இடுகைகள்

மது ஏன் குடிக்க கூடாது......?

மது ஏன் குடிக்க கூடாது......? இனியாவது குடிப்பீர்களா..? மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை ... சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதி...

இயற்கை மருத்துவம்..!

இயற்கை மருத்துவம்..! சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது. மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று. உதாரணமாக, ... 1. பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும். 2. கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும். 3. மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது. 4. இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது. 5. கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது. 6. உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூலிகைகளைப் பயன் படுத்திய சித்த மருத்துவர்கள், அந்த மூலிகைப் பொருள்களுக்குச் சூட்டியுள்ள காரணப்பெயரே சான்றாகும்.

கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?''

படம்
கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் ... பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,'' என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான். அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான். கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில் இருக்கிறார். எனவே அந்த அருட்கொடையை தவற வ...

இந்தச் சிறுமி யார்?

படம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்? இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா. உண்மைதான், கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார். ... 14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது. தீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா? கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே…. இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்பிய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார். சூரிய சக்தியினைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கலன் உருவாக்குவதே அவரின் இலட்சியமாய் இருந்தது. தனது ஆசிரியர்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். அதில் அவர் வெ...

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்...!!

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்...!! 1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார் . 2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார். ... 3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார். 4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார். 5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால் , எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள். 6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில் , அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது . 7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார். உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார். 9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றி...

ஆண்கள் தினம்

ஆண் அழத் தெரியாதவன் அல்ல.. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.. அன்பில்லாதவன் அல்ல.. அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்.. ... வேலை தேடுபவன் அல்ல.. தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன். பணம் தேடுபவன் அல்ல.. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.. சிரிக்கத் தெரியாதவன் அல்ல.. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.. காதலைத் தேடுபவன் அல்ல.. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.. கரடுமுரடானவன் அல்ல.. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.. இன்று சர்வதேச ஆண்கள் தினம்

உங்களுக்கு என்ன நோய்?

படம்
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- 1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறத ... ு. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். 2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...? அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங...

பிறப்பு இறப்பு சான்றிதழ்

படம்
இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத ... ்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம். இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். அது போக...

இதை யோசித்தீர்களா?

இதை யோசித்தீர்களா? தங்கை : அண்ணா, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா? அண்ணன்: கேளேன்... தங்கை : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் ... எவ்வளவு சம்பாதிகிறீர்கள்? அண்ணன் : 1000 ரூபாய் ... தங்கை : அப்படீனா எனக்கு 50 ரூபாய் தாங்கண்ணா! அண்ணனுக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 ரூபாயை கொடுத்தான். தங்கை சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டாள் . அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தாள். அண்ணன்: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்? தங்கை: முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 1000 ரூபாய் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்கண்ணா உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும். அண்ணனுக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே தங்கையை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டி நீதி: "தன்னை நேசிப்பவர்களுக் கு காட்டப்படும் அன்பை வ...

மூட்டுத் தேய்மானம்: மாற்று வழி

மூட்டுத் தேய்மானம்: மாற்று வழி **************************************************** மூட்டுத் தேய்மானம் இன்று அதிகமாகக் காணப்படும் ஒரு பிரச்சினை. இதை Osteoarthritis அல்லது sandhigata vatam என்று அழைப்போம். முதுமை, உராய்வு, அதிக வேலை செய்வது போன்றவற்றால் மூட்டுகளில் தேய்வு நிலை உண்டாகிறது. மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் இடையே cartilage என்று சொல்லக்கூடிய ரப்பரைப் போன்ற ஒரு பொருள் உள்ளது. ஆயுர்வேதம் இதை ஸ்லேஷ்மதர கலை என்று அழைக்கிறது. இது இருப்பதால் ஓர் எலும்பின் மேல் மற்றொரு எலும்பு நகர்ந்து போக முடியும். இந்த cartilage என்ற எலும்புச் சவ்வு தேயும்போது எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயும். இதனால் வலி, வீக்கம், தசை இறுக்கம் போன்றவை உருவாகும். தேய்மானம் முற்றும்போது புதிய எலும்புகள் மூட்டைச் சுற்றி முளைக்கும். தசை நார்களும், தசைகளும் பலவீனம் அடையும். 50 வயதுக்கு மேல், இது அதிகமாகக் காணப்படும். சில குடும்பங்களில் மரபு சார்ந்து வரலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படலாம், இடுப்பு மூட்டு, கணுக்கால் மூட்டு, பாத மூட்டு, குதிகால் மூட்டுகள் தேய்வடையும். எலும்பு முறிந்தாலும் தேய்வட...

அஜீரண கோளாறை விரட்ட மிக சிறந்த பத்து வழிமுறைகள்...!

படம்
இயற்கை முறையில் அஜீரண கோளாறை விரட்ட மிக சிறந்த பத்து வழிமுறைகள்...! அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம். 1.வாழைப்பழம் : வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும். மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடை...

மனைவியை மயக்குவது எப்படி?

படம்
மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!! ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!! இது ஆண்களுக்கு மட்டும். மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்! 1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு ‘உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!’ என்ன சரியா? 2. மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்! காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க. 3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட...

கணவன் மனைவி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள் கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு, செலவை வரையறுப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின...

கிராமத்து அனுபவங்கள்:-

படம்
கிராமத்து அனுபவங்கள்:- 1) Dining டேபிள் இருந்தாலும் தரையில் உக்காந்து குடும்பமா சாப்புடுரத்துக்கு நிகர் ஆகுமா? 2) A /c வச்சி தூங்கினாலும் மதியம் நேரத்துல வேப்ப மர நிழலுல தூங்குற சுகம் வருமா? ... 3) தம்மா துண்டு showerla குளிக்குரதுக்கும் பக்கத்துல இருக்குற pumpsetல குளிக்குரதுக்கும் எவ்வளவு வித்தியாசம். 4) ஹாய் how ஆர் யு? கேக்குறதுக்கும் ஏலே மாப்புள எப்படி இருக்கன்னு கேக்குறதுக்கும் எம்ம்புட்டு வித்தியாசம் இருக்கு. இன்னும் ஏராளம்.... கிராமங்கள் இன்னும் மாறவில்லை... தங்களை மறந்து இன்னும் தங்கள் உரியவர்களுக்கே அன்பு செலுத்துகிறார்கள்.

பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா?

படம்
உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா? நிறைய பேருக்கு இன்னைக்கு இருக்கும் பிரச்சினை பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நம் இயலாமை. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் அக்கவுன்ட், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற் பல சைட்களில் வைத்திருக்கும் ஆட்களுக்கு சிலர் இன்னும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி டாஷ்லேன் – Dashlane என்னும் ஆன்லைன் சைட் உங்களுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்திருக்கிறது - அது என்னவென்றால் உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்றும் இடம் தான் இந்த Dashlane. உங்களுடைய அனைத்து ஈமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து அக்கவுன்ட்களையும் இந்த Dashlaneல் இணைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் போது ஒரே நொடியில் அத்தனை அக்கவுன்ட்க்கும் பாஸ்வோர்ட் மாற்ற முடியும். இதன் மூலம் ஏதாவது ஒரு அக்கவுன்ட் ஹேக் ஆனாலும் ஒரு நிமிஷத்தில் எல்லா அக்கவுன்ட்டின் பாஸ்வோர்ட்டை மாற்றி நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். ஃபிங்கர் பிரின்ட் ஆக்ஸஸ் உள்ள ஐஃபோன்களுக்கு உங்கள் கை நாட்டே ஜிமெயில் உட்பட அனைத்து பேங் மற்றும் ஆன்லை...

உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ?

படம்
உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ? ஹாய் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு  உங்களுடைய  ஜிமெயில் கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு. என்று பாப்போம் உங்களுடைய கணக்கு எங்கு ஓபன் செய்தாலும் உங்களுடைய மொபைல் நம்பர் 'கு SMS வடிவில் Code பெற்றுக்கொள்ள முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கினை ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு செல்லுங்கள் Account Settings கிளிக் செய்து கொள்ளுங்கள் GET STARTED கொடுத்து உங்களுடைய pramery பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பாருங்க அதுக்கு பின்னர் Sign Option கொடுத்து 2-Step Verification கொடுத்து கொள்ளுங்கள் Start Setup கொடுத்து கொள்ளுங்கள் உங்களுடைய மொபைல் நம்பர் கொடுத்து உஞ்களுடைய Account கணக்கு பாதுகாப்பு கொடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் இப்ப உஞ்களுடைய ஜிமெயில் கணக்கு எங்கு ஒஎப்ன் செய்தாலும் உங்களுடைய மொபைல் SMS வடிவில் ஒரு Code வரும் அதை கொடுத்தால் மாத்திரம் உங்களுடைய கணக்கில் ஓபன் செய்து கொள்ள முடியும்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

ஜும்ஆ பயான் : கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்! அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்க ள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இ ந்தபிரச்சனைக்கு போதுமா ன சிகிச் சைகளை எடுத்துக் கொள்ளாமல், தங்களுக்கு ள் புழுங்கிக் கொள்கின்றனர். ஆனால், இந்த பிரச்ச னையை மருத்துவரின் உதவியில்லாமல் வீட்டிலேயே சரிசெய்து விடமுடியும் என் பது தான் இங்கே நல்ல செய்தியாக உள்ளது. இயற் கை மூலிகைகளை அடிப்ப டையாக கொண்ட இந்த வழி முறைகளை பின்பற்று வதால், உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உருவா க்கிட முடியும். ஆண்களே! புரோஸ்டேட் வீக் கம் வராம இருக்கணும் ன்னா… இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்த க் கூடிய பிற மருந்துக ளை பயன்படுத்தும் முன்னதாக, இந்த இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய பிறப்புறுப்பு களின் தேவைகளையும், துணைவியாரையும் திருப் தி ப்படுத்துங்கள். இயற்கை வழிமுறைகள் ...