வெளிநாடுவாழ் இந்தியரின் ஏக்கம் ...


வெளிநாடுவாழ் இந்தியரின் ஏக்கம் ...
"கல்யாணம் பண்ணிப்பார்" "புது வீடு கட்டிப்பார்"
அப்பிடியே இதையும் சேத்துக்கோங்க
"வெளிநாடு வந்துப்பார்"
பாக்குறதுக்குத்தான் ஆடம்பரம் ஆனா இது ஒரு மாய வலை! சந்தோஷமா உள்ளையும் இருக்க முடியாது
வேணாம்னா வெளியவும் போக முடியாது....
நல்லது, கெட்டது பிறப்பு, இறப்பு வரவு, செலவு
இதெல்லாம் ஒரே ஒரு தொலைபேசி அழைப்போடு முடிஞ்சிரும்.
வலிக்கும் ஆனா சொல்ல முடியாது
அப்பிடியே சொன்னாலும் யாருக்கும் புரியாது...
புரிஞ்சுக்கவும் மாட்டாங்க,அழுவோம் ஆனா யாருக்கும் தெரியாது.. ஏன்னா இங்க பாக்குறதுக்கு யாரும் இருக்க மாட்டாங்க....
வலின்னா தோள் சாயவும் சரி..
சந்தோஷம்னா அணைக்கவும் சரி...
கண் எட்டும் தூரம் வரை தனிமை மட்டும் தான் மிஞ்சும்.
நன்றாக பசிக்கும் நிறைய சாப்பிடவும் செய்வோம்
ஆனா வயிறு நிறையாது....
ஏன்னா எங்கையாவது ஒரு மூலையில ஒரு விதமான ஏக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்.....
நியாயமா பாத்தா ஊர்ல இருந்துதான் நமக்கு யாராவது ஃபோன் பண்ணி விசாரிக்கணும், ஆனா அப்பிடி யாரும் கூப்பிட போறதில்லைன்னும் தெரியும்....
தெரிஞ்சும் யாராவது விசாரிக்கமாட்டாங்களான்னு ஏக்கம் இருந்திட்டே இருக்கும்....
ஆனா குடும்பத்துல யாருக்காவது ஒருத்தருக்கு 2 வாரம் நாம ஃபோன் பண்ணாம, பண்ணிபாருங்க
நம்ம கிட்ட கேப்பாங்க பாருங்க.....
"என்னப்பா வெளிநாடு போன உடனே எங்களையெல்லாம் மறந்திட்ட போல"
அப்பவும் இங்கிருந்து சிரிச்சிக்கிட்டே பதில் சொல்லணும்!!
"உள்ளுக்குள் காயங்கள் உண்டு...
அதை நான் மறைக்கிறேன்...
ஊருக்கு ஆனந்தம் குடுக்க..
வெளியே சிரிக்கிறேன்"...
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா
ம்ஹூம் ஏன்னு தெரில
சும்மா சொல்லணும் போல தோணிச்சு
சிரிச்சிக்கிட்டே ஸ்மைலி..!!
--------------------------------------------வெளிநாட்டு வாழ் தமிழர் (நன்றி )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!