தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்,


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்,


மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர். இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, தினமும் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ளுங்களேன்...
கெட்ட கொலஸ்ட்ரால் ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
"தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், எந்த நோயும் அண்டாது", என்று வழக்கத்தில் சொல்லுவதுண்டு. அது நிச்சயமாக பச்சை ஆப்பிளுக்குக் கூட உண்மையாகின்றது. இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். ஆப்பிள்களில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள்கள் என்று வரும் போது, பல்வேறு வகையான ஆப்பிள்கள் உள்ளன. சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். பச்சை ஆப்பிள் தான் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே இப்போது அந்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால், கிடைக்கும் உடல்நல நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
உயர் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. அதனால் தான் தோலுடன் ஆப்பிளை சாப்பிடுங்கள் என்று எப்போதும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். மேலும் குடல்கள் மற்றும் இதர அமைப்புகள் எந்த அளவில் சுத்தமாக இருக்கின்றனவோ, அந்த அளவில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!