இடுகைகள்

ஈஸியான மருத்துவ குறிப்புகள்

படம்
பொதுவாக ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தாக்கினால் உடனே நாம் மருத்துவர்களை நாடுகிறோம். சில நேரங்களில் தலைசுற்றல் அல்லது வயிற்றுவலி போன்ற சில உடல் உபாதைகளுக்கு கூட மாத்திரை சாப்பிடுகிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானது என்ற உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் ரசாயன தன்மை மிகுந்த மாத்திரைகள் சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே வீட்டிலிருந்தபடியே சில மருத்துவ குறிப்புகளை நாம் தெரிந்து கொண்டு கையாள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எளிமையான சில மருத்துவ குறிப்புகள் * நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். * வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும். * மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும். * நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்ச...

கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கூலான மூலிகைகள்

படம்
கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கூலான மூலிகைகள் முடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரு ம் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு 100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதே அளவு வளர்வது இல்லை. குளிக் கும்போதோ, ஷாம்பு போடும்போ தோ, தலை வாரும்போதோ இதைப் பார்க்க முடியும். சிந்தாதுஷ்டி அதிகம் வந்தால் முடி உதிரும் என்பதைச் சரகர் கூறுகிறார். வழுக்கைத் தலையை alopecia என்பார்கள். ஆண்களுக்கு உருவாகும் ஒரு விதமான வழுக்கைக்கு androgenetic alopecia என்று பெயர். சில நேரம் புழுவெட்டு போல் ஏற்பட்டுக் கண் புருவம்கூட உதிர்ந்துவிடும். பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல் லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், ரேடியோ தெரபி, கீமோதெரபி எடுத்துக் கொள்ளும் போதும், இரு ம்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் காணப்படும். பொடுகு நோய் தாருணம் (seborrheic dermatitis) முடி உதிர்வதற்கு ஒரு காரணம். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும். ஆயுர்வேதத்தில் அஸ்த...

முள்ளங்கி

படம்
ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி முள்ளங்கியில் உள்ள சத்துகளையும் நல்ல விஷயங்களையும் பற்றி அறிந்தால், அது அத்தனை பேரின் உணவிலும் தினசரி இடம் பெறும் அவசியக்  காயாக மாறும். ‘‘வாசனை பிடிக்காமல் முள்ளங்கியை வெறுப்பவரா நீங்கள்? தலை முதல் கால் வரை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நன்மை  செய்கிற முள்ளங்கியை வாசனைக்காக ஒதுக்குவது எத்தனை பெரிய தவறு தெரியுமா?’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். ‘‘குறுக்கு வெட்டுக் காய்கறிகளில் முக்கியமானது முள்ளங்கி. வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் கொண்ட காய். இதிலுள்ள ஃபோலேட், நார்ச்சத்து,  தாதுச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகிய அனைத்தும் முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான விஷயங்களில் இருந்து  நம்மைக் காக்கக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடிய குணம் முள்ளங்கியில் உள்ளது. முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ  எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். மாவுச்சத்து இல்லாத காய் இது என்பது குறிப்பிடத் தக்கது. சாலட்டுகளில் சேர்க்கும் போது, ஒருவித காரத்  தன்மையுடன், நறுக்கென்ற ருசியை...

வாழைத் தண்டு ஜுஸ்

படம்
வாழைத் தண்டு ஜுஸ் நண்பர்களே! இப்போது சிறுநீரகக் கல் பிரச்சினை மிக அதிகமான அளவில் உள்ளது. இப்போது பெண்களுக்கும் அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தற்கால உணவு முறையிலுள்ள கோளாறுகள் தான். இது வந்தபின்பு ஓரளவு தடுக்கவும் என்றும் வராமல் தடுக்கவும் எளிய பயனுள்ள முறைகள் சிலவற்றில் முக்கியமானது வாழைத் தண்டு ஜுஸ். அதன் தயாரிப்பு முறை பின்வருமாறு…. ஒரு நபருக்கு சுமார் பத்து செ மீ நீளமுள்ள ஓரளவு கனமான வாழைத் தண்டு இருந்தால் போதுமானது. அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நாரை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு சிறிதளவு சீரகமும் சேர்த்து வேண்டுமளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவேண்டும். அரைத்ததை வடிகட்டியும் பிழிந்தும் ஜுஸாக எடுத்து அப்படியே சாப்படலாம். சீரகம் சேர்ப்பதால் மணமாகவும் இருக்கும். சீரகம் இல்லாமல் சாறு எடுத்து எலுமிச்சம் சாறும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து இனிப்புப் பானமாகவும் அருந்தலாம். இதை அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீரகக்கல் பிரச்சினை வரவே வராது. நோய் இல்லாதவர்களும் சாப்படலாம் மிகவும் நல்லது. நோயினால் துன்பப்படுவதைவிட அதற்கு சிகிச்சைசெய்து...

இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் -1

இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் -1 1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும். 5) தலைபாரம் நீக்கும் கிராம்பு கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும். 6) காயத்துக்கு காட்டாமணக்கு காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும். 7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும். 8)குழந்தையை காப்பான் கரிப்பான் கரிசாலைச் சாறு 2 துளியுடன்...

இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் -2

இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் -2 51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும். 52) புண்கள் ஆற தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும். 53) முடி உதிர்வதை தவிர்க்க நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். 54) கட்டிகள் உடைய சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும். 55) அண்ட வாத கட்டு பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும். 56) கண் பூ குணமாக சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும். 57) இரத்த மூத்திரத்திற்கு மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும். 58) இரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும். 59) அசீரணம் குணமாக கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும். ...

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

படம்
கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு த ுணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vinegar)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வற...

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்:-

படம்
தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்:- வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். 1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபால...

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்

படம்
நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ள ும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் ...

பேச்சுலர் to குடும்பஸ்தன்..

பேச்சுலர் to குடும்பஸ்தன்.. 1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள். 2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும். 3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள். 4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும். 5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது. 6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள். 7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள். 8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும். 9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள். 10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என...