மனைவியை மயக்குவது எப்படி?
மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே! கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!! ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!! இது ஆண்களுக்கு மட்டும். மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்! 1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு ‘உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!’ என்ன சரியா? 2. மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்! காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க. 3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட...

கருத்துகள்