நலங்கு பாடல் - என்ன விலை அழகே


’என்’ எழுத்து இகழேல்

Posted: 02 Oct 2009 05:05 AM PDT


என் மகளின் ஆறாவது வயதில் காது குத்தியதற்கு வைத்த நலங்குக்காக எழுதிய பாடல்.

லாஃபிராமா மயிலே
நல்ல மலரை சூடி வருவாய்
மலர் மணத்தை நீயும் தருவாய்
என் மகளை கண்டு வியந்து போகிறேன் - நான்
நலங்கை பார்த்து பாடல் பாடினேன்!

தவத்தால் கிடைத்த மணியே
மலைத்தேன் அதனின் சுவையே
முகத்தில் சிரிப்பும் இனிய கனவும்
உன்னிடம் சேர்ந்தது என் விழி பார்த்தது
தினமும் தினமும் இனிமை தொடர
தித்திக்கும் மலைத்தேன் நீ
வீட்டுக்கும் நீ ராணி!

இனியென்றும் வரும் வெற்றியே
இருளுடன் செல்லும் தோல்வியே
ஒளிவட்டம் கொண்ட வாழ்வினில்
உயிர்வரை நெஞ்சம் இனிக்குதே!

மம்மியும் டாடியும் அன்று, பண்ணிய துவாவில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று லாஃபிரா....
உன் வாழ்வுக்கில்லை ஈடு! (லாஃபிராமா மயிலே)

இறையின் அருளை பெற்று
நபியின் வழியில் நடந்து
மறையை தினமும் உவந்து படிக்கும்
மதிமுகம் நீயே தான் மாணிக்க கல்லே தான்
நெறியின் முறையில் உயிரின் வரையில்
உண்டாகும் உன் நேசம் மாறாத பூ வாசம்...

கரும்பென கண்ணே இனிக்கிறாய்
வரும்வழி வாசம் தருகிறாய்...
நிலவொளி மின்ன ஜொலிக்கிறாய்
நிறைவுடன் நீயும் சிரிக்கிறாய்!

கண்கண்ட தேவதையென
பட்டெனும் மாணிக்க வண்ண
ஆடையில் கண்மணி மின்ன,
லாஃபிரா உன் அழகுக்கில்லை ஈடு! (லாஃபிராமா மயிலே)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல்
மெளனமாகிறேன்.

படைத்தான் இறைவன் உனையே,
மலைத்தான் உடனே அவனே.
அழகை படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது,
என் விழி சேர்ந்தது.
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீனை உன் மேனி,
வீன்தட்டும் என் மேனி.
விரைவினில் வந்து கலந்திடு,
விரல் பட மெல்ல கனிந்திடு.
உடல் மட்டும் இங்கு கிடக்குது,
உடன் வந்து நீயும் உயிர் கொடு.

பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று சிலையே.
உந்தன் அழகுக்கில்லை ஈடு.
(என்ன விலை அழகே?)

உயிரே உனையே நினைந்து,
விழிநீர் மழையில் நனைந்து,
இமையில் இருக்கும் இரவு உறக்கம்,
கண் விட்டு போயாச்சு,
காரணம் நீயாச்சு.
நிலவு எரிக்க,
நினைவு கொதிக்க,
ஆராத நெஞ்சாச்சு,
ஆகாரம் நஞ்சாச்சு.
தினம் தினம் உனை நினைக்கிறேன்,
துரும்பென உடல் இளைக்கிறேன்.
உயிர் கொண்டு வரும் பதுமையே,
உனைவிட இல்லை புதுமையே.

உன் புகழ் வையமும் சொல்ல,
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் விக்குது மெல்ல உயிரே.
உனை நானும் சேரும் நாள் தான்.
(என்ன விலை அழகே?)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!