இடுகைகள்

ரோஹைப்னால்..பெண்களே உஷார்

பெண்களே உஷார் மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்... என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம்கேட்கும் நிலைக்கு வந்து விடுவார் இந்த மயக்கம் 11 லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்... பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு புடிக்க முடியாது மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம் அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க் ... கையில் தாய்மை அடையவே முடியாது மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்.. இதைப் பயன்படுத்தும் முறைகள் கூட தற்போது இணைய தளங்களில் உள்ளது இதற்கு மேல் என்ன செய்ய இயலும்?? மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள் மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்... ...

புத்திய தீட்டு !

படம்
கத்திய தீட்டுவதை விட புத்திய தீட்டு ! ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான். ... அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ...ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான். கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று வழக்கம் போலக் கேட்டான். அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை...

மனதைத் தொட்ட வரிகள்

படம்
மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். 2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு எ ... ன்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். 3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. 4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள். 5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். 6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது 7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!! 8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்....

காதல் பிரிந்த பின் ஒரு நாள் அலைபேசியில்.!

காதல் பிரிந்த பின் ஒரு நாள் அலைபேசியில்.! பதட்டம் இல்லாத குரலில் அவள், என்ன சொல்ல போகிறாள் என்ற கலக்கத்துடன் மறுமுனை அவன், நீ எப்படி இருக்கிற என்ற அவன் கேள்விக்கு அவள் பதில்கள்... நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன், நீ என்னை பிரிந்த பின்னும் எனக்கு ஒண்ணும் வலிக்கல்ல, எனக்கு கண்ணீர் ஒண்ணும் வரல்ல, நீ சொன்ன மாரி நான் எப்பவும் சிரிச்சுகிட்டு தான் இருக்குறேன், நீ என்ன நெனச்சு கஷ்ட்டபடாத, இப்போ எல்லாம் உன் நெனப்பு அதிகமா இல்ல, உன்ன மறந்துட்டேன்னு நினைக்குறேன், ஒரு வேள உன்ன விட அழகான, ... உன்ன விடபாசம் காட்டுற பையன் எனக்கு கிடைக்கலாம், உனக்கும் நல்ல பொண்ணு கிடைப்பா நான் prayer பண்றேன், சரி அம்மா வந்துட்டாங்க நான் அப்புறம் பேசுறேன்... பெண்கள் கண்ணீரின் மறு பெயர் அம்மா என்று யார் மாற்றி வைத்ததோ!!! புன்னகை வார்த்தையில் சிதற விட்டவள் கண்களில் ஏனோ கண்ணீர்!!! கண்களில் வந்த கண்ணீர் அவள் இதயம் நனைத்து குரலை கலைத்து அவன் மனதிற்க்கு வேதனை தரும் முன் பொய்யால் அலைபேசி துண்டித்து அழுகிறாள்!!! அம்மாவிடம் சொல்லி அழவும் வழி இல்லை, சோகங்கள் சொல்லி அழ அருகில் தோழியும் இல்லை!!! அவனை நினைத்து தன் மனதில் கதறி அழ...

எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது....?

படம்
எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது....? பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்கநேரிடும் போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள ... ் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம். முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப்செய்து விட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள். இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம். பயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே.

எதில் மகிழ்ச்சி...... ???

எதில் மகிழ்ச்சி...... ??? ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார். இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். ... உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக் கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிற...

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

படம்
பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க  நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க. பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். My Computer மீது Right Click செய்யவும். இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும். ... இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். இப்போது Change என்பதை தெரிவு செய்யவும். இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். இப்போது இதனை save செய்யவும். கம்ப்யூட்டரை Restart செய்யவும்

மகனுக்கு அம்மாவும் சொல்லவேண்டியது

கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது. காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!! 5 Marriage Lessons that Mothers Should Give to their Sons ... 1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!! மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள். 2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!! மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர...

நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது...

படம்
நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது.... காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது. ‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது. ... அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது. நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது. சிறுவன் உடனே..‘ நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் . 'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி. நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது...

இலவசமாக போன் செய்யலாம் வாங்க!!...

இலவசமாக போன் செய்யலாம் வாங்க!! ... உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் வாங்க!! ... (இன்டர்நெட் வசதி தேவையில்லை.) சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டிர ுப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம். இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால்செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன்போதும். ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும் இது வேலைசெய்யும். ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம். முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும். (இந்தியஎண்ணிலிர...

புகைப்படங்களை பேச வைப்பது எப்படி? . With Key

படம்
புகைப்படங்களை பேச வைப்பது எப்படி? . With Key இது ரொம்பவும் அருமையான மென்பொருள் ஆகும். உங்களது புகைப்படங்கள் பேசினால் எவ்வாறு இருக்கும்? இந்த Crazy Talk மென்பொருள் மூலம்  புகைப்படங்கள் அனைத்தையும் பேச வைக்க முடியும்.  உதாரணமாக : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புகைப்படத்தை நாம் பின்னணி குரல் கொடுத்து நமது விருப்பம் போன்று பேச வைக்க முடியும். நீங்கள் Crazy Talk மென்பொருள் மூலம் தயாரித்தவற்றை உங்களுக்கு விருப்பமான Formate களில் Export செய்து கொள்ள முடியும். வீடியோ (Video) பைல்களை Swf (Flash) file, Gif (Animating Image) file வடிவிலோ அல்லது exe வடிவிலோ அழகான Frame கள் போட்டு எடுக்கமுடியும். இந்த மென்பொருளில் உள்ள மேலும் ஒரு வசதி நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தின் Original Parts ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு விருப்பமான Parts ஐ பொருத்தலாம். அதாவது கண், மூக்கு, பல், போன்றவற்றை மாற்றி அமைக்கலாம்.  இந்த மென்பொருளை கீழுள்ள Link மூலம் தரவிறக்கிக் கொள்ளுங்கள். DOWNLOAD NOW CRAZY TALK இம்மென்பொருளின் Serial Key இதோ. 4071988301269 

Paint.net – இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர்

படம்
Paint.net – இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர் Photoshop மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் ஏகப்பட்ட மென்பொருட்கள் கிடைக்கின்றன.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று Paint.net. இது கிட்டத்தட்ட Photoshop தெரியாதவர்களின் போட்டோஷாப் எனலாம். அவ்வளவு எளிமையான ஒன்று இது. இதைப் பற்றி இன்று பார்ப்போம்.  கீழே உள்ளது போன்ற எளிமையான தோற்றத்தில் தான் அது இருக்கும்.      இதன் Tools bar – இல் உள்ள அனைத்துமே மிக எளிதாக, பார்த்தவுடன் விளங்கும் வண்ணம் இருக்கின்றன. மிக எளிதான இமேஜ் எடிட்டிங் வேலைகளுக்கு இது மிகவும் பயன்படும். முக்கியமாக Crop, Rotate, Resize images, Adjust colors, and Collages, போன்றவற்றுக்கு. மிகவும் உகந்தது. அதே போல இதில் History, Layer, Colors, Tools என எல்லாவற்றுக்கும் தனித்தனி சிறிய வசதிகள் உள்ளன. Special Effect – கள் வேண்டுவோருக்கு blurring, sharpening, red-eye removal, distortion, noise, and embossing போன்றவை உள்ளன. Paint – ஐ விட அதிக வசதிகள் வேண்டுவோரும், Photoshop-இல் சிறு சிறு வேலைகள் செய்பவர்கள் இதை பயன்படுத்தலாம். சிறப்...

லப்டப் வாங்கப் போறிங்களா?

லப்டப் வாங்கப் போறிங்களா? அப்படியானால் நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை! Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும். ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும். http://tamilcomputertips.blogspot.com/ இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம். லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று ...

இணைய வேகத்தை அதிகரிக்க…

படம்
இணைய வேகத்தை அதிகரிக்க… உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும். உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது. இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நீங்கள் பயன்படுத்தமுடியும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது… Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள். பின், நீங்கள் செல்லவேண்டியது Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidthஎன்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.     அதனைத் தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை தெரிவு செய்வதன்...

Double Click செய்வதற்கு

கணினி Mouse – இன் மத்திய பொத்தானை பயன்படுத்தி Double Click செய்வதற்கு கணனியினை செயற்படுத்துவதில் Mouse – இன் பயன்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது . தற்போது பாவனையிலுள்ள Mouse – கள் பொதுவாக   மூன்று பொத்தான்களை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது . இவற்றில் இடதுபுறமுள்ள பொத்தானை பயன்படுத்தி Double Click செய்யவேண்டிய தருணங்களில் நேர விரயம் ஏற்படும் . இதனை தவிர்த்து மத்தியில் காணப்படும் பொத்தானை (Middle Mouse Button) ஒரு முறை அழுத்துவதன் மூலம் Double Click செயற்பாடு கொண்டதாக மாற்றியமைப்பதற்கு   Mouse Button Control எனும் மென்பொருள் உதவிபுரிகின்றது . தரவிறக்கச் சுட்டி

licence Key யுடன் அனைத்து Software களும் இலவசம் ..

படம்
licence Key யுடன் அனைத்து Software களும் இலவசம் .. சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும். ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் அங்கீகாரத்துடன் ஒரே  இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம். புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம். இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்த...

Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி?

படம்
Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி? Pen Drive மூலம் windows 8 / 7 / XP ஐ install செய்வது எப்படி என்று இந்த பதிவின் ஊடாக பார்ப்போம்.இதை செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் இந்த முறை அனைத்தையும் விட மிக மிக இலகுவானதாக இருக்கும் என நம்புகிறேன். ஏன் Pen Drive மூலம் Install பன்ன வேண்டும் என்ற ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரண்டு  காரணங்களை கூறுகிறேன். 01.நீங்கள் CD / DVD இல்  OS ஐ install பன்னுவதைவிட மிக மிக வேகமாக Pen Drive மூலம் OS ஐ install பன்ன முடியும். 02.OS ஐ install பன்னுவதற்கு CD / DVD Drive இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன...அதுவெல்லாம் இங்கு நமக்கு தேவையில்லை! Windows 8/7/ XP ஐ உங்கள் கணினியில் image file ஆக சேமித்து வைத்து இருந்தால் மிக மிக இலகுவாக அதுவும் ஒரே ஒரு ஸ்டெப்பில் செய்ய முடியும்.அப்படி இல்லாமல் நேரடியாக CD / DVD இல் இருந்து Hard Disk இல் Copy பன்னி வைத்து இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள். 01.இங்கு சென்று PowerISO மென்பொருளை Dow...