வியாபாரத் தந்திரம்!




சந்தையில் நெல்லிக்கனிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான் ரவி. அவன் முன்னே நான்கு மூட்டை நெல்லிக்கனிகள் இருந்தன.
ஆரம்பத்தில் மூட்டையிலுள்ள நெல்லிக் கனிகள் எல்லாம் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. நேரம் செல்ல, செல்ல அவனது வியாபாரத்தில் மந்தநிலை உருவானது. அதனை நினைத்துக் கவலையடைந்தான் ரவி.
"இன்று வழக்கத்திற்கு மாறாகச் சந்தையில் நல்ல கூட்டம் இருக்கிறது. ஆனால், என் நெல்லிக்கனிகள் விறுவிறுப்பாக வியாபாரம் ஆக வில்லையே...' என்று கவலையடைந்தான்.
ரவியின் எதிர் கடையில் சேகர் இருந்தான். அவன் தன்னிடம் உள்ள நெல்லிக் கனிகளை எல்லாம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் விற்பனை செய்து கொண்டிருந்தான்.
"நெல்லிக்கனியை நம்மிடம் ஒருவர் கூட வாங்க வரவில்லையே. எல்லாரும் சேகரின் கடையிலேயே வாங்குகிறார்களே. என்ன காரணமாக இருக்கும்? இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்' என்று நினைத்தான் ரவி.
உடனே கடையை விட்டு வெளியே வந்தான். எதிரே சேகரின் கடையில் இருந்து வாடிக்கையாளர்கள் நெல்லிக் கனிகளை வாங்கிச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.
""நீங்கள் எல்லாரும் அந்தக் கடையில் இருந்தே நெல்லிக் கனிகளை வாங்கிச் செல்கிறீர்களே... நான் எதிர்க்கடையில் தானே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். யாருமே என்னிடம் வந்து வாங்காமல் செல்கிறீர்களே. உங்களை நம்பித்தானே நான் வியாபாரம் செய்கிறேன்,'' என்று கவலையுடன் கூறினான் ரவி.
""இதோ பாரப்பா, சந்தையின் நுழைவு வாசல் அருகிலேயே நீ தரக் குறைவான நெல்லிக்கனிகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறாய் என்று, எங்களைப் போன்ற இரண்டு வாடிக்கையாளர்கள் தெரியப் படுத்தினர். அதனால்தான், நாங்கள் எல்லாரும் உன்னிடம் நெல்லிக்கனிகளை வாங்காமல், எதிர் கடையில் வாங்கிச் செல்கிறோம்,'' என்றனர்.
திடுக்கிட்டான் ரவி. உடனே வேகமாக சந்தையின் வாசற்புரத்தை நோக்கி ஓடினான்.
அங்கு இரு இளைஞர்கள் நின்று வாடிக்கையாளர்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த ரவி, அருகில் மெதுவாக நெருங்கி அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காது கொடுத்துக் கேட்டான்.
சற்று நேரத்திற்கு முன்னர் அவன் சந்தித்த வாடிக்கையாளர்கள் சொன்னது போன்றே, அந்த இரண்டு இளைஞர்களும் சொல்லிக் கொண்டிருந்தனர். உடனே அந்த இளைஞர்களின் சட்டையைப் பற்றி இழுத்தான் ரவி.
""எதற்காக நீங்கள் இருவரும் என்னுடைய வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்? உங்களை இப்படி சொல்லச் சொன்னது யார்?'' என்று கேட்டான்.
அந்த இரண்டு இளைஞர்களும் ரவியின் கைகளை தட்டிவிட்டனர். "சேகர்தான் எங்களை இப்படிச் சொல்லச் சொன்னார். சந்தையில் கூட்டம் குறையும் வரையிலும் இவ்வாறு சொன்னால் ஆளுக்கு நூறு ரூபாய் தருவதாகக் கூறினார்' என்றனர்.
ரவி சிறிது நேரம் யோசனை செய்தான். பின்னர் அந்த இளைஞர்களைப் பார்த்தான்.
""இளைஞர்களே, நான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன். நான் சொன்னபடி நீங்கள் செய்வீர்களா?'' என்று கேட்டான் ரவி.
""எங்களுக்குத் தேவை பணம்தான். நீங்கள் பணம் கொடுத்தால் நாங்கள் எதுவானாலும் செய்வோம்,'' என்றனர் இளைஞர்கள்.
""அப்படியானால் உங்கள் காதுகளில் நான் ஒன்றை ரகசியமாக சொல்கிறேன். நீங்கள் அதனை செய்து முடித்து விட்டு என்னிடம் வாருங்கள்,'' என்றான் ரவி.
உடனே ரவி, அவர்கள் காதில் ரகசியமாக ஏதோ கூறினான். அதைக்கேட்டு அந்த இரண்டு இளைஞர்களும் தலையாட்டிக் கொண்டனர்.
அவர்கள் இருவரும் வேகமாக சந்தையின் உள்ளே நுழைந்தனர். மின்னல் வேகத்தில் சேகரின் கடையை நோக்கிச் சென்றனர். கடையில் இருந்த நெல்லிக்கனி மூட்டைகளை எல்லாம் சந்தையை விட்டு வெளியே தூக்கி யெறிந்தனர்.
அதைக் கண்டு பதறினான் சேகர்.
""உங்களுக்கு என்னாயிற்று, எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என் கடையில் உள்ள பொருட்களை எல்லாம் வீசியெறிகிறீர்களே...'' என்றான்.
உடனே அந்த இரண்டு இளைஞர்களும் சேகரின் அருகில் வந்தனர்.
""இதோ பாரய்யா, கடையில் உள்ள பொருட்களை மட்டும் வீச மாட்டோம். உன்னையும் சேர்த்து வீசுவோம்,'' என்று கூறியபடி சேகரைப் பிடித்து சந்தையின் வெளியே வீசியெறிந்தனர்.
அந்த அதிரடித் தாக்குதலால் நிலை தடுமாறினான் சேகர். அப்போது, சேகர் அருகே வந்தான் ரவி.
""சேகர், நீ பணத்தைக் கொடுத்து என் வியாபாரத்தைக் கெடுக்கும்படியாக அந்த இரண்டு இளைஞர்களிடம் கூறினாய். நானும் அதே பணத்தால் அந்த இளைஞர்களை வளைத்து உனக்குப் பதிலடி கொடுத்து விட்டேன். வியாபாரத்தில் போட்டி இருக்க வேண்டியதுதான். ஆனால், அதுவே பொறாமையாக மாறியதால் வந்த வினை இது,'' என்றான்.
தவறை உணர்ந்து தலைகுனிந்தான் சேகர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!