இடுகைகள்

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 17 Posted: 13 Mar 2010 07:37 PM PST அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல் பெருமதிப்பு கொண்டிருந்தனர். அவர்பொருட்டு, தம்முயிரையும் ஆசையுடன் தரத்துடித்தனர். அத்தகைய தோழரொருவர் அர்க்கம்; என்றும் நாடினார் சொர்க்கம்! சபா குன்றின் மேலிருந்த தம் மாளிகையை நபிகளுக்கு செய்தார் தத்தம்! அவர் பதினெட்டு வயது மக்ஜூமி கோத்திரத்தாரே! அதே கோத்திரத்து அபூஜஹலும் தறிகெட்டு மதிகெட்டு ஆத்திரத்தால் கொக்கரித்தானே!! அர்க்கமின் மாளிகையில் சொர்க்கத்தைத் தேடி சர்க்குண மார்க்கத்தின் தொழுகை நடந்தது; இறையை நோக்கி, அழுகை புரிந்தது! தாருஸ்ஸலாம் என்று அது பேரும் பெற்றது! சாந்தி மாளிகையில், சாந்தம் தவழ்ந்தது!! கொக்கரித்த அபூஜஹல், தாருல் நத்வாவில் கூடினான்! கட்டிளங்காளையர் பலரைக் கூட்டினான்! நபிகளுக்கு எதிராக ஒரு வேள்வியை மூட்டினான்!! விலை வைத்தான் நபிகள் தலைக்கு! உலை வைத்தான் முஸ்லிம்கள் நிம்மதிக்கு!! நூறு ஒட்டகை தருவேனென்று தத்தம் செய்தான். பேரும் புகழும் தமக்கே என்று சத்தம் செய்தான். உமர் இப்னு கத்தாப் என்னும் முப்பத்திமூன்று வயது இளவல் ஒருவர் அப்பக்...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் காதலென்னும் தனிசுகம் Posted: 09 Aug 2012 01:54 PM PDT ஆசையெல்லாம் ஒன்றாகிப் பெண் வடிவம் எடுத்துவர நேசமெல்லாம் நிறைவாகி கண் இமையில் கனவு தர பாசவெள்ளம் கரைதொட்டு கண்மாயைத் தகர்த்துவிட தாசனுந்தன் தாள்பணியப் பேரின்பப் பரவசமே! கண்பார்க்கும் காட்சியெல்லாம் உன்னுருவாய் நான் பார்க்க பெண் இங்கே பேதையென மதிமயங்கித் தள்ளாட கன்னத்தின் செஞ்சிவப்பு நாணத்தின் மறு உருவாய் அன்பன் உந்தன் கைசேர முகம் காட்டும் நவரசமே! சாந்தி கொண்ட மனம் உந்தன் வருகைக்கு வழிபார்க்க பாந்தமாக அலங்கரித்து பதி மனதை எதிர்நோக்க ஏந்திழையாள் எண்ணம் போல என்னருகே நீயும்வர காந்தமென ஒட்டிக் கொள்ள காதலென்றும் தனிசுகமே! பார்த்த விழி பூத்திடாமல் பாதையில் நீ இணைந்திருக்க சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் செங்கரும்பாய் இனிமை தர ஆத்தங்கரை மேட்டினிலே ஆலமர நிழலினிலே பூத்திருக்கும் பூவைப்போல பூவை மனம் விரிந்திடுமே!!! - சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நான் எழுத்தாளராகி சம்பாதிக்க முடியுமா? Posted: 30 Jul 2012 01:41 AM PDT நான் எழுத்தாளராக முடியுமா? அப்படி ஆனால் சம்பாதிக்க முடியுமா? என் எழுத்துக்களை மக்கள் ரசிப்பார்களா? இவை உங்கள் கேள்விகள் என்றால் முடியும், ஆம் என்று தான் சொல்வேன். ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி ஆரம்பம் செய்வது என்று தெரியவில்லையா? நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி எழுதினாலே போதும். உதாரணமாக, தலையை உயர்த்திப் பாருங்கள். கடிகாரம் தெரிகிறதா? இப்போது அதைப் பற்றி எழுதுங்கள். அதாவது, குறைந்த நேரத்தில் அதிக வேலையை முடிப்பது பற்றி எழுதுங்கள். உங்கள் தலைப்பை வைத்து, ஏன், எப்படி, எதற்கு, யாருக்கு, எவ்வாறு போன்ற கேள்விகளை உருவாக்கினால் அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஒரு நல்ல கட்டுரையைத் தந்து விடும். சரி எழுதிவிட்டீர்கள். அதை எப்படி பிரபலப்படுத்துவது? அதனால் என்ன பயன்? அதில் எப்படி சம்பாதிப்பது? அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வீதி.காமில் உங்கள் எழுத்துக்கு பணம் தந்து உற்சாகப்படுத்துகிறார்கள். சுலபமாக அதே சமயம் நன்றாக எழுதுவது எப்பட...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...... Posted: 25 Jul 2012 09:43 AM PDT சின்ன வயசுல மணலில வீடு கட்டி விளையாடாதவங்க யாரு இருக்க முடியும். இப்பவும் நான் மணலைப் பார்த்தா விளையாட ஆரம்பித்து விடுவேன். இப்படித்தான் கொச்சி போயிருந்தப்ப ஃபோர்ட் கொச்சியில் ஈர மணலைப் பார்த்ததும் உட்கார்ந்துவிட்டேன். என் மகள் மற்றும் மகனுடன் போட்டி போட்டுக் கொண்டு யார் அழகாக மணலில் சிற்பம் செய்றாங்கன்னு பார்க்கலாம் என்றேன். என்னவர் சரி நான் தீர்ப்பு சொல்கிறேன் என்றார். மூவரும் அவரவர் வயதுக்கு தக்கபடி உருவாக்கினோம். பள்ளி நாட்களின் ஞாபகம் என் கண் முன்னால் தோன்றியதால் பள்ளிச் சீருடையை நான் மணலில் உருவாக்கினேன். குழந்தைகளோடு குழந்தையாகிப் போனேன். இதோ அந்த மணல் சிற்பம். என் மகள் மிக்கி மவுஸும் என் மகன் மலையும் உருவாக்கினார்கள். மகனுக்கே ஜெயம் ஏனென்றால், நாங்கள் ஒரு முறை சிற்பம் செய்வதற்குள் அவன் அழித்து அழித்து ஐந்தாறு முறை கட்டிவிட்டான். ஆக அவனுடைய முயற்சிக்கு அங்கீகாரம் தர வேண்டுமல்லவா? மேலும் விவரங்களும் புகைப்படங்களும் இங்கே: Art of Growing Hill...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் வீட்டில் பாம்பு Posted: 23 Jul 2012 12:40 PM PDT நேற்று இரவு சுமார் ஒரு மணி இருக்கும் ஐந்து அடி நீள நாகப்பாம்பு எங்க வீட்டு கிட்சனுக்குள். எதேச்சையாக தண்ணீர் குடிக்கப் போன என்னவர் அதைப் பார்த்து விட்டு அலற, கம்பு, தடி சகிதம் பயந்து நடுங்கியபடி மெதுவாக அடி மேல் அடி வைத்து அதை நெருங்கினோம். வெங்காயக் கூடையின் நடுவே ஒளிந்திருந்தது. நாகத்தை துரத்திவிட நாங்கள் செய்த முயற்சி எல்லாம் தோற்றுவிட கடைசியாக ஒன்னரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அதை அடித்துவிட்டோம். படம் எடுத்து ஆடும் பாம்பை முதன் முறையாக மிக அருகில் பார்த்தும் அதன் சீறும் சப்தத்தைக் கேட்டும் வெலவெலத்துப் போனேன். சொட்டும் வேர்வையோடு அதை வேட்டையாடிய பெருமித உணர்வுடன் மச்சான் செத்த பாம்பை தடியில் ஏந்திக் கொண்டிருக்கிறார். மேலும் விவரங்கள் மற்றும் படங்கள்: Snake In My House - சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may ...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் உங்கள் எழுத்துக்குப் பணம் வேண்டுமா? Posted: 16 Jun 2012 07:08 AM PDT கடைசியாக பதிவிட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. பலப்பல மின்னஞ்சல்கள் பதிவிடக்கோரி. குறிப்பாக நிஜாம் அண்ணனுக்கு என் நன்றிகள். என் இனிய வாசகர்களை நான் இழந்துவிட்டது வருத்தம் தான். பலரும் நான் ஆசிரியைப் பணியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் இருப்பது எழுத்துத் துறையில் தான். அதுவும் இணையத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் அல்ல ஆங்கிலத்தில். இசையில் ரசனையுள்ளவர்கள் இசையமைப்பாளர்களாகும் போது கரும்பு தின்ன கூலி கிடைப்பது போல மனமகிழ்வுடன் பணமும் கிடைக்குமே அதுபோல இப்போது என் பணி, என் மூச்சு, என் பொழுதுபோக்கு, ஏன் என் வாழ்க்கையே எழுதுவது என்று ஆகிவிட்டது. அதுவும், சாமானிய இந்தியர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு வருமானத்துடன்…. ஆர்வமுள்ள யாவரும் பணம் சம்பாதிக்கலாம் இத்துறையில். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற துறை இது. திறமை மட்டும் இருந்தால் போதும், திறம்பட செயல்புரியலாம். நான் ஒரு ஃப்ரீலான்சராகத் தான் என் எழ...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா? - 2 Posted: 03 Mar 2011 03:17 AM PST காப்பியடிப்பதால் என்ன தீங்குகள் விளையும் என்று தெரிந்து கொண்டால் இணையத்தில் யாரும் யாருடைய குறிப்புகளையும் காப்பியடிக்க மாட்டார்கள். ஏன் ஒவ்வொரு தளமும் தனக்கென் தனியான உள்ளடக்கத்தை எழுத வேண்டும்? உள்ளடக்கம் எழுத வேண்டும் என்றால் நிச்சயமாக பணம் செலவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு தளத்தில் இரவு உடைகள் விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இரவு உடைகளைப் பற்றிய செய்திகளையும் நன்மைகளையும் அத்தளத்தில் பட்டியலிட்டிருப்பார்கள். அதை அவர்கள் இன்னொரு தளத்தில் இருந்தே எடுத்திருக்கலாமே? ஏன் தனக்கெனத் தனியாக ஒன்று நேரமும் பொருளும் செலவு செய்து உருவாக்க வேண்டும்? Uniqueness எனப்படும் தனித்தன்மை இருந்தால் மட்டுமே இணையத்தில் வெற்றி காண முடியும். உங்கள் தளத்தின் மதிப்பு இந்த தனித்தன்மையைக் கொண்டு தான் அளவிடப்படுகின்றது. ஒரு தளத்தை நாம் பார்வையிட வேண்டுமென்றால் அதற்குரிய கீ வோர்ட்ஸ் எனப்படும் சாவிச்சொற்களை கூகுளில் உள்ளீடு செய்வோம். உதாரணமாக நாம் சமைய...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா? Posted: 01 Mar 2011 08:01 AM PST பலரும் தங்கள் தளத்தின் இடுகைகளை அடுத்தவர் காப்பியடிக்கிறார்கள் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறுவார்கள். அதைத் தடுக்க ஒரு சில வழிகளை ஒரு சில கையாண்டாலும் காப்பியடிப்பது என்னவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இதுவும். ஆனால், காப்பியடிக்கப்படும் தளத்துக்கு சில நன்மைகள் உண்டு. அதே போல காப்பியடித்ததை வெளியிடும் தளத்துக்கு சில தீங்குகளும் உண்டு. இதை உணர்ந்து கொண்டால், 'ஐயோ என் சமையல் குறிப்பை காப்பியடிச்சிட்டாங்க', 'ஐயோ என் படத்தைக் காப்பியடிச்சிட்டாங்க' என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வலையுலகம் எவ்வாரு இயங்குகிறது என்று சற்று அடிப்படையில் இருந்து பார்த்தால் தான் புரியும். பொதுவாக இன்று உலகமே நெட் மூலமாகத் தான் இயங்குகின்றது என்று எளிதில் கூறிவிடலாம். அதுவும் மேலை நாடுகளில் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் காரைப் பார்க...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 25 Posted: 01 Nov 2010 10:10 AM PDT பத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில் பசுந்தானியம் விளையும் பழத்தோட்டங்களும் கனிந்த பேரிச்சையும் தெளிந்த நீரோடையும் நிறைந்த யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள் குழுமினர். மினாவுக்கு அருகில் அவர்தம் கூடாரம் – சென்று நபிகளார் செய்தார் பிரச்சாரம். நல்லொழுக்க மக்கள் பலர் முன்னொழுகி வந்ததனால் மார்க்கமருகி போனது, தீர்க்கதரிசி ஏற்றது! பூசல் பிணக்கு ஒழிந்திட வாசலாக அமைந்தது! நாசவேலை குறைந்திட நாளும் பொழுதும் பிறந்தது!! அவ்ஸ், கஸ்ரஜ் என்று கோத்திரம் இரண்டு! கோத்திரத்துக்குள்ளே சாத்திரம் நூறு!! – அதனால் ஆத்திரம் பலமடங்கு! சாத்தியம் உணர்ந்து நபிகள்(ஸல்) சாதகமாக்க, வேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது! அஸ்அத், அவ்பு, ரபீஆ, குத்பா, உத்பா, ஜாபிர் என அறுவரும் இஸ்லாத்தை பெறுவராய், எடுத்துவைத்த தூதுவத்தை நபிகளாரின் மாதவத்தார், சிரமேற்றுக் கொண்டார்கள்; பெருவாழ்வு கண்டார்கள்! அடியொற்றி பலரும் இ...