண்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டுவிடும். இதனால் அவற்றை எப்படிப் பார்ப்பதென்று நீங்கள் எண்ணலாம். அதற்கு தீர்வாக இப்பதிவு அமையும். இதற்கு முதலில் Start Button இனுள் சென்று  “RUN” என்பதை கிளிக் செய்து அதனை திறந்துகொள்ளுங்கள். பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று SHOWALL என்பதை அடையவும். HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL இப்போ வலப்பக்கத்திலே  உள்ள CheckedValue என்பதை Double-Click  செய்து திறந்துகொள்ளவும். இதிலே “Value data” இல் “1”  என்றுள்ளதற்குப் பதிலாக 2 ஐக் கொடுத்...

Skype Video calling கை Record செய்ய

Skype Video calling கை Record செய்ய புதிய மென்பொருள். நீங்கள் அனைவரும் SKYPE பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன் உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களுடன் முகம் பார்த்து பேசி மகிழவும், போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் SKYPE பயன்படுத்துகின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட) இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே இப்பதிவு. முதலில் இந்த  லிங்கில்  சென்று உங்கள் கணினியில் SKYPEஐ இன்ஸ்டால் செய்யவும்.பின்பு இந்த  லிங்கில்  சென்று SKYPE VIDEO CALL RECORDER VODBURNER மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் நண்பர்களுடன் நீங்கள் VIDEO CHAT அடிப்பதை இலவசமாக RECORD செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த  லிங்கில்   செல்லவும்

Windows Desktop Lock செய்ய.

படம்
Windows Desktop Lock செய்ய. விண்டோஸ் டெஸ்க்டாப்பினை லாக் செய்ய நாம் அவ்வபோது கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது திடிரென கணினியை விட்டு செல்வோம். அப்போது நம்முடைய கணினியை நண்பர்களோ அல்லது வேறு யாரேனும் நம் கணினியில் உள்ள தகவல்களை பார்த்து விடுவார்களோ என்று நினைத்து நாம் பயம் கொள்வோம். ஏனெனில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பார்ப்பதால் சில பிரச்சினைகள் எழும். இதனால் நாம் நம்முடைய கணினியை அவசரமாக வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் அனைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் லாக் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக நம்முடைய கணினியின் டெஸ்க்டாப்பினை லாக் செய்யலாம். இதனால் நம்முடைய கணினியை வேறு எவராலும் அனுக முடியாது. மென்பொருளை  தரவிறக்க சுட்டி      மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பின் அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் ScreenBlur என்னும் சுருக்குவிசையை பயன்படுத்தி ஒப்பன் செய்யவும். பின் விரும்பிய கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Automation டேப்பினை தேர்வு செய்து நம் விருப்பபடி தேர்வுகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று Hotkeys டேப்பில் ...

Mail Signout பண்ண மறந்துட்டீங்களா? கவலைய விடுங்க

படம்
Mail Signout பண்ண மறந்துட்டீங்களா? கவலைய விடுங்க வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் என்பது அத்தியாவசிய தேவையாகி விட்டது என்று சொல்லலாம். ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருவதால் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில நேரங்களில் அவசர தேவைகளுக்காக பிறரது கணனி மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்துகிறோம். பிறகு அவசரத்தில் கணக்கை முழுவதும் முறைப்படி signout செய்யாமல் விட்டுவிடுவோம். இதனால் மற்றவர்கள் நமது கணக்கை எளிதாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. சிலரின் கணக்குகளில் 10,000க்கும் அதிகமான மெயில்கள் இருக்கும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் விசிட் செய்பவராக இருக்கலாம். அவர் எத்தகைய முக்கியமான தகவல்களையும் அதனுள் வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தினமும் தங்கள் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது இந்த செயல் ஆபத்தான ஒன்றாக இருக்கும். முறைப்படி signout செய்யாமல் பிறகு "அய்யோ இப்படி மறந்து வந்துட்டேனே" என வேறு இடத்தில் இருந்து தூக்கம்...

Mobile Sim Card ல் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

படம்
Mobile Sim Card ல் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? எமது 3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக் நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும் எஸ்சமஸ் ( Phonebook ,sms, call history ) போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம். இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsion னை நாம் இலவசமாக உபயோகிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை மாத்திரம் மீட்கலாம்.   மென்பொருளை பதிவிறக்கம் செய்ய.  http://www.mediafire.com/download/skyx0y79qamp65k

கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது

RAM மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது --------------------------------------------------------------------------- இந்த விடயம் சிலருக்கு இல்லை பலருக்கும் பழைய விடயமாக இருக்கலாம் ஆனாலும் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம். அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software ... களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும். அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று கவனிப்போம் 01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க. 02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க. FreeMem=Space(128000000) 03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க. 04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க. 05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள் இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான். ''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும். ''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்'' என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார். ''சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய ...

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்

படம்
சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும் பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு. இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அ...

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா? எமது கணனியில் உள்ள Driveகளில் உள்ள fileகளை மற்றவர்கள் பார்க்காதவாறு அந்த Driveவையே மறைத்து வைத்துக் கொள்ளலாம். வழிமுறை -1 1) ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும். 2) இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும். (கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்). 3) இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும். 4) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும். 5) இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும் உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும் 6) இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும் remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்திருக்கும். மீண்டும்...

செக்ஸ்க்கு தேவை வெங்காயம்

படம்
செக்ஸ்க்கு தேவை வெங்காயம் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. சிறு வயதிலேயே சர்க்கரை நோயாள் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் உள்ளனர். 30 வயதிலேயே அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கின்றனர். இது வாழ்க்கையை தொடங்கும் காலக்கட்டம். ஆனால் இவ்வியாதி இன்பமான வாழ்க்கையை துன்பமாக்குகிறது. காரணம், சர்க்கரை நோயாளிகளால் செக்ஸ் உறவில் ஈடுபடமுடிவதில் சிக்கல் உள்ளது. ஆண்களுக்கு ஆணுறுப்பு விரைப்பு தன்மைக்கு வருவதில்லை. பெண்களுக்கு, அவர்களுக்கான உறுப்பில் வறட்டு தன்மை ஏற்படுகிறது. இதனால் செக்ஸ் துன்பமாக மாறிவிடுகிறது. கணவன் – மனைவிக்குள் நடக்கும் சண்டையை தீர்க்கும் இடமாக இருப்பது படுக்கையறை. அந்த படுக்கை அறையே பயன்படுத்த முடியாமல் போனால் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். இனி அந்த பிரச்சனையில்லை. ஆண்மை சக்தி அதிகமாக்க, ஆண்மைக்கான ஹார்மோன்களை அதிகமாக்கும் ஒரு உணவு பொருள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் மருத்துவர்கள். சர்க்கரை நோயாளிகளும் கவலைப்படதேவையில்லை. ஏன் எனில் அந்த உணவு பொருளை சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். அது வெங்காயம். உரிக்க உரிக்க கடைசியில் ஒன்னுமேயில்லாத உண...

எங்கேயும், எப்போதும் மொபைலை சார்ஜ் செய்யலாம்..!

படம்
    எங்கேயும், எப்போதும் மொபைலை சார்ஜ் செய்யலாம்..! வருகிறது Plan V…! ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவதில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே பேட்டரி பேக்கப்தான். ஸ்மார்ட்ஃபோன்களில் நாம் எதிர்பார்க்கக் கூடாத ஒரு அம்சம் இதுதான். ஆனால் அதற்காக ’பவர் பேங்’ என்று அழைக்கப்படும் பேட்டரி சார்ஜர் அறிமுக்கப் படுத்தப்பட்டது. ஆனால் இதன் விலை?? இரண்டிலிருந்து மூன்றாயிரங்கள் வரை இருக்கும். ஹலோ சொல்வதற்குள் சார்ஜ் தீர்ந்து விடும் ஸ்மார்ட்ஃபோகள் தான் இப்போது அதிகம். அப்படிப்பட்ட நேரத்தில் அக்கம்பக்கத்தில் செல்போன் சார்ஜ் செய்ய இடம் இருக்கிறதா என அலைபாய்வதைவிட, ஒரு சாதாரண பேட்டரியில் செல்போனைப் பொருத்தி, அதை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? பிளான் வி சார்ஜர் இதைத் தான் சாத்தியமாகுவதாக சொல்கிறது. இந்தப் புதுமையான சாதனத்தில் ஒன்பது வோல்ட் பேட்டரியைப் பொருத்தி அதை மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் ஸ்மார்ட் போனில் இணைத்தால் 4 மணி நேரம் பேசக்கூடிய அளவுக்கு போனில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். வெறும் கீ செயின் அளவில் இருக்கும் இந்த பேட்டரியை உங்கள் கீ செயினிலேயே அழகாகக் கேர்த்து எப...

குழந்தைகள் புத்திசாலியாக பிறக்க வேண்டுமா..!

படம்
             குழந்தைகள் புத்திசாலியாக பிறக்க வேண்டுமா..! கர்ப்பிணிகள் முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம். * தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும். * கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்...

உங்க போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? இதை ட்ரை பண்ணுங்க!

படம்
  உங்க போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? இதை ட்ரை பண்ணுங்க!  தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மிகவும் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வாங்கிய போது சூப்பராக செயல்பட்ட ஸ்மார்ட் போன், சில நாட்கள் கழித்த பிறகு ஹாங் ஆகி பயன்படுத்துபவரின் பொறுமையை சோதிக்க ஆரம்பித்துவிடும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் பலரும் தவிப்பர். ஆனால் சில வழிமுறைகளை பின்பற்றினால் பிரச்சனை சரியாகி விடும்.  ஆன்டிராய்டு போன் ஹாங் ஆகுதா?  1. முதலில் உங்கள் போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.  2. பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்.  3. பவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள். 4. உங்களால் போனை ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்.  5. உங்கள் போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்...

உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா?

படம்
உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா? நிறைய பேருக்கு இன்னைக்கு இருக்கும் பிரச்சினை பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நம் இயலாமை. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் அக்கவுன்ட், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற் பல சைட்களில் வைத்திருக்கும் ஆட்களுக்கு சிலர் இன்னும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி டாஷ்லேன் – Dashlane என்னும் ஆன்லைன் சைட் உங்களுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்திருக்கிறது - அது என்னவென்றால் உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்றும் இடம் தான் இந்த Dashlane. உங்களுடைய அனைத்து ஈமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து அக்கவுன்ட்களையும் இந்த Dashlaneல் இணைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் போது ஒரே நொடியில் அத்தனை அக்கவுன்ட்க்கும் பாஸ்வோர்ட் மாற்ற முடியும். இதன் மூலம் ஏதாவது ஒரு அக்கவுன்ட் ஹேக் ஆனாலும் ஒரு நிமிஷத்தில் எல்லா அக்கவுன்ட்டின் பாஸ்வோர்ட்டை மாற்றி நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். ஃபிங்கர் பிரின்ட் ஆக்ஸஸ் உள்ள ஐஃபோன்களுக்கு உங்கள் கை நாட்டே ஜிமெயில் உட்பட அனைத்து பேங் மற்றும் ஆன்லைன் ...

டிரைவர் இல்லாமல் காரை பார்க்கிங் செய்யும் வசதி!

படம்
ஸ்மார்ட் வாட்ச் மூலம் டிரைவர் இல்லாமல் BMW காரை பார்க்கிங் செய்யும் வசதி! ஸ்மார்ட் வாட்ச் மூலம் டிரைவர் இல்லாமல் காரை பார்க்கிங் செய்யும் வசதி பிரபல‌ கார் தயாரிப்பு நிறுவனமான பி எம் டபிள்யு கார்களுக்கான பல்வேறு தொழில்நுட்பங்களை சோதனை செய்து பார்த்து வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி வருகின்றது.அந்த வகையில் அண்மையில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் தானியங்கி கார் பார்க்கிங் வசதி கொண்ட தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .விரைவில் இச்சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பார்க் செய்ய வேண்டிய உத்தரவுகளை காரில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி பார்க்கிங் கருவிக்கு கொடுத்து விட்டால் டிரைவரின் உதவி இல்லாமல் தானாகவே காரை நிறுத்த வேண்டிய இடத்தை உள் வாங்கி காரை தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்மாட் வாட்ச் மூலம் திரும்பி வந்து அதே இடத்தித்திற்கு காரை வர செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . முன்னே செல்லும் காரில் ப்ரேக் பிடிப்பதை எச்சரிக்கும் தொழில் நுட்பம்:அண்மையில் போர்ட் ந...

நிச்சயம் தவிர்க்க வேண்டிய 12 ஆரோக்கியமான உணவுகள்!

படம்
நிச்சயம் தவிர்க்க வேண்டிய 12 ஆரோக்கியமான உணவுகள்! எல்லாம் வேக மையமாய் ஆகிவிட்ட இந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக் கொள்ள கூட நேரம் போதவில்லை. இதில் இயந்திரமாய் யாரும் உட்கார்ந்து உண்ணவும் பொழுதில்லை. பின்னே எங்கே சமைப்பது! வீட்டில் சமைத்து உண்பதைக் காட்டிலும், நடந்து கொண்டே பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கி நடந்து கொண்டே உண்ணும் அளவிற்கு காலம் மாறி விட்டது. பேக் செய்யப்பட்ட உணவுகளை பார்க்கவும், விளம்பரத்தின் தந்திரங்களினாலும், அவை ஆரோக்கியமானதாக தெரிந்தாலும், அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிப்பதாகவே உள்ளன. ஃபாஸ்ட் ஃபுட் மையமாய் மாறிவிட்ட, இந்நாட்களில் நாம் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்த உணவுகளையே பெரிதும் சார்ந்து இருக்கிறோம். அத்தகைய உணவுகளின் சுகாதார நலன்களினால் திருப்தி்ப்படும் நாம், அதன் போஷாக்கு மதிப்பை கணக்கிட தவறிவிடுகிறோம். இத்தகைய உணவுகளை வேண்டாம் என்று சொல்லி, நாம் தள்ளி வைக்க அதிக காலம் பிடிக்கும். இதோ பலசரக்கு சீட்டில் இருந்து நீக்க வேண்டிய 12 ஆரோக்கியமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன் தீமைகளை அறிந்து, அதனை சாப்பிடுவதை அறவே தவிர்த்து, உ...

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!

படம்
பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு! உங்களது பிள்ளைகள் எப்போதும் இணையத்தில் இருக்கிறார்களா? அதிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்களா? அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கும் என்று கவலை படுகிறீர்களா? இனி கவலையே வேண்டாம்! எப்படி என்கிறீர்களா? வீட்டில் உள்ள கணினியை, பெரியவர்கள் இல்லாத சமயத்தில் குழந்தைகள் பயன்படுத்துவதும். அல்லது மற்றவர்கள் பயன்படுத்துவதும் தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், குறிப்பிட்ட அந்த வலைதளத்தை குழந்தைகளும் சரி... மற்றவர்களும் சரி... பார்க்காமல் இருக்க நம்மால் அந்த பக்கத்தை பிளாக் செய்ய முடியும். இது பலரும் அறிந்த விஷயம்தான் என்றாலும்.. 100-ல் 95 பேருக்கு எப்படி ஒரு வலை பக்கத்தை பிளாக் செய்வது என்பது இன்னும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. அப்படிப்பட்டவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான எளிய வழி! எப்படி பிளாக் செய்வது? கணினியில் விண்டோஸ் XP-யை பயன்படுத்தி மிக எளிதில் ஒரு பக்கத்தை எந்தவொரு செலவும் இல்லாமல் சுலபமாக பிளாக் செய்யமுடியும். அதற்கு முதலில் 'மை கம்ப்யூட்டரில்' (My Computer) விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு செல்ல...

ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள்

ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள் ஊக்கிகள் என்பது உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோயை மோசமாக்கும் காரணிகளாகும். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கு ஒரு தொகுப்பு ஊக்கிகள் இருக்கலாம். அவை மற்றப் பிள்ளைகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஊக்கிகளாக இருக்கலாம். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்க அல்லது குறைக்க முயற்சிப்பது முக்கியமானது. பொதுவான ஊக்கிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்: தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் சிகரெட் புகை மற்றும் வளிமண்டல மாசு, குளிர் காற்று, மற்றும் இரசாயனப் புகை போன்ற வேறு எரிச்சலுண்டாக்கக்கூடிய பொருட்கள் செல்லப்பிராணிகளின் முடி, இறகு, செதில், தூசியிலுள்ள நுண்ணுயிர்கள், மகரந்தப்பொடிகள், மற்றும் பூஞ்சணம் போன்ற ஒவ்வாமை ஊக்கிகள் குறிப்பிட்ட சில மருந்துகள்   சில பொதுவான ஆஸ்துமா ஊக்கிகள் தடிமல் மற்றும் காய்ச்சல் (ஃப்ளூ) போன்ற தொற்றுநோய்கள் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுநோய்கள் ஆஸ்துமா நோயின் சாதாரணமான ஊக்கிகள் ஆகும். உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பதற்கு உதவக்...

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்

படம்
க ம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் திறனிலும் அறிவிலும் அகிலத்துக்கே சவால்விடும் ஆட்களாகிவிட்டோம் நாம். புதிய மென்பொருள் எழுதுகிற அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நாம் திறமையாகக் கையாண்டாலும், பார்வைப் பாதிப்போ, முதுகெலும்புப் பிரச்னையோ வராதபடி கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது என்று நம்மில் பலருக்குத் தெரியாது .  ''கம்ப்யூட்டர் முன்பு நாம் அமரும் முறை சரியாக இருந்தால், கண் வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்!'' என்கிறார் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர் கண்ணன் புகழேந்தி. செய்தியும் படங்களுமாக கம்ப்யூட்டரைக் கையாளும் பக்குவம் குறித்து இங்கே விளக்குகிறார்... இருக்கையின் நுனிப் பகுதியில் அமர்வதும் தவறு. இதனால் தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படும். தொடைப் பகுதியில் உள்ள தசைநார்கள் இறுகி இடுப்பு வலியும் உருவாகும். தொடந்து தசை நார்கள் இறுகிய நிலையில் இருந்தால், ஆக்ஸிஜன் கிடைப்பது தடைப்பட்டு தசை நார்கள் சுருங்கிய நிலையை அடைந்துவிடும். பாதம் முழுவதும் தரையில் அழுந்துமாறு உட்கார வேண்டும். கால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் தரையைத் தொடும்படி அமர...

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், இந்தியா உணவுகள் முழுமை அடையாது. மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும். அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது. நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டை நன்றாக நறுக்கினாலோ அல்லது துண்டு துண்டாக வெட்டினாலோ அல்லது மசித்தாலோ அல்லிசினால் கிடைக்...