குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..!
குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..! குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும். இந்த குதிகால் வெடிப்பைப் போக்க எத்தனை க்ரீம்கள் வந்தாலும், அவற்றால் முழுமையான தீர்வைப் பெற முடியாது. ஆனால், இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம். ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின் : கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடி...