அரபு சீமையிலே... - 15


Posted: 09 Feb 2010 05:14 AM PST
இஸ்லாத்தைத் தான் ஏற்காத போதும்,
இன்முக சிறுதந்தை அபூதாலிப் அவர்கள்,
முரணாய் பேசிய மக்களிடமிருந்து,
அரணாய் காத்தார் நபிகள் தன்னை!!

அபூலஹப் மக்கள்
உத்பா, உதைபா,
நபியின் புதல்விகள்
ருகையா, உம்மு குல்தூம்
இவர்களை மணமுடித்திருக்க,

தீனின் மீது கொண்ட வெறுப்பால்
ஆணையிட்டார் மணவிலக்களிக்க!!

எண்ணரும் துன்பங்கள்
எல்லையின்றி தொடர்ந்தாலும்,
கண்ணென நபிகள்
காத்தார் தீனை!!

அண்ணல்நபிகளுக்களித்து வந்த கொடுமை
அளவில்லாமல் பெருக,
அடித்தும் படித்தும்
துடித்திட வைத்தும்,
உடலுக்கு நோவினையும்
மனதுக்கு வேதனையும்
வரையின்றி தந்தனர்!
குறையின்றி ஈந்தனர்!!

இந்நாள் மதினா,
அந்நாள் யத்ரிபு
மக்கள் சிலரும் மக்கா ஏகி
தக்கசன்மார்க்கத்தை
தலையால் ஏற்றனர்!!

எதிர்ப்பு அதிகப்பட
தீன் வளர்ந்தது!
ஏளனம் செய்யசெய்ய,
பாரெங்கும் பரவுது!!

அபூ ஜஹல் என்னும்
அறிவீனத்தந்தை
அளப்பரும் கொடுமைகள்
பலப்பல செய்தான்!

அண்ணல் பெருமானுக்கு
ஆதரவு ஒரு புறம்
ஆல்போல தழைக்க,
எதிர்ப்பெனும் விருட்சமும்
வேகமாய் வளர்ந்தது!

இஸ்லாத்தை தழுவி,
முஸ்லிமாக மாறிய,
சாதாரண மக்களும்
வேதனை பெற்றனர்,
சேதாரம் தாண்டிய
வேள்வியில் வென்றனர்!!

அத்தகைய ஒருவரே
சத்தியர் பிலால் – அவர்தம்
எசமானர் தன்னிடம்
வசமாக மாட்டினார்...
கழுத்தில் கட்டிய வன்கயிற்றால்
ரத்தம் வழிந்தோடும்!
எழுத்தில் வடிக்க இயலா இன்னலால்
குருதியும் தேய்ந்தோடும்!!

(வளரும்)

(பெருமானார் பெயர் வரும் இடங்களில் சலவாத் ஓதிக் கொள்ளுங்கள்)

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!