இடுகைகள்

அரைஞாண் கயிறு

மருத்துவ ரகசியம்!. அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட் ... டால், திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம். ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண் கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண்...

யோசி சிந் தி த் து பா ர்

படம்

இவ்ளோ நடந்தும் நாய்க்கு ஒன்னும் ஆகலயா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப்பார்த்தார். ... அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, "இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை..? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?.. "முதலில் செல்வது எனது மனைவி." "என்ன ஆயிற்று அவருக்கு?" எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது., இரண்டாவது பிணம்?" அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது., உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?" அதற்கு அவர் சொன்னார், வரிசையில் போய் நில்லுங்கள்... பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

ஐந்தறிவு ஜீவன்கள்

படம்
ஐந்தறிவு ஜீவன்கள் மனிதனைவிட பாசத்தில் ஒருபடி உயர்ந்தவை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.... கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காளை மாடுகள் ரோட்டில்முட்டி மோதி விளையாடித்திரிந்தன. ... அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது. மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர். விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார...

1ஜி(1G), 2ஜி(2G) , 3ஜி(3G) ,

படம்
1ஜி(1G), 2ஜி(2G) , 3ஜி(3G) , 4ஜி(4G) என்றால் என்ன? மொபைல் தொழில்நுட்பம் புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு வளர்ந்து கொண்டே உள்ளது.மொபைல் இல்லாத ஒருவரை பார்க்கவே அரிதாக இருக்கும் அளவுக்கு மொபைல்-ம் அதன் தொழில்நுட்பமும் வளர்த்துள்ளது.மொபைல் தொழில்நுட்பத்தின் ஆரம்பம் மற்றும் பின்வந்த ஒவ்வொரு தலைமுறையிலும் என்னென்ன வசதிகள் மேம்படுத்தப்பட்டன என பார்ப்போம். 1ஜி(1G) (First Generation): (1981) 1ஜி என்பது முதல் தலைமுறை தொழில்நுட்பம். 1G ஒரு அனலாக் சிக்னல் .1G-ல் அனலாக் டிரான்ஸ்மிஷன்(analog transmission) நுட்பம் குரல் சமிக்ஞைகளை(Voice Signals) கடத்த பயன்பட்டது. இதில் AMPS(Advanced Mobile Phone System) ,Total Access Communication System (TACS & Extended TACS ,Narrowband TACS,Japanese TACS),Nordic Access Communications (NMT)450 & 900), C-NETZ, Radiocom2000, Radio Telephone Mobile System (RTMS), Nippon Telephone & Telegraph என்று வெவ்வேறு தரங்களில்பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தரத்திலும் அதிர்வெண் பண்பேற்றம் (frequency modulation) நுட்பம் குரல்...

குழந்தையை நேசித்தல்

படம்
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !! பிடித்த விளையாட்டு சாமான்களையோ பிடித்த உணவுப்பொருட்களையோ ... விலையுயர்ந்த ஆடைகளையோ குளிர் சாதன வசதி நிறைந்த வகுப்பறையின் நுழைவு சீட்டையோ வாங்கித்தருவது மட்டும் அல்ல ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !! சுயத்தை துறந்து தலையை குணிந்து முதுகுத்தண்டை வளைத்து நீங்களே ஒரு விளையாட்டு பொருளாக மாறுவது அவர்கள் ஏறி,இறங்கி ,தொங்கி விளையாட ஒரு மரமாக மாறுவது மரமாக மாறிய பின் கிளைகளின் நிழலில் அமரவைத்து அவர்கள் சொல்கிற கதைகளை எல்லாம் முடியும் வரை கேட்பது அவர்கள் கடிக்கும்போது இனிப்பாகவும் பிடிக்கும்போது கைக்குள் அடக்கமாகவும் மாறுவது ஒரு குழந்தையை நேசித்தல் என்பது நீங்கள் க்ற்றறிந்ததை ,தெரிந்ததை நல்லதை மட்டும் கற்றுக்கொடுப்பது அல்ல அவர்கள் க்ற்றுக்கொள்ள விரும்பும் ஒன்றை நீங்கள் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுப்பது ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !! உங்களின் குழந்தையை மட்டும் நேசித்தல் அல்ல ?? !! ..

அதிவேக இண்டர்நேர்ட்

அதிவேக இண்டர்நேர்ட் வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!! எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் ... தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோர...

மிகச்சரியாக பிரசவ காலத்தை கணக்கிடுவது எப்படி...?

படம்
மிகச்சரியாக பிரசவ காலத்தை கணக்கிடுவது எப்படி...? கர்ப்ப காலம்’ என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாதத்தீட்டு சுற்று இருக்கக்கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள் எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. ... குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, கடைசி மாத்தீட்டு ஜூன் மாதம் முதல் தேதியில் ஆரம்பித்திருந்தால், அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் ஜூன் எட்டாம் தேதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச் மாதம் வரும். ஆக, குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் தேதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட தேதியில் பிரசவிப்பார்கள். அறுபது சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட தேதியில் ஒரு வாரம் முன்னரோ அல்லது பின்னரோ பிரசவிப்பார்கள். கர்ப்பப்பையில் குழந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்....

காரில் பிரேக் பிடிக்காமல் போனால்

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன.....? எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது ... மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும். காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம். அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்...

'கம்ப்யூட்டர் ஆணா இல்ல பெண்ணா

படம்
'கம்ப்யூட்டர் ஆணா இல்ல பெண்ணா ஆசிரியர் ஒருவர் கணினி வகுப்பு நடத்தி கொண்டிருக்கும் போது திடிரென்று மாணவன் ஒருவன் எழுந்து, 'கம்ப்யூட்டர் ஆணா இல்ல பெண்ணா என்று கேட்டான். ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை. மொழி அகராதியிலும் இதற்கான விடை இல்லை. எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும் , மாணவிகளை இன்னொரு குழுவாகவும் பிரித்து,இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். நீங்கள் சொல்லும் விடையை நிருபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றார். இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து ... ஆராய்ச்சி செய்தது. பின்னர் மாணவியர் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது' என்றும், மாணவர்கள் அனைவரும்,'கம்ப்யூட்டர் ஒரு பெண்' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா??? மாணவியர் கூறிய விடை: கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை , 'பவர் ஆன்' செய்தல் வேண்டும் ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன , இருந்தாலும் கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை கம்ப்யூட்டர்கள் பிரச்ச...

மது ஏன் குடிக்க கூடாது......?

மது ஏன் குடிக்க கூடாது......? இனியாவது குடிப்பீர்களா..? மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை ... சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதி...

இயற்கை மருத்துவம்..!

இயற்கை மருத்துவம்..! சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது. மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று. உதாரணமாக, ... 1. பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும். 2. கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும். 3. மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது. 4. இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது. 5. கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது. 6. உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூலிகைகளைப் பயன் படுத்திய சித்த மருத்துவர்கள், அந்த மூலிகைப் பொருள்களுக்குச் சூட்டியுள்ள காரணப்பெயரே சான்றாகும்.

கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?''

படம்
கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் ... பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,'' என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான். அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான். கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில் இருக்கிறார். எனவே அந்த அருட்கொடையை தவற வ...

இந்தச் சிறுமி யார்?

படம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்? இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா. உண்மைதான், கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார். ... 14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது. தீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா? கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே…. இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்பிய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார். சூரிய சக்தியினைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கலன் உருவாக்குவதே அவரின் இலட்சியமாய் இருந்தது. தனது ஆசிரியர்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். அதில் அவர் வெ...

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்...!!

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்...!! 1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார் . 2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார். ... 3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார். 4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார். 5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால் , எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள். 6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில் , அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது . 7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார். உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார். 9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றி...

ஆண்கள் தினம்

ஆண் அழத் தெரியாதவன் அல்ல.. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.. அன்பில்லாதவன் அல்ல.. அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்.. ... வேலை தேடுபவன் அல்ல.. தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன். பணம் தேடுபவன் அல்ல.. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.. சிரிக்கத் தெரியாதவன் அல்ல.. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.. காதலைத் தேடுபவன் அல்ல.. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.. கரடுமுரடானவன் அல்ல.. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.. இன்று சர்வதேச ஆண்கள் தினம்

உங்களுக்கு என்ன நோய்?

படம்
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- 1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறத ... ு. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். 2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...? அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங...

பிறப்பு இறப்பு சான்றிதழ்

படம்
இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத ... ்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம். இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். அது போக...

இதை யோசித்தீர்களா?

இதை யோசித்தீர்களா? தங்கை : அண்ணா, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா? அண்ணன்: கேளேன்... தங்கை : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் ... எவ்வளவு சம்பாதிகிறீர்கள்? அண்ணன் : 1000 ரூபாய் ... தங்கை : அப்படீனா எனக்கு 50 ரூபாய் தாங்கண்ணா! அண்ணனுக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 ரூபாயை கொடுத்தான். தங்கை சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டாள் . அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தாள். அண்ணன்: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்? தங்கை: முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 1000 ரூபாய் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்கண்ணா உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும். அண்ணனுக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே தங்கையை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டி நீதி: "தன்னை நேசிப்பவர்களுக் கு காட்டப்படும் அன்பை வ...

மூட்டுத் தேய்மானம்: மாற்று வழி

மூட்டுத் தேய்மானம்: மாற்று வழி **************************************************** மூட்டுத் தேய்மானம் இன்று அதிகமாகக் காணப்படும் ஒரு பிரச்சினை. இதை Osteoarthritis அல்லது sandhigata vatam என்று அழைப்போம். முதுமை, உராய்வு, அதிக வேலை செய்வது போன்றவற்றால் மூட்டுகளில் தேய்வு நிலை உண்டாகிறது. மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் இடையே cartilage என்று சொல்லக்கூடிய ரப்பரைப் போன்ற ஒரு பொருள் உள்ளது. ஆயுர்வேதம் இதை ஸ்லேஷ்மதர கலை என்று அழைக்கிறது. இது இருப்பதால் ஓர் எலும்பின் மேல் மற்றொரு எலும்பு நகர்ந்து போக முடியும். இந்த cartilage என்ற எலும்புச் சவ்வு தேயும்போது எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயும். இதனால் வலி, வீக்கம், தசை இறுக்கம் போன்றவை உருவாகும். தேய்மானம் முற்றும்போது புதிய எலும்புகள் மூட்டைச் சுற்றி முளைக்கும். தசை நார்களும், தசைகளும் பலவீனம் அடையும். 50 வயதுக்கு மேல், இது அதிகமாகக் காணப்படும். சில குடும்பங்களில் மரபு சார்ந்து வரலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படலாம், இடுப்பு மூட்டு, கணுக்கால் மூட்டு, பாத மூட்டு, குதிகால் மூட்டுகள் தேய்வடையும். எலும்பு முறிந்தாலும் தேய்வட...